சேமிக்கும் பழக்கம்"போத்தீஸ்' நிறுவனம் புதிய திட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேமிக்கும் பழக்கம்"போத்தீஸ்' நிறுவனம் புதிய திட்டம்

Added : ஆக 06, 2010
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை : ஆடி தள்ளுபடியில் வாங்கும் பொருட்களுக்கு கிடைக்கிற பணத்தை மிச்சமாக்கும் புது திட்டத்தை, "போத்தீஸ்' நிறுவனம் செயல்படுத்தியுள்ளது.


இது குறித்து, "போத்தீஸ்' நிறுவன பங்குதாரர் ரமேஷ் கூறியதாவது:"போத்தீஸ்' நிறுவனம், பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி அவ்வப்போது செயல்படுத்தி வருகிறது.கோடையில் "கோ கிரீன்' என்ற திட்டத்தை செயல்படுத்தி மரக்கன்றுகள் வழங்கியது. அது போல், "இன்றே சேமியுங்கள் போத்தீசில்' என்ற புது திட்டத்தை தற்போது செயல்படுத்தி வருகிறது.இதன் படி, போத்தீசில், ஆடி தள்ளுபடியில் மிச்சமாகும் பணத்தை, சேமித்து வைக்க,"பிக்கி பேங்க்' எனப்படும் சிறுவர்களுக்கான சேமிப்பு திட்டத்தை உருவாக்கியுள்ளோம்.இதன் மூலம், ஆறு லட்சம் பேருக்கு சேமிப்பு உண்டியல் வழங்கப்படும். மேலும், ஸ்டேட் வங்கியுடன் இணைந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கான வங்கி சேமிப்பு கணக்கை துவக்கும் திட்டத்தையும் தற்போது துவக்கியுள்ளோம்.இத்திட்டத்தின்படி, சிறுவர்கள் வங்கி கணக்கை துவக்க பணம் தேவையில்லை. அதன் பின், கிடைக்கும் பணத்தை சேமித்து வைக்கலாம். அதற்கு டெபிட் கார்டும் வழங்கப்படும்.இத்துடன்,  http://www.save todayatpothys.com   , "போத்தீஸ்' இணையத்தில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.இவ்வாறு ரமேஷ் கூறினார்.அப்போது ஸ்டேட் வங்கி அதிகாரிகள் உடன் இருந்தனர். நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட சிறுவர், சிறுமியருக்கு சேமிப்பு உண்டியலும், வங்கி கணக்கு துவக்குவதற்கான படிவமும் வழங்கப்பட்டன.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X