Ramnad district judge suspended | ராமநாதபுரம் மாவட்ட நீதிபதி "சஸ்பெண்ட்'| Dinamalar

ராமநாதபுரம் மாவட்ட நீதிபதி "சஸ்பெண்ட்'

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி கோவிந்தராஜூலு "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இவர் மீதான பல புகார்கள் குறித்து, மதுரை ஐகோர்ட் பதிவாளர் உதயன் விசாரணை நடத்தி வழங்கிய அறிக்கைபடி, சென்னை ஐகோர்ட் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள், ராமநாதபுரம் கோர்ட்டில், மாவட்ட முதன்மை நீதிபதி கோவிந்தராஜூலுவிடம், "சஸ்பெண்ட்' உத்தரவை வழங்க வந்தனர். இவர் விடுமுறையில் இருந்ததால், "சஸ்பெண்ட்' உத்தரவு நகலை, நீதிபதியின் வீட்டின் கதவில் ஒட்டினர். மேலும் ஒரு நகலை, ராமநாதபுரம் கூடுதல் அமர்வு நீதிபதி சிவசுப்பிரமணியத்திடம் வழங்கினர்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.JEEVAGAN ADVOCATE , MADURAI. - MADURAI,இந்தியா
16-அக்-201211:53:57 IST Report Abuse
S.JEEVAGAN ADVOCATE , MADURAI. 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 & 25 ஆம் தேதிகளில்185 சிவில் நீதிபதிகளுக்கான தேர்வு சென்னை உயர் நீதிமன்றத்தால் நடத்தப்பட்டது. தேர்வு எழுதுவதற்குத் தகுதியானவர்களின் பெயர்கள் அடங்கியப் பட்டியலில் இடம்பெறாத நபர்கள் எப்படி புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நீதிபதிகளின் பட்டியலில் இடம் பெற்றார்கள் என்பது சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கும் மற்றும் தமிழக அரசாங்கத்திற்குமே தெரிந்துள்ள மிகப் பெரிய ரகசியம். ( ). சுத்தமாக விதிமுறைகள் கடைப்பிடிக்கப் படாமல் நடத்தப்பட்ட இந்த தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிபதிகளின் எதிர்கால செயல்பாடுகள் நிச்சயமாகக் கேள்விக்குரியதே. இதைப்பற்றி ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது துரதிர்ஷ்டமானது.
Rate this:
Share this comment
Cancel
S.JEEVAGAN ADVOCATE , MADURAI. - MADURAI,இந்தியா
07-அக்-201223:28:03 IST Report Abuse
S.JEEVAGAN ADVOCATE , MADURAI. தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 24 & 25 ஆம் தேதிகளில் 185 உரிமையியல் நீதிபதிகளின் பதவிக்கான தேர்வு நடத்தப்பட்டது. அதற்காக அனுப்பப்பட்ட விண்ணப்பங்களில் 8,887 பேர் தேர்வு எழுதுவதற்குத் தகுதியானவர்களாகக் கருதப்பட்டு அனுமதிச் சீட்டு அனுப்பப்பட்டார்கள். அவ்வாறு தேர்வு எழுதியவர்களில் 461 பேர் நேர்முகத் தேர்விற்காக அழைக்கப்பட்டார்கள். அவ்வாறு அழைக்கப்பட்டிருந்தவர்களில் நானும் ஒருவன். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் நான் 113 ஆவது இடத்தில் தேர்வாகியிருந்தேன். 185 இடங்களுக்கானத் தேர்வில் 113 ஆவதாக உள்ள நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதுகூட எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தவில்லை. என்னைவிடக் குறைவாக மதிப்பெண்கள் பெற்றவர்கள் தேர்ந்தேடுக்கப்பட்டதின் பின்னணி என்ன என்றும் நான் எதற்காகத் தேர்ந்தெடுக்கப் படவில்லை என்ற காரணத்தை எனக்கு ஏன் தெரியப்படுத்தப்படவில்லை என்றும் நான் கேள்வி கேட்க ஆரம்பித்தால், நீதிபதியாவதர்க்குப் பதிலாக நானே குற்றவாளியாக்கப்பட்டு வழக்குரைஞராகவே பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும். இப்படி நடப்பதும் இந்த தமிழ்நாட்டில்தான். நீதிபதித் தேர்வு சம்பந்தமாக அனைத்து விஷயங்களும் வெளிப்படையாக நடப்பது போல் காட்டிக்கொண்டு அதன் முடிவுகளை மட்டும் திரை மறைவில் வைத்திருப்பது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், யாரிடம் போய் என் சந்தேகத்திற்கு விடை காண்பது? இது சம்பந்தமாக என்ன செய்யவேண்டும் என்று நான் அறியாமல் என் ஆதங்கத்தை இங்கே கொட்டவில்லை. மாறாக, நான் சட்டப்படி ஏதாவது செய்யப்போய், சட்டத்துக்குப் புறம்பாக என்னைத் தண்டிக்க ஒரு கூட்டமே கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட நேரிடும். இதன் காரணமாகத்தான் குற்றவாளிகள் மேலும் மேலும் வலுப்பெருகிறார்கள், பாதிக்கப்பட்டோர்கள் மேலும் மேலும் வதைக்கப்படுகிறார்கள் என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. ஒரு நாட்டில் மிகவும் அதிகாரம் பெற்றுள்ள நீதித்துறை சரியாகச் செயல்பட்டால், குற்றங்களுக்கு நிச்சயம் முற்றுப் புள்ளி வைக்க இயலும். இல்லையென்றால், மக்கள் நீதி பெறுவதற்கு நீதி மன்றத்திற்கு செல்வதைவிட பழங்காலத்தில் கடைபிடிக்கப்பட்ட " கண்ணுக்குக் கண்" , " பல்லுக்குப் பல் " என்ற தத்துவத்தை நம்ப ஆரம்பித்துவிடுவார்கள். நீதி மன்றங்களின் கதவுகள் தட்டப்படுவதற்கும் , அது திறக்கப்படுவதற்கும் அவசியம் இல்லாது போய்விடும். யோசிக்கவேண்டியவர்கள் யோசிப்பார்களா? ...................
Rate this:
Share this comment
Cancel
S.JEEVAGAN ADVOCATE , MADURAI. - MADURAI,இந்தியா
07-அக்-201216:37:58 IST Report Abuse
S.JEEVAGAN ADVOCATE , MADURAI. நீதிபதிகளை நியமனம் செய்வதில் வெளிப்படையான அணுகுமுறை என்பதை உறுதி செய்வதற்கு எந்த வழிவகையும் செய்யப்படாதவரை நேர்மையானவர்களும், திறமையானவர்களும் நீதித்துறைக்கு கிடைப்பது என்பது அரிதிலும் அரிதான ஒன்றாகும். இன்றைய அரசியல் எவ்வாறு நேர்மையானவர்களை புறந்தள்ளி பயமுறுத்துகிறதோ அவ்வாறே நீர்த்துப்போன நீதித்துறையும் நல்லவர்களை அச்சுருத்திக்கொண்டுதான் இருக்கிறது என்பது என்னுடைய அனுபவத்தில் நான் கண்டறிந்த ஒரு உண்மை. நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் என்ற ஆயுதம் இருக்கிற வரை தவறு செய்யும் நீதிபதிகளைத் தட்டிக் கேட்பதற்கு சாமானியன் நிச்சயம் முன்வர மாட்டான். சாமானியனின் இந்த பயம்தான் நாட்டில் நடக்கும் அனைத்து அக்கிரமங்களுக்கும் காரணமாகும். அப்படிஎன்றால் நாட்டில் நடக்கும் அனைத்து அக்கிரமங்களுக்கும் யார் காரணம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. குற்றங்கள் புரிவோர்களைச் சட்டப்படித் தண்டிப்பதற்கு அதிகாரகளைக் கொண்டுள்ள நீதிபதிகள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செயல்படுகிற அக்கிரமங்களைத் தட்டிக் கேட்கத் திராணியின்றி, பாதிப்பிற்குள்ளான சாமானியன் நியாயம் பெற எண்ணி தானே குற்றவாளியாகிறான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.