சென்னை: இலங்கை தமிழர் பிரச்னை இன்னும் தீர்க்கப்படவில்லை என கருணாநிதி கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் டெசோ மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் கூடியது. இதில் ஏற்கனவே கடந்த ஆகஸ்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் , மேல் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. இம்மாநாட்டில் ஸ்டாலின், கீ.விரமணி, சுப்புலெட்சுமி ஜெகதீசன் உள்ளிட்ட டெசோ உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் தி.மு.க. தலைவர் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட் தீர்மானங்கள், ஐ.நா. பொதுச்சபையில் வழங்கப்படும். ஈழத்தமிழரின் வாழ்வுரிமை பாதுகாக்க தி.மு.க. தொடர்ந்து பாடுபடும். மேலும் ஐ.நா.விடம் வழங்கப்பட உள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு திரட்ட வேண்டும். இலங்கை தமிழர் பிரச்னை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. இலங்கை அளித்துவரும் தகவல்கள் திருப்தி இல்லை. எனவே டொசோ தீர்மானமத்தினை ஐ.நா. பொதுச்செயலர் பான்கீமூனிடம் எடுத்துரைக்கப்படும். இதனை ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் வழங்குவர். இவ்வாறு கருணாநிதி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.