Non payment of dues for temple | கோவில்களில் வாடகை பாக்கி வைத்திருப்போர் பட்டியல் வெளியீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவில்களில் வாடகை பாக்கி வைத்திருப்போர் பட்டியல் வெளியீடு

Added : அக் 05, 2012 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கோவில்களில் வாடகை பாக்கி வைத்திருப்போர் பட்டியல் வெளியீடு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், கோவில்களுக்கு, வாடகை பாக்கி வைத்திருப்போர் பெயர் பட்டியல் வெளியிடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. கோவில்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல், பாக்கி வைத்திருப்போர் பெயர் மற்றும் முகவரியை, கோவில் அறிவிப்பு பலகையில் வெளியிடும்படி, கோவில் செயல் அலுவலர்களுக்கு, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். அதன்படி காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பாக்கி வைத்திருப்போர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து பிற கோவில்களிலும், வாடகை பாக்கி வைத்திருப்போர் பட்டியலை வெளியிடும் பணி நடந்து வருகிறது. காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர்கோவில், வைகுண்ட பெருமாள் கோவில், பிள்ளையார்பாளையம் மகாஆனந்த ருத்ரேஸ்வரர் கோவில், அறம்வளத்தீஸ்வரர் கோவில், ஆகியவற்றில் வாடகை பாக்கி வைத்திருப்போர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


திருப்போரூர்: கந்தசுவாமி கோவில் நிர்வாகம், கோவிலுக்கு மனை வரி, நிலம் குத்தகை, கட்டட வாடகை, என பாக்கி வைத்துள்ளவர்கள் பெயர் மற்றும் அவர்கள் செலுத்த வேண்டிய தொகை விவரம் அச்சிடப்பட்ட விளம்பரப் பதாகையை, கோவில் அலுவலகம் முன் வைத்துள்ளது.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MUTHUKUMARAN - Paris,பிரான்ஸ்
05-அக்-201215:21:33 IST Report Abuse
MUTHUKUMARAN இது போன்ற செயல்கள் பல வருடங்களுக்கு முன்பே புதுவையில் காளத்தீஸ்வரன் கோயில் நிர்வாகத்தினர் கோயில் கடைகள் மற்றும் நிலங்கள் குத்தகைக் நிலுவை போன்றவற்றை பொதுமகள் பார்வைக்கு எழுதி வைத்தார்கள். அதனால் சில நன்மைகள் நடந்தது, பல வருந்தத்தக்க நிகழ்ச்சிகளும் நடந்தேறியது. முத்துக்குமரன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை