DISTRICT NEWS | காட்டுப்பன்றிகளால் விவசாயநிலங்களில் பயிர்கள் சேதம்| Dinamalar

தமிழ்நாடு

காட்டுப்பன்றிகளால் விவசாயநிலங்களில் பயிர்கள் சேதம்

Added : செப் 26, 2012

ஆண்டிபட்டி:திம்மரசநாயக்கனூர் மலைப்பகுதியில் இருந்து வரும் காட்டுப்பன்றிகள் விளை நிலங்களில் புகுந்து நாசம் செய்து வருகின்றன. கட்டுப்படுத்த வழி தெரியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திம்மரசநாயக்கனூர், டி.பொம்மிநாயக்கன்பட்டி, மல்லையபுரம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. வடக்கு மலை, தெற்கு மலை, கிழக்குமலை, நாழி மலை, பச்சிமலை கரடுகளில் ஏராளமான காட்டுப்பன்றிகள் உள்ளன. தற்போது மலை மற்றும் கரடு பகுதிகளில், கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. குடிநீர், இரை கிடைக்காததால் இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் கூட்டமாக வந்து அடிவாரப்பகுதிகளில் விளை நிலங்களில் புகுந்து விடுகின்றன.

விவசாயிகள் பயிரிட்டுள்ள பீட்ரூட், மக்காசோளம், பப்பாளி, நிலக்கடலை பயிர்களை தோண்டி சேதப்படுத்தி விடுகின்றன. விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை பிடித்தாலோ, கொன்றாலோ வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து விடுகின்றனர்.சேதம் அடைந்த பயிர்களுக்கு யார் நஷ்ட ஈடு தருவது, என்று விவசாயிகள் கேட்கின்றனர். மலையில் இருந்து விளைநிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் வராமல் தடுக்க வேலி அமைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X