district news | பைக்-லாரி மோதல் ஒருவர் பரிதாப பலி | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக்-லாரி மோதல் ஒருவர் பரிதாப பலி

Added : செப் 13, 2012
Advertisement

பெரம்பலூர்: டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். படுகாயமடைந்த நான்கு பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் தோப்புத்தெருவைச் சேர்ந்த ரகமத்துல்லா மகன் ஷேக்முகமது, 21, இவர் நேற்று முன்தினம் இரவு, 8.30 மணியளவில், தனது ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் ப்ளஸ் பைக்கில், தனது உடன்பிறந்தவர்களான ஷர்மிளாபேகம், 25, மன்சூர்அலி, 16, ஆகியோருடன் பெரம்பலூருக்கு சென்றுக்கொண்டிருந்தார்.பைக் குரும்பலூருக்கும், பாளையத்துக்கு இடையே உள்ள பாலம் அருகே வந்தபோது, துறையூரிலிருந்து, பெரம்பலூர் நோக்கி வந்த அசோக் லைலேண்ட் லாரி எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய ஷேக்முகமதின் பைக், எதிரே பெரம்பலூரிலிருந்து குரும்பலூர் நோக்கி வந்த மற்றொரு ஹீரோ ஹோண்டா பைக் மீது வேகமாக மோதியது.
இதில் ஷர்மிளாபேகம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். மேலும் படுகாயமடைந்த மன்சூர்அலி, ஷேக்முகமது, மற்றொரு பைக்கில் வந்த குரும்பலூரைச் சேர்ந்த அர்ச்சுனன் மகன் ராஜா, மகாதேவன், 64 ஆகிய நான்கு பேரும் படுகாயமடைந்தனர்.தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் விபத்துக்குள்ளானவர்களை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து ஷேக்முகமது கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சர்புதீன் வழக்கு பதிவு செய்து, கரூர் மாவட்டம் ஐநூற்றுமங்கலம் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் ஞானபண்டிதரை, 35, கைது செய்து விசாரிக்கிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X