சென்னை: தி.மு.க. நாளை நடத்தும் மனித சங்கிலி போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்தால், அதற்கு பதிலாக கருப்பு சட்டை அணிந்து வீடுவீடாக துண்டுபிரசுரம் வழங்கி போராட்டம் நடத்தப்படும் என கருணாநிதி அறிவித்துள்ளார். இதனால் மனித சங்கிலி போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் ,தி.மு.க. அவசர செயற்குழுக்கூட்டம் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் தமிழக அரசைக் கண்டித்து, (நாளை வரும், (5- ம்) தேதி மதியம், 2:00 மணி முதல் 6:00 மணி வரை, மாவட்ட தலைநகரங்களில், கருப்பு உடை அணிந்து, மனித சங்கிலி ஆர்ப்பாட்டம், நடத்தப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் மனித சங்கிலி போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்தால் , கருப்பு சட்டை அணிந்து அ.தி.மு.க.ஆட்சியின் அராஜகப்போக்கினை கண்டித்து வீடுவீடாக துண்டு பிரசுரம் வழங்கி போராட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தி.மு.க. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மனித சங்கிலி போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி கோரப்பட்டுள்ளது. மறுக்கப்பட்டால் அதற்கு பதிலாக நாளை (5ம் தேதி) சென்னையில் கருப்பு சட்டை அணிந்து துண்டுபிரசுரங்கள் மூலம் விநியோகித்து போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்தினை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் கருணாநிதி துவக்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து வில்லிவாக்கத்தில் பேராசிரியர் அன்பழகனும், கொளத்தூரில் ஸ்டாலினும் கலந்து கொண்டு துவக்கி வைக்கின்றனர். 6 மற்றும் 7-ம் தேதிகளில் சென்னையை தவிர்த்து பிற ஊர்களில் இந்த போராட்டம் நடக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருப்புச்சட்டை : கருணாநிதி விளக்கம்
இது குறித்து தி.மு.க.தலைவர் கருணாநிதி இன்று செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், தமிழத்திற்கு சில மாதங்களாக ஏற்பட்டிருக்கின்ற இழிவை மக்களிடம் எடுத்துக்காட்டக்கவும், அந்த இழிவை போக்க எடுக்கின்ற முயற்சிகளுக்கு கருப்பு சட்டைகளை கொண்டு இன்றைய ஆட்சியாளர்கள், அடக்க முயல்பவர்களை கண்டிக்கும் வகையிலும் தான் இந்த இன்றே கருப்புச்சட்டையை அணிந்துள்ளேன். இவ்வாறு கருணாநிதி தெரிவித்தார்..
இது குறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகையில், போராட்டத்தி்ற்கு போலீஸ் அனுமதி கோரப்பட்டுள்ளது. ஓரிரு மாவட்டங்களில் போலீஸ் அனுமதி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே மனித சங்கிலி போராட்டத்திற்கு கூட்டம் வருமா என்பது குறித்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே மனித சங்கிலி போராட்டம் பிசுபிசுத்தது என செய்திகள் வந்துவிடுமே என்ற பயத்தில் தான் திடீரென மனித சங்கிலி போராட்டத்தை கைவிட்டுவிட்டு அதற்கு பதிலாக கருப்பு சட்டை அணிந்து துண்டுபிரசுரம் வழங்கி போராடப்போவதாக அறிவித்துள்ளது தி.மு.க. மேலும் தற்போதைய நிலையில் மத்திய அரசை லேசாக உரசிப்பார்க்கும் வேளையில் ஈடுபட்டு வருகிறது. இன்று நடக்க உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் , பென்சன் மற்றும் இன்சூரன்ஸ் துறையில் நேரடி அன்னிய முதலீட்டு தொடர்பான மத்திய அமைச்சரவை கூட்டத்தை புறக்கணிக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வடிவேலு படங்களில் நடிக்காத குறையை நம்ம ஐயா எப்படியெல்லாம் போக்குறார் பாருங்க இளிச்சவாயத் தமிழனாமே..."மஞ்சத்" துண்டு போட்டு 7 வருஷம் முடிஞ்சி போச்சு..மாறிப்போன "கிரகச்சார" பரிகார பலன்களுக்காக "குடும்ப" ஜோசியர் "அறிவுரை" படி "கருப்பு" கலருக்கு மாறனும்..அதுக்கு ஒரு காரணம்.. "மனித" சங்கிலி.."மனித" "மாக்களை" விலைக்கு வாங்கி "கூட்டம்" சேர்க்குற "பெரிய" தலைகள் எல்லாம் "தலை" மறைவு...கட்சியில "குடும்பத்த" தவிர "மனிதர்களையே" காணோம்..(எதுக்கு "ஒரு" நாள் முன்னாடியே கருப்பு சட்டை போட்டாருன்னு (நல்லா கவனிங்க அவரு மட்டும்தான் போட்டிருக்காரு) யாராவது யோசிசிங்கலாபா? - "ஜோசியர்" அறிவுரை..)) இனி அடுத்த 7 வருசத்துக்கு கருப்பு சட்டைதான்..அதுக்கும் ஒரு காரணம்.."அம்மா" ஆட்சியின் "அவலங்கள்"...அதுல பாத்திங்கன்னா.. உலகத்தில எத்தனையோ பேரு வித விதமா "அயோக்கியத்தனம்" பண்றாங்க....இவங்களுக்கு எல்லாம் ஒரு உருவம் கொடுக்கணுமின்னு நினச்ச உடனேயே உலகத் தமிழர்களுக்கு வரும் ஒரே உருவம் நம்ம "ஐயா" மட்டும்தாங்க..உலகிலேயே எல்லோரும் ரொம்ப உயர்வா நினைக்கிற "பரிசு" "நோபல்" பரிசுதாங்க,, அதை பெறுவதற்கு ரெண்டு பேர்களுக்குத்தான் தகுதி இருக்கிறது..ஒன்று தமிழர்களாகிய நமக்கு.. உலகிலேயே "நித்தமும்" ஏமாந்து கொண்டிருப்பதற்கு..இன்னொன்று..வேற யாருக்கு?.. சந்தேகமே வேண்டாம்,.. நம்ம தானை தலைவர்க்குத்தான்..நித்தமும் தமிழர்களை ஏமாத்திக் கொண்டிருக்கிறோம் என்று "நினைத்துக்" கொண்டிருப்பதற்காக..இதுல ஒருத்தர் இவரு "படத்த" ஒழுங்கா போடலைன்னு தினமலர் மேல எவ்வளவு விசனப் பற்றிக்கார் பாருங்க..
மூணு வேளை சோத்துக்கு உத்தரவாதம் தரும் சிறை நிரப்பும் போராட்டத்துக்கே கூட்டம் சேர்க்க முடியலை. அதுவும் இல்லாம சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு ஆங்கிலப் பேராசிரியர் அழகிரியாரின் ஆதரவும் உண்டு என்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்த நிலையில் நாளைய மனித சங்கிலி என்பது புஸ்வானம் ஆகும் என்பது முன்கூட்டியே அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். எப்படியோ, பெரியார் பிறந்தநாளைக்கு போட வேண்டிய கருப்பு சட்டையை இப்போது அணிந்து துவைத்து இஸ்திரி போட்டு வைத்தால் பின்னாளில் வேறு ஒரு நிகழ்ச்சிக்கு அணிய உதவும். அவ்வளவே. ( இலங்கையில் தமிழர்கள் கொத்துகொத்தாக கொல்லப்பட்டதற்கே நாங்கள் வெள்ளை சட்டைதான் அணிந்து அரைமணி நேரம் உண்ணாவிரதம் இருந்தோம். அந்த நிகழ்வு யாருக்கும் நினைவில் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இப்போது கருப்பு சட்டை)
கருணாநிதியைப் போல ஒரு அறிவாளியான அரசியல்வாதி , வேறு எவரும் இல்லை...இல்லவே இல்லை .. 1970களில் சென்னை கூவம் நதியை சுத்தப்படுத்தி படகு விட அப்போதைய திமுக அரசு திட்டம் தீட்டி , லட்சக்கணக்கான பணத்தை அதில் செலவு செய்ததாக கணக்கு காட்டினார்... திட்டம் உருப்படியாக நடக்கவில்லை..எதிர்க் கட்சிகள் கேள்வி கேட்க வாயைத் திறக்கும் முன்..... திடீர் என ஒரு நாள் காலை ,கூவத்தில் முதலை இருப்பதா...க ஒரே பரபரப்பு..." கூவத் தில் முதலை இருப்பதால் தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர்...அவர்கள் பாதுகாப்பு கருதி கூவத்தை சுத்திகரிக்கும் திட்டம் கை விடப்படுகிறது .."என்று அறிவித்து விட்டார் கருணாநிதி..ஒருத்தராலும் ஒன்றும் சொல்ல முடியவில்லை.. இந்தக் காலத்தில் வெளிவந்த சிவாஜியின் "தாய் "படத்தில் "நான் பார்த்தாலும் பார்த்தேண்டி.. மதறாசுப் பட்டணத்தை..பத்துக் கண்ணு போதாதம்மா, பட்டிக்காட்டம்மா..."என்ற பாடலில் இடையே இப்படி காட்டமான வரிகள் வரும்.. "கூவத்திலே பணத்தை அள்ளிப் போட்டிருக்காங்க கூட ஒரு முதலையையும் விட்டிருக்காங்க துண்டு போட்ட மனுஷங்கெல்லாம் சுத்திக்கிறாங்கம்மா - இந்த நாட்டைக் கூட துண்டு போட எண்ணிக்கிறாங்கம்மா.." ஆனால் சென்சாரில் இந்த வரிகள் இப்படி மாற்றப்பட்டு விட்டதாக சொன்னார்கள்.. "குப்பத்தில பணத்தை அள்ளி போட்டிருக்காங்க..கூட ஒரு முரடனையும் விட்டிருக்காங்க.." விஞ்ஞான பூர்வமாக சில விஷயங்களை செய்வதில் கருணாநிதியை மிஞ்ச , இனி ஒருவர் பிறந்துதான் வரவேண்டும்..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.