Names realesed non payers of temple | சபாஷ்: கோவில்களுக்கு பாக்கி வைத்திருப்பவர் பெயர்கள் அம்பலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சபாஷ்: கோவில்களுக்கு பாக்கி வைத்திருப்பவர் பெயர்கள் அம்பலம்

Updated : அக் 01, 2012 | Added : செப் 29, 2012 | கருத்துகள் (18)
Advertisement
 சபாஷ்!கோவில்களுக்கு பாக்கி வைத்திருப்பவர் பெயர்கள் அம்பலம் : நோட்டீஸ் போர்டில் ஒட்டி அறநிலைய

காஞ்சிபுரம் :கோவிலுக்கு அதிக பாக்கி வைத்திருப்போர் பெயர்களை, கோவில் அறிவிப்புப் பலகையில் எழுதி வைக்கத் துவங்கியிருப்பது, பக்தர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 36,451 கோவில்கள் உள்ளன. புனித மடங்கள், 56 உள்ளன. கோவிலுடன் இணைந்த மடங்கள், 57 உள்ளன. ஜெயின் கோவில்கள், 17 உள்ளன. கோவிலுக்குச் சொந்தமான, 1,83,669 ஏக்கர் விளை நிலம், 2,18,226 ஏக்கர் தரிசு நிலம், 20,746 ஏக்கர் மானாவாரி நிலம் உள்ளது. இந்நிலங்கள், குறைந்த தொகைக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. பெரும்பாலான நிலம், ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கியுள்ளன.


பாக்கி அதிகரிப்பு:

கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள், முறையாக, கோவிலுக்கு வாடகை செலுத்துவதில்லை. இதனால், கோவிலுக்கு வரும் வருமானம் பாதிக்கப்படுகிறது. கோவிலில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது சிரமமாக உள்ளது. வாடகையை வசூலிக்க கோவில் நிர்வாகம், நடவடிக்கை எடுத்தால், சிலர் நீதிமன்றத்திற்கு சென்றுவிடுகின்றனர். சிலர் ஆளுங்கட்சியினர் உதவியை நாடுகின்றனர். இதனால், வாடகை வசூலிப்பது குதிரைக் கொம்பாக உள்ளது.ஆண்டுகணக்கில் வாடகை செலுத்தாமல், பல லட்சம் ரூபாய் பாக்கி வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் முக்கியப் பிரமுகர்களாக உள்ளனர். அவர்களிடமிருந்து வாடகை வசூலிப்பதற்காக, அதிக பாக்கி வைத்திருப்போரின் பெயர், அவர் செலுத்த வேண்டிய தொகை போன்ற விவரங்களை, கோவில் தகவல் பலகையில் எழுதி வைக்கும்படி, செயல் அலுவலர்களுக்கு அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தகவல் பலகையில் பெயர் இடம்பெற்று, பக்தர்களிடம் அசிங்கப்படுவதை தவிர்க்க, பாக்கித் தொகையை செலுத்துவர் என, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.


பெயர் வெளியீடு:

காஞ்சிபுரத்தில் கோவிலுக்குச் சொந்தமான நிலம் மற்றும் கட்டடத்தை அனுபவித்துக் கொண்டு, லட்சக்கணக்கில் பாக்கி வைத்துள்ளவர்கள் விவரங்களை, கோவில் தகவல் பலகையில் எழுதி வைக்கத் துவங்கி உள்ளனர். குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இருவருடைய பெயர் இடம் பெற்றுள்ளது. காங்கிரஸ் பிரமுகரான அரங்கநாதன், 19.61 லட்சம் ரூபாய் கடன் பாக்கி வைத்துள்ளார். நாராயணன், 3.12 லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ளார்.இதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள பெரிய கோவில்களில், அறிவிப்புப் பலகைகளில் பெயர்களை எழுதி வைக்க, அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு, பாக்கி வைத்திருப்போர் பெயர்களை வெளியிடுவது, பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. பெயர் பலகையில் வெறும் பெயரை மட்டும் எழுதாமல், அவர்கள் என்னப் பதவியில் உள்ளனர், எந்த பொறுப்பில் உள்ளனர் என்ற விவரத்தையும் எழுதி வைத்தால், பாக்கி விரைவாக வசூலாக வாய்ப்புண்டு.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.SUBRAMANIAN.KUMBAKONAM - KUMBAKONAM ,இந்தியா
03-அக்-201223:29:28 IST Report Abuse
G.SUBRAMANIAN.KUMBAKONAM அவர்கள் கொடுக்க வேண்டிய பணம் ...மற்றும் அவர்கள் போட்டோ உடன் ..போட்டால் ....இன்னும் வேகமாக ........பாக்கி வசூலாகும் ........?????
Rate this:
Share this comment
Cancel
Siva Raja - Rajapalayam,இந்தியா
03-அக்-201218:05:48 IST Report Abuse
Siva Raja பாக்கி வைப்பவர்களுக்கு ஏன் குத்தகைக்கு விடவேண்டும்? அறநிலைய துறை தூங்குகிறதா ?
Rate this:
Share this comment
Cancel
Rajalakshmi - Kuwait City,குவைத்
30-செப்-201213:58:27 IST Report Abuse
Rajalakshmi சிவன் சொத்தை இப்படி அபகரித்தால் குலமே நாசமடையும். பெருமாளும் சிவனும் தேவியும் முருகனும் ஒன்றே காங்கிரசும் , தி.மு.க. போன்ற நாத்திக கட்சிகளும் அவர்களின் அடிவருடிகளான கோலிவுட் கும்பலும் வேரோடு நாசமாவது மிகவும் விரும்பத்தக்கதே
Rate this:
Share this comment
Cancel
30-செப்-201212:56:23 IST Report Abuse
சொல்லுங்கண்ணே சொல்லுங்க இந்தியாவிலுள்ள அனைத்து கோவில்களிலும் இது போன்ற அதிரடி நடவடிக்கை எடுத்தால் அடுத்த பத்து வருசத்துக்கு வரியில்லாத பட்ஜெட் போடலாம். எங்கோ எப்போதோ யாரோ எந்த நேரத்திலோ சொன்னது எந்த தினசைரியிலோ வந்தது, ..................... மறந்து போச்சு.....................
Rate this:
Share this comment
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Hindu American Foundation,யூ.எஸ்.ஏ
30-செப்-201213:57:01 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....)ஹிந்து கோவில் சொத்திலிருந்து எடுத்து ஹிந்துக்களுக்கு உதவ வேண்டுமே தவிர, அரசாங்கத்திற்கு கொடுக்க கூடாது....
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
30-செப்-201212:40:21 IST Report Abuse
villupuram jeevithan திஹாருக்கு போய் வந்தவர்களுக்கே சிறப்பான வரவேற்பு தமிழ்நாட்டில்? இவர்களுக்கு நல்ல எதிர்காலம் தான்?
Rate this:
Share this comment
Cancel
maran - riyadh,சவுதி அரேபியா
30-செப்-201212:28:57 IST Report Abuse
maran இதுபோல கோவில் நிலங்களை பிளாட் போட்டு விற்றவர்கள் தமிழ்நாட்டில் உள்ள ஆட்சியாளர்கள் எப்போது பெயர் வெளி இடுவார்கள் ....? தூங்கி கொண்டு இருக்கும் அரசு அதிகாரிகள் விழித்துகொல்வார்களா ?ஏன் என்றால் அப்பாவி பொது மக்கள் தான் சேர்த்து வைத்த பணத்தை இதுபோல விவரம் தெரியாமல் கோவில் நிலத்தை வாங்கிவிடுகின்றனர் ...சில பன்னாடைகளும் அரசு அதிகாரிகளுக்கு தள்ளவேண்டியத்தை தள்ளிவிட்டு பத்திரமாக்கிவிடுகின்றனர் .....பின்பு அரசு விழித்துகொல்லும்போது அரசு நிலத்தை அரசே எடுத்துகொள்ளும் நிலை வரும்போது பணத்தை போட்ட ஏழை அப்பாவி நாடு ரோட்டில் குடும்பத்துடன் பிச்சை எடுக்கிறான் ..இதுபோல ஏமாற்றின அரசு அதிகாரிகளும் ,மோசடிக்காரனும் காரில் சென்று குதுகளிக்கும்போது ஏழை வயிறு எரிகிறது ...எனவே அரசு விழித்துக்கொண்டு மோசடி செய்பவர்களை கண்டுபிடித்து விளம்பர படுத்தவேண்டும் ....இதுபோல .....
Rate this:
Share this comment
Cancel
Mona Nats - chennai,இந்தியா
30-செப்-201211:20:53 IST Report Abuse
Mona Nats முழு விலாசம் போன் நம்பர் கூட எழுதினால் நல்லது. முடிந்தால் பேப்பரிலும் செய்தியாகவோ விளம்பரமாகவோ போட்டோவுடன் வெளியிடவேண்டும்.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
30-செப்-201222:01:10 IST Report Abuse
தமிழ்வேல் போட்டோவோடு செய்யவேண்டும் என்பது நல்ல யோசனை ......
Rate this:
Share this comment
Cancel
sundar.s - coimbator,இந்தியா
30-செப்-201210:41:09 IST Report Abuse
sundar.s நல்ல முயற்சி பாராட்டுக்கள்..................ஹிந்து அற நிலைய துறைக்கு,தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில் அனைத்தலும் தொடர வும் .
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
30-செப்-201209:58:11 IST Report Abuse
g.s,rajan இந்தியாவில் பொதுத் துறை வங்கிகளில் பெரும் பண முதலைகள் வாங்கிய கடன் கிட்டத்தட்ட 200 லட்சம் கோடியாக இருக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன ,இவை கிணற்றில் போட்ட கல்லாக அப்படியே வசூல் செய்யப்படா மல் அப்படியே உள்ளது .இதே போல பொதுமக்கள் பார்வைக்கு கடன் வாங்கியவர்களின் பெயர் பட்டியலை பல இடங்களில் வைத்தால் ஓரளவுக்கு பணத்தை கட்டாயம் வசூல் செய்யலாம் .நிதி அமைச்சர் கவனிப்பாரா?வங்கிகளின் வாராக்கடன்கள் வசூலிக்கப்படுமா ?வங்கிகளின் பணம் பொதுமக்களின் சேமிப்பு பணம் எனவே இதை வசூலிக்க நிதி அமைச்சரான ப.சி நடவடிக்கை எடுப்பாரா? ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Hari Doss - Pollachi,இந்தியா
30-செப்-201218:54:24 IST Report Abuse
Hari Dossஅப்படி செய்தால் அவருடைய குடும்ப உறுப்பினரும் அதில் சேருவார்களா? எப்படி சம்மதிப்பார்....
Rate this:
Share this comment
Cancel
Suresh Siva - rajapalaiyam,இந்தியா
30-செப்-201208:19:18 IST Report Abuse
Suresh Siva இதுல ஆச்சும் பேர் வருதேன்னு சந்தோசமா இருப்பாங்க இதுக்கெல்லாம் போய் வருத்தப்பட மாட்டாங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை