Human commission sents notice to NRI ministry | வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத் துறைக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்| Dinamalar

வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத் துறைக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

Added : அக் 12, 2012 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : சவுதி அரேபியாவில் இறந்த தொழிலாளர் உடலை இந்தியா கொண்டு வர, எந்த முயற்சியும் எடுக்காத, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத் துறைக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையம், நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராஜஸ்தானின், ஜுன்ஜுஹுனு பகுதியைச் சேர்ந்தவர், லட்சுமி நாராயண சர்மா. சவுதி அரேபியாவில், ஒரு நிறுவனத்தில், டிரைவராக வேலை பார்த்தார். கடந்த மாதம், 14ம் தேதி, திடீரென இறந்தார்.
அவர் உடலை இந்தியா கொண்டு வர, நடவடிக்கை எடுக்குமாறு, லட்சுமி நாராயண சர்மாவின் மனைவி திரவுபதி தேவி, வெளிநாடு வாழ் இந்தியர் விவகார துறையிடம் வேண்டினார். பல முறை வேண்டுகோள் விடுத்தும், அந்தத் துறை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; லட்சுமி நாராயண சர்மா உடல், இந்தியா கொண்டு வரப்படவில்லை. இதையடுத்து, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில், திரவுபதி தேவி புகார் செய்தார். அதை அடுத்து, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத் துறைக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையம், நேற்று அனுப்பியுள்ள நோட்டீசில், "நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Palanisamy Thangamani - Muscat,ஓமன்
12-அக்-201212:15:59 IST Report Abuse
Palanisamy Thangamani ப்ளீஸ். இந்த துறைக்கு மற்றும் எந்த ஒரு இந்திய தூதரகத்திற்கும் சலுகை காட்டவும் கூடாது. இவர்களால் நம் நாட்டிற்கோ, நம் மக்களுக்கோ எந்த ஒரு பயனும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Bharathi - bangalore,இந்தியா
12-அக்-201210:22:28 IST Report Abuse
Bharathi இது இந்தியா. அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ இருந்தால், அவன் குடிமகனை எப்படி காப்பத்துவது என செயலில் இறங்கி இருப்பான். இங்கே, குடிமகன் எல்லாம் ஒட்டாதானே(ஓட்டூ) இருக்கான். அதுவும் அவர் வெளிநாட்டு வோட்டு. கேவலமான அரசு.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-அக்-201201:41:06 IST Report Abuse
தமிழ்வேல் இன்னும் நான்கு வாரமா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X