Karunanidhi starts his campagin against ADMK regime | கறுப்பு சட்டையில் துண்டு பிரசுரம்: கருணாநிதி புதிய வகை போராட்டம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கறுப்பு சட்டையில் துண்டு பிரசுரம்: கருணாநிதி புதிய வகை போராட்டம்

Updated : அக் 07, 2012 | Added : அக் 05, 2012 | கருத்துகள் (138)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை: அ.தி.மு.க., அரசைக் கண்டித்து, மாநிலம் முழுவதும், கறுப்பு சட்டை அணிந்து, வீடுகள் தோறும் துண்டு பிரசுரங்களை வழங்கும் போராட்டத்தை, தி.மு.க.,வினர் இன்றும், நாளையும் நடத்தவுள்ளனர். அதன் தொடக்கமாக, சென்னை கோபாலபுரத்தில், தன் இல்லம் முன், கருணாநிதி, கறுப்புச் சட்டை அணிந்து, நேற்று, கருணாநிதி துண்டு பிரசுரம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கருணாநிதியின் மனைவி தயாளு, நடிகை குஷ்பு உட்பட பலர் பங்கேற்றனர்.


அப்போது கருணாநிதி பேசியதாவது:

தமிழகம் மின்னொளி இல்லாமல் இருண்டுள்ளது; விலைவாசி உயர்வால், வாங்கும் சக்தியை மக்கள் இழந்துள்ளனர். இதைத் தட்டி கேட்க, நாம் கறுப்பு சட்டை அணிந்து, மனித சங்கிலி நடத்த அனுமதி கேட்டோம். போலீஸ் அதிகாரிகள் திடீரென, "அனுமதி கிடையாது' என, அறிவித்து விட்டனர். இதையடுத்து, கறுப்பு சட்டை அணிந்து, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கும் இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது, என்றார். சென்னையில், கொளத்தூர் பகுதியில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கறுப்புச்சட்டை அணிந்தும், நொச்சிக்குப்பம் பகுதியில், ராஜ்யசபா எம்.பி., கனிமொழி கறுப்புச் சேலை அணிந்தும், துண்டு பிரசுரங்களை வீடு, வீடாக வழங்கினர். வில்லிவாக்கம் எம்.டி.எச்., சாலை, திருமங்கலம் சாலை சந்திப்பில் பொதுச் செயலாளர் அன்பழகன், ஆர்.கே.நகர் தொகுதியில், முன்னாள் எம்.எல்.ஏ., சேகர்பாபு தலைமையில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளில், கறுப்புச் சட்டை அணிந்து ஏராளமான, தி.மு.க., வினர் பங்கேற்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (138)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balaji - Pune,இந்தியா
06-அக்-201214:53:34 IST Report Abuse
balaji கருணாநிதி பேரு வந்தா போதும்.. கமெண்ட்ஸ் எப்படியும் நூறுக்கு மேல தான் வருது..
Rate this:
Share this comment
Cancel
வைகை செல்வன் - சென்னை,இந்தியா
06-அக்-201214:52:39 IST Report Abuse
வைகை செல்வன் மக்களை ஏமாற்ற மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறுது..
Rate this:
Share this comment
Cancel
ganapathy - khartoum,சூடான்
06-அக்-201214:26:10 IST Report Abuse
ganapathy சனிபெயர்ச்சி தலைவர் ராசிக்கு கருப்பு சட்ட போட்டுண்டா களி திங்க வேண்டி இருக்காதுன்னு யாராவது ஆஸ்தான ஜோசியர் சொல்லி இருப்பார். அது தான். பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு
Rate this:
Share this comment
Cancel
rajahselvam - cuddalore,இந்தியா
06-அக்-201213:22:17 IST Report Abuse
rajahselvam குறைத்தபட்சம் மின்சாரத்தை கொடுக்க திராணி இல்லாத ஆட்சி கேவலமான ஆட்சி தான் மந்திரிகளை மாற்றி அமைப்பதில் உள்ள வேகம் மின்சார தட்டுபாட்டை சரி செய்வதில் காட்டினால் நலமாய் இருக்கும் தலைவரும் தான் அங்கம் வகிக்கும் மதிய அரசிடம் சொல்லி சரி செய்ய பார்க்கலாம் அல்லது ஆட்சியை கலைத்துவிட்டு தான் முதவராக முயற்சி செய்யலாம் அதையெல்லாம் விட்டுவிட்டு கோடி கணக்கில் பணம் சுருட்டிய தன மகளை காப்பாற்ற கருப்பு சட்டை அணித்து கபட நாடகம் ஆடுவது கேவலமான செயல்
Rate this:
Share this comment
Cancel
nanban - mumbai,இந்தியா
06-அக்-201212:47:56 IST Report Abuse
nanban ஆட்சி அரியணை எல்லாம் இருக்கும் போது மக்களுக்கு உழைக்காமல் தம் மக்களுக்கு (குடும்பத்துக்கு) உழைத்த மாபெரும் தலைவர் கடைசி நேரத்தில் கருப்பு சட்டை போட்டு பெரியார் வேஷம் போடுகிறார் . யாரும் நம்பாதீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
alriyath - Hongkong,சீனா
06-அக்-201212:41:05 IST Report Abuse
alriyath அப்படி என்னதான் அந்த நோட்டீஸ்ல இருக்கு இதுவரைக்கும் நடக்காதது...
Rate this:
Share this comment
Cancel
Kamal - Kumbakonam,இந்தியா
06-அக்-201212:35:31 IST Report Abuse
Kamal உண்மை என்னவாக இருக்கும்னா தாத்தாவோட ஜோசியர் அவருக்கு சனி உச்சத்தில் இருக்கார்னு சொல்லி அதற்கு பரிகாரமாக கருப்பு உடை அணிய வேண்டும் என சொல்லி இருப்பார். நம்ம தாத்தாதான் வெளி உலகத்துக்கு நாத்திகர் ஆயிற்றே? இப்படி ஒரு அறிவிப்பை அறிவித்து திமுக விற்கு ஏற்பட்ட சனி கொடச்சளையும் போக்க தாத்தா எல்லா திமுகவினரையும் கருப்பு சட்டை போடா சொல்லியிருப்பார்.
Rate this:
Share this comment
Cancel
S..Santhanaraghavan - Kerala,இந்தியா
06-அக்-201212:06:00 IST Report Abuse
S..Santhanaraghavan பதவியை இழந்த பின் கருணாநிதி பிதற்ற ஆரம்பித்துவிட்டார். இவர் ஆட்சியிலிருந்து விரட்ட்பட்டதர்க்கு ஒரு காரணம் மின்சார இலாகாவில் நடந்த ஊழல். தரமற்ற நிலக்கரியை அதிக விலை கொடுத்து வாங்கி இறக்குமதி செய்தார்கள். மின்சாதனங்கள் பழுதுபட்டு மின்சார உற்பத்தி குறைந்தது. தான் செய்த தவறுகளை கருப்புதுணி போட்டு மறைக்கப பார்க்கிறார். இவர் ஆட்சியில் இருக்கும்போது காய்கறிகள் வெங்காயம், தக்காளி. உருளைகிழங்கு, கத்தரிக்காய் மிளகாய் போன்றவை கிலோ 50 ரூபாய்க்கு மேல் விற்றது. பூண்டு கிலோ முன்னூறு ரூபாய்க்கு சென்றடைந்தது. இன்று என்ன விலை? கருணாநிதி கருப்பு கண்ணாடி போட்டுகொண்டு கருப்பு உடை அணிந்து இருட்டில் வலம் வருகிறார். நாட்டு நிலவரம் அவருக்கு தெரிய நியாயமில்லை. ரோம் தீப்பற்றி எரியும்போது நீரோ மன்னன் அந்தப்புரத்தில் பிடில் வாசித்துக்கொண்டிருந்தானம். கருணாநிதி தன் பேரன் தயாரித்த படங்களை pre view பார்க்க சென்றுவிடுவார். விலைவாசி ஏற்றம் பற்றியோ மின்சாரம் பற்றாகுறை பற்றியோ அவர் ஒன்றும் அறிந்திருக்கவில்லை . மணல் கொள்ளை கிராநைட் கொள்ளை நில அபகரிப்பு போன்ற மோசடிகள் கருணாநிதி ஆட்சியில் இருக்கும்போது தங்கு தடையின்றி நடந்தன . மடியில் கணம் இல்லையென்றால் இவர் பேரன் துரை தயாநிதியும் மனம் கவர்ந்த பொன்முடியும் k n நேருவும் ஏன் ஓடி ஒளிகிறார்கள் பாவம் கருணாநிதி தள்ளாத வயதில் துள்ளி குதிக்க பார்க்கிறார். தள்ளுவண்டியில் செல்லும் அவர் துள்ளிகுதித்தால் என்ன ஆகும். .
Rate this:
Share this comment
Cancel
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
06-அக்-201211:33:54 IST Report Abuse
T.C.MAHENDRAN பதவி பித்து பிடித்து அலையும் இந்த மு.க.வின் குடும்பம் எப்படியாவது அடுத்த தேர்தலில் ஆட்சியே பிடித்துவிடவேண்டும் என்பதற்காகவே இந்த கருப்பு சட்டை அணியும் போராட்டம் .
Rate this:
Share this comment
Cancel
maha - bangalore,இந்தியா
06-அக்-201211:29:48 IST Report Abuse
maha தமிழ் நாட்டுல வயசு பிள்ளைகளா ராத்திரியில கொஞ்சம் பார்த்து நடமாடுங்க காத்து "கருப்பு " நடமாட்டம் ஜாஸ்தியா இருக்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை