சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி மீது, அமைச்சர்கள் சிவபதி, பச்சைமால் ஆகியோர், சென்னை, முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில், அவதூறு வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.
அமைச்சர்கள் சார்பில், நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜெகன், முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில், தாக்கல் செய்த மனு: கருணாநிதியின், கேள்வி-பதில், ஆகஸ்ட், 23ம் தேதி, "முரசொலி'யில் வெளியானது. அதில், தமிழக அமைச்சர்கள் சிவபதி, பச்சைமால், பற்றி விமர்சித்துள்ளார். இந்தச் செய்தி, அமைச்சர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் உள்ளது. எனவே, கருணாநிதி, அந்த பத்திரிகை ஆசிரியர் செல்வம் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த கருணாவுக்கு வேற வேலையே கிடையாது எதாவது உளறி கொட்டி இது தேவையா? அந்த இரண்டு பேரும் மந்திரிகள் என்று இப்பதான் தெரியும். மேலும் மந்திரிகள் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாம். மக்குகளே உங்களின் சீட்டை கிழித்து விட்டால் அவ்வளவுதான். இந்த கருணாவுக்கும், ஜெயாவுக்கும், இதே வேலை தான் மான நஷ்ட வழக்கு போடுவது மானமே இல்லாத இந்த இருவருக்கும் மானத்தில் நஷ்டம் வேறு. கோர்ட் இதுமாறி வழக்குகளை ஆரம்பத்தில் விசாரித்து தள்ளுபடி செய்யவேண்டும். கோர்ட்டின் நேரமும், மக்கள் வரி பணம் விரயமாவது தான் மிச்சம். மேலும் ஏற்கனவே பல வழக்குகள் விசாரிக்காமல் இருக்கும் போது இது தேவை தானா?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.