Advertisement
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியிலும் துவங்கி விட்டது வாரிசு அரசியல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

ஐதராபாத்: தெலுங்கு தேசம் கட்சியிலும், வாரிசு அரசியல் துவங்கி விட்டது. அந்தக் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மகன், நரா லோகேஷ், விரைவில் கட்சியில் முக்கிய பொறுப்பை ஏற்க உள்ளார் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் கட்சியில் வாரிசு அரசியல் என்பது, நீண்ட காலமாக தொடர்கிறது. அதேபோல், தமிழகத்தில், தி.மு.க.,விலும், உ.பி., மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியிலும் வாரிசு அரசியல் உள்ளது. இந்தக் கட்சிகளின் தலைவர்களின் மகன்கள், அரசியலில் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது, ஆந்திர மாநிலத்தில், எதிர்க்கட்சியாக உள்ள தெலுங்கு தேசம் கட்சியிலும், வாரிசு அரசியல் துவங்கி விட்டது. முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் மகன், நரா லோகேஷ், கட்சியில் விரைவில் முக்கிய பொறுப்பை ஏற்க உள்ளார் என, அந்தக் கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன.


இதற்கேற்ற வகையில், சமீபத்தில், திருப்பதியில் நிருபர்களிடம் பேசிய, நரா லோகேஷ் கூறியதாவது: ஆந்திராவில், 2014ல் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி, நிச்சயம் ஆட்சிக்கு வரும். ஆந்திராவில், தற்போது மக்களின் நலனுக்காக போராடக்கூடிய ஒரே கட்சி, தெலுங்கு தேசம் மட்டுமே. காங்கிரசுக்கு, சரியான மாற்றுக் கட்சி தெலுங்கு தேசமே. காங்கிரசை எதிர்கொள்ளும் திறன், தெலுங்கு தேசத்திற்கு மட்டுமே உண்டு. சிரஞ்சீவியின், "பிரஜா ராஜ்யம்' கட்சியைப் போல, மற்ற கட்சிகள் (ஜெகன் மோகன் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்) எல்லாம், காங்கிரஸ் கட்சியில் இணைந்து விடும். என் தந்தையான சந்திரபாபு நாயுடு, காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி முதல், 117 நாட்களுக்கு பாத யாத்திரை ஒன்றைத் துவக்கவுள்ளார்.


பாத யாத்திரை: மொத்தம், 2,320 தூரத்திற்கு மேற்கொள்ளவுள்ள இந்த பாத யாத்திரையின் போது, விவசாயிகளைச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிய உள்ளார். இவ்வாறு லோகேஷ் கூறினார். லோகேஷின் இந்தப் பேட்டி மூலம், அவர் விரைவில், தெலுங்கு தேசம் கட்சியில், முக்கிய பொறுப்பில் நியமிக்கப்படலாம் என்ற வதந்திகள் கிளம்பியுள்ளன. மேலும், நாயுடு பாத யாத்திரை மேற்கொள்ளவுள்ள, நான்கு மாத காலத்திலும், கட்சி விவகாரங்களை லோகேஷ் கவனிப்பார் என்றும், தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் கூறியுள்ளனர்.


வாரிசு: "அடுத்த தேர்தலில் போட்டியிடப் போகிறீர்களா?' என்ற கேள்விக்கு, லோகேஷ் நேரடியாக பதில் அளிக்க மறுத்து விட்டாலும், கடந்த சில ஆண்டுகளாவே, அவரை தன் வாரிசாக, சந்திரபாபு நாயுடு முன் நிறுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், "தெலுங்கு தேசம் கட்சியின் இளைஞர் அணித் தலைவராக, லோகேஷை நியமிக்க வேண்டும்' என்றும், அந்தக் கட்சியின் தலைவர்களில் சிலர் கோரி வருகின்றனர். அதனால், ஆந்திராவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கு முன், தெலுங்கு தேசம் கட்சியில், லோகேஷுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.


குறைந்தது நாயுடு சொத்து மதிப்பு: தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பு, கடந்த ஆண்டில், 40 கோடி ரூபாயாக இருந்தது. அது இந்த ஆண்டில், 35.59 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. நாயுடுவின் குடும்ப வர்த்தகத்தை கவனித்து வரும், அவரின் மனைவி புவனேஸ்வரிக்கு, கடந்த ஆண்டில், 34.57 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகள் இருந்தன. தற்போது, அவரின் சொத்து மதிப்பு, 27.18 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. அத்துடன் அவருக்கு, கடந்த ஆண்டில், 12.38 கோடிக்கு கடன்கள் இருந்தன. அது தற்போது, 17.38 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷுக்கு, கடந்த ஆண்டில், 6.82 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகள் இருந்தன. அது, இந்த ஆண்டில், 6.62 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. சட்டசபை சபாநாயகரிடம், சந்திரபாபு நாயுடு அளித்துள்ள சொத்து விவரங்களில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப் பட்டுள்ளன.


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.