Rape in Haryana; 16 age girl commit sucide | கற்பழிப்பு பெருகும் அரியானா: டி.வி.,மீது கோபம் திரும்பியது| Dinamalar

கற்பழிப்பு பெருகும் அரியானா: டி.வி.,மீது கோபம் திரும்பியது

Updated : அக் 08, 2012 | Added : அக் 07, 2012 | கருத்துகள் (10)
Advertisement
Rape in Haryana; 16 age girl commit sucide, கற்பழிப்பு பெருகும் அரியானா: டி.வி.,மீது கோபம் திரும்பியது

ஹிசார்: அரியானா மாநிலத்தில் கற்பழிப்பு சம்பவம் வெகு விரைவாக சகட்டுமேனிக்கு அதிகரித்து வருகிறது. 16 வயது கொண்ட ஒரு பெண்ணை இளைஞர்கள் பலர் சேர்ந்து கற்பழித்ததால் மனது உடைந்து தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது போன்ற சம்பவத்திற்கு தொலைக்காட்சிகளும், சினிமாக்களும் தான் இதனை ஒழிக்க இது இளம் சிறுவர் - சிறுமிகள் திருமணத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியை சேர்ந்த ஊர் பஞ்சாயத்து தலைவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.16 வயது திருமணத்திற்கு ஏற்பாடு :

அரியானா மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்தில் இது வரை 10 கற்பழிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. ஆனால் போலீஸ் தரப்பில் முறையான நடவடிக்கை இல்லை என்று இப்பகுதியை சேர்ந்தவர்கள் குறை கூறியுள்ளனர். அரியானாவின் ஷிண்ட் மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் இது போன்ற துயரங்களுக்கு ஆளாக்கப்பட்டு வருவதாக உள்ளூர் செய்திதாள் ஒன்று தெரிவிக்கிறது.


இது போன்ற கற்பழிப்புக்கு காரணமாக இருப்பது டி.வி,.க்களும் சினிமாக்களும் தான் என உள்ளூர் பஞ்.,தலைவர் சிங் கூறியுள்ளார். இதற்கு ஒரே வழி 16 வயது நெருங்கும் போது திருமணம் செய்து வைப்பதே நல்லது என்ற யோசனையையும் தெரிவித்துள்ளார்.
இதுவரை கற்பழிக்கப்பட்டவர்கள்:

30 வயது மதிக்கத்தக் பெண் ஒருவர், 15 வயது இளம்பெண். புதிதாக திருமணம் ஆன ஒரு புதுப்பெண், மற்றொரு 17 வயது மதிக்கத்தக்க பெண். இப்படி 10 க்கும் மேற்பட்டோர் ஒரு மாதத்திற்குள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குடும்பத்தினரை சேர்ந்த சிலர் மானத்திற்காக தற்கொலையும் செய்துள்ளனர். சமீபத்திய கற்பழிப்புகள் எல்லாம் ஒரு தனிப்பட்ட முறையில் நடக்கவில்லை. இளைஞர்கள் கூட்டாக சேர்ந்து இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். இம்மாநிலத்தில் செக்ஸ் தொந்தரவு காரணமாக ஒரு விமானபணிப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஒரு மாஜி அமைச்சர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tirupur Truth - tirupur,இந்தியா
19-டிச-201212:21:54 IST Report Abuse
Tirupur Truth பெண்கள் சுதந்திரம் இல்லாத நாடாக நம் நாடு இருக்கிறது என்று பார்க்கும்போது வேதனையாக உள்ளது...
Rate this:
Share this comment
Cancel
nallavan - tiruchy,இந்தியா
19-டிச-201210:24:13 IST Report Abuse
nallavan ஆபாசமான சினிமா,ஆபாசமான டிவி நிகழ்சிகள்.இதெல்லாம் போதாதென்று ஆபாசத்தை அள்ளிகொட்டும் இன்டர்நெட் வேறு.இவைகள் எல்லாவற்றையும் பக்கத்தில் வைத்துகொண்டு 21 வயதில்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று சொன்னால் இதுமாதரி கற்பழிப்புகள் நடப்பது தவிர்க்க முடியாது.பஞ்சாயத்து தலைவர் கருத்தை நான் ஏற்றுகொள்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
19-டிச-201206:11:54 IST Report Abuse
P. Kannan உலகம் உருண்டை. மறுபடியும் புறப்பட்ட இடத்திற்கே வந்து விட்டோம். பால்ய விவாகம் அவசியம் என்ற நிலைப்பாடு காலுன்ற ஆரம்பித்து விட்டது. மேலை நாட்டவர்கள் திருமணத்திற்கு முன் ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொள் வதை தவறாக எடுத்துக்கொள்வதில்லை. பாலியல் பலாத்காரத்தில் பெண்ணை இழிவுபடுத்துவது இல்லை. ஆகவே அங்கு இருபது வயதுக்கு மேல் திருமணம் செய்வது சிறந்ததாக கருதப்படுகின்றது. ஆனால் நமது கலாச்சாரம் வேறு, அதில் சிறு திருத்தங்கள் கூட இது போன்ற விபரீதங்களை நடத்தி விடுகின்றன. முன்பு பாலியல் பலாத்காரம் ஆதிக்க வர்க்கத்தால் (அரச பரம்பரையினரால்) செய்யப்பட்டது. அதை யாராலும் எதிர்க்க முடியாது, ஆகவே பாலிய விவாகம் நடை பெற்றது. இப்போதும் வேறுவழியில் மக்களால் எதிர்க்க முடியாத சூழல் உருவாக்கி உள்ளது (அரசியல் வாதிகளின் தலையீடு ) ஆகவே மக்கள் பாலிய விவாகத்தை ஆதரிக்க வேண்டிய சூழலில் தள்ளப்படுகின்றனர்.
Rate this:
Share this comment
Cancel
திருமகள்கேள்வன் - chennai,இந்தியா
10-அக்-201200:41:07 IST Report Abuse
திருமகள்கேள்வன் போன வருட கற்பழிப்பு சம்பவங்களை காட்டிலும் இந்தவருடம் பரவாயில்லை... என்று ஒரு டிஜிபி சொல்வது ஒரு போலிஸ் காரர் பேசுவது போல் இல்லை... ஒரு பச்சை அரசியல்வாதி அதாவது நம்ம ஊர் சிதம்பரம் பேசுவது போல் உள்ளது... கற்பழிக்கப்படும் பெண்கள் பெரும்பாலும் தலித் இனப்பெண்கள் என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது...காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் தலித் இன பெண்களின் கற்புக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை மிகவும் கவலைக்குரியது.... வடமாநிலங்கள் தலித் இன மக்கள் வாழ பாதுகாப்பற்றது என்பதையே காங்கிரஸ் ஆட்சி உணர்த்துகிறது....
Rate this:
Share this comment
Cancel
ram prasad - Sri rangam,இந்தியா
08-அக்-201221:03:07 IST Report Abuse
ram prasad தமிழ் நாட்டில் நடை பெறும் மின் தடையினால் , கொலை கொள்ளை செயின் பறிப்பு அதிகரித்து இருக்கிறது என்பதும் உண்மை தானே
Rate this:
Share this comment
Cancel
ram prasad - Sri rangam,இந்தியா
08-அக்-201215:15:31 IST Report Abuse
ram prasad எங்கே கொள்ளை, செயின் பறிப்பு அதிகரிக்கும் தமிழ் நாடு என்று சொல்ல உமக்கு திராணி இருக்கா ?
Rate this:
Share this comment
sivakumar - chennai,இந்தியா
09-அக்-201207:52:04 IST Report Abuse
sivakumarசரியா சொன்னிங்க ராம்....
Rate this:
Share this comment
Cancel
Arunkumar Kumar - salem,இந்தியா
08-அக்-201214:31:14 IST Report Abuse
Arunkumar Kumar உதயகுமார் இருக்கான் வர சொல்ல வா
Rate this:
Share this comment
Cancel
alanraj - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
07-அக்-201223:40:27 IST Report Abuse
alanraj நம்ம முன்னோர்கள் இதனால் தான் சிறு வயது திருமணம் செய்தார்களா?? வரலாறு திரும்புமா?
Rate this:
Share this comment
Cancel
KUNDRATTHU BAALAA - MARUTHAI,இந்தியா
07-அக்-201218:04:52 IST Report Abuse
 KUNDRATTHU BAALAA ஊர் பஞ்சாயத்து .. நல்ல முடிவு..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை