புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரியில் தண்ணீர் திறந்து விட்டதை நிறுத்தி விட்டதால் அம்மாநில அரசு மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான விவகாரம் குறித்து முதல்வர் ஜெ., அமைச்சரவை சகாக்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
கடந்த மாதம் நடந்த காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட பிரதமர் உத்தரவிட்டார். ஆனால் பிரதமர் உத்தரவையும் மதிக்காமல் மாநில அரசு காலம் தாழ்த்தி வந்தது. இதனை கண்டித்து தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் கர்நாடகாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உடனடியாக தண்ணீர் திறந்து விட ஆணை பிறப்பித்தனர். இதனையடுத்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. தண்ணீர் திறந்து விடுவதால் கர்நாடக விவசாயிகள் பாதிக்கப்படுவர் என அங்கு கடும் போராட்டம் நடந்தது. மாநிலம் தழுவிய பந்த்தும் நடந்தது.
ராணுவ பாதுகாப்பு போடுங்கள்:
இந்நிலையில் திறந்து விட்ட தண்ணீரை கர்நாடக அரசு நிறுத்தி விட்டது. இது கோர்ட் அவமதிப்பாகும். எனவே கர்நாடக அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படும் என தமிழக முதல்வர் ஜெ., அறிவித்துள்ளார். அங்குள்ள அணையை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்றும் ராணுவ பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் கோரப்படும் என முதல்வர் ஜெ., கூறியுள்ளார். இந்த முடிவு இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கர்நாடகத்தில் இருக்கும் தண்ணீர் கர்நாடகத்திற்கு சொந்தம் ,கேரளாவில் இருக்கும் தண்ணீர் கேரளாவிற்கு சொந்தம் ,ஆந்ராவில் இருக்கும் தண்ணீர் ஆந்ராவிற்கு சொந்தம்,விடுங்க பாஸ் பேசாம தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகும் மின்சாரம் அனைத்தும் தமிழ்நாட்டுக்கே சொந்தம் என்று சொல்லி அவர்களுக்கு அனுப்பும் மின்சாரத்தை திருப்பி மின்சாரம் இல்லாமல் தவிக்கும் மாவட்டங்களுக்கு கொடுக்க வேண்டியது தான் அவர்களும் நீதிமன்றத்த நாடட்டும் ,அதற்கு பிரிண்ட் எடுக்கவும் அவர்களுக்கு மின்சாரம் தேவை அல்லவே அப்பொழுது புரியும் அவர்களுக்கு அடிப்படை தேவைகளை நிறுத்துவது எவ்வளவு கஷ்டம் என்று ,

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.