காவிரி நதி நீர் ஆணைய தீர்ப்பு:மறு பரிசீலனை செய்யக்கோரி கர்நாடகா புதிய மனு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பெங்களூரு : "தமிழகத்துக்கு தண்ணீர் விட வேண்டும் என்ற, காவிரி நதி நீர் ஆணையத் தீர்ப்பை, மறு பரிசீலனை செய்யும்படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட வேண்டும்' என, கர்நாடகா சார்பில், புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காவிரி பிரச்னையில், தமிழகத்துக்கு, கடந்த மாதம், 20ம் தேதி முதல், அக்டோபர், 15ம் தேதி வரை, தினமும், 9,000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என, காவிரி நதி நீர் ஆணையம் உத்தரவிட்டது. இதை, கர்நாடகா ஏற்க மறுத்தது.தமிழக அரசு வழக்கு தொடர்ந்ததை அடுத்து, தினமும், 9,000 கன அடி தண்ணீர் திறந்து விட, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. கர்நாடக விவசாயிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே, கர்நாடக அரசு, கடந்த மாதம், 29ம் தேதியிலிருந்து அக்டோபர், 8ம் தேதி வரை, தண்ணீர் திறந்து விட்டது.பின், "தண்ணீர் திறக்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட்டில், பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. இதன் மீது, வரும், 19ம் தேதி விசாரணை நடக்கவுள்ளது.

இதற்கிடையில், காவிரி நிபுணர் குழு தாக்கல் செய்த அறிக்கையை வைத்து, தமிழகத்துக்கு, இம்மாதம், 16ம் தேதியிலிருந்து, 31ம் தேதி வரை, 8.8 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விடுமாறு, காவிரி கண்காணிப்பு குழு உத்தரவிட்டது. "என்ன ஆனாலும் சரி, தண்ணீர் திறக்க முடியாது' என, கர்நாடகா கைவிரித்தது.மேலும், காவிரி நதி நீர் ஆணைய உத்தரவை மறு பரிசீலனை செய்யுமாறு கர்நாடகா தாக்கல் செய்த மனுவை, விசாரணைக்கு ஏற்றதல்ல என, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.இதையடுத்து, மீண்டும் காவிரி நதி நீர் ஆணையம் முன், கர்நாடக அரசு மற்றொரு மனுவை சமர்ப்பித்து, மறு பரிசீலனை செய்யுமாறு பிரதமரை கேட்டுக் கொண்டது. ஆனால், காவிரி நதி நீர் ஆணையம், கர்நாடக அரசின் மனுவை பரிசீலனை செய்து, எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.இதனால், அதிருப்தியடைந்த கர்நாடக அரசு, சுப்ரீம் கோர்ட் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் மூலம், சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளது.


மனுவில், கூறியுள்ளதாவது:

கர்நாடகாவிலுள்ள, கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் உள்ள தண்ணீர் விவசாயத்துக்கும், குடி தண்ணீருக்குமே பற்றாக்குறையாக உள்ளது. காவிரி நதி நீர் ஆணையம் கொடுத்துள்ள தீர்ப்பின் படி, தமிழகத்துக்கு தண்ணீர் விட்டால், கிருஷ்ணராஜ சாகர் அணை வறண்டு போகும்.பெங்களூரு, மைசூரு, மாண்டியா, சாம்ராஜ் நகர் ஆகிய நான்கு மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். எனவே, தமிழகத்துக்கு தண்ணீர் விட இயலாது. இதனால், காவிரி நதி நீர் ஆணையம் அளித்த உத்தரவை, மறு பரிசீலனை செய்யும்படி உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ILAM THENDRAL Gizan saudiarabia - Gizan ,சவுதி அரேபியா
16-அக்-201212:06:13 IST Report Abuse
ILAM THENDRAL Gizan saudiarabia தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்ற ஒரே வைராக்கியம், இதற்காக என்னென்ன வழிகளில் முயற்சி செய்ய வேண்டுமோ அத்தனை முயற்சியையும் கொஞ்சம் கூட சலைக்காமல் செய்து வருகிறார்கள். தன் நாடு, தன் மக்கள் என்று எண்ணாமால், என் மாநிலம், என் மக்கள் என்ற குறுகிய எண்ணம் கொண்டவர்கள். இது போன்ற எண்ணம் கொண்டவர்களை தேச அளவில் ஆள விட்டால் நாடு தரை மட்டமாகிப் போகும். நேற்றுதான் கர்நாடகவில் நில அதிர்வு என்ற செய்தி பார்த்தோம்? ?
Rate this:
Share this comment
Cancel
JAY JAY - CHENNAI,இந்தியா
16-அக்-201210:05:40 IST Report Abuse
JAY JAY நமக்கும் காவேரிக்கும் ராசி இல்லை போல இருக்கிறது... இனி விசு படத்தில் வரும் " கோதாவரியை " TRY பண்ண வேண்டியது தான்...
Rate this:
Share this comment
Cancel
16-அக்-201207:10:15 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் ஆணை அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறதாம் அற்கனால் அதனை மூடி வைக்க அதிகாரம் உண்டாம் அங்குள்ள காங் தலைவர் பேசுறார்.சோனியா எதிர்க்கவில்லை.அதாவது இந்தப் பிரசனயே மத்திய அரசின் தூண்டுதலோ?
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
16-அக்-201203:18:49 IST Report Abuse
மதுரை விருமாண்டி கோர்ட்டுன்னு போயிட்டா ஆயிரம் வழிகளில் வழக்கை இழுக்கலாம், திசை திருப்பலாம்.. மம்மிக்கு இதெல்லாம் பாலபாடம்.. சொல்லித் தரத் தேவை இல்லை.. அது தெரிந்தே மக்கள் பிரச்சினை என்ற தேரை இப்படி இழுத்து நடுத் தெருவில் விட்டு விட்டு போய் விட்டார்.. இனி தேரே தானாக உருண்டு நிலைக்கு வந்தால் தான் உண்டு..
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
16-அக்-201203:04:34 IST Report Abuse
s.maria alphonse pandian நீங்கள் இருவரும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இன்னும் ஐந்து நாட்கள் இப்படியே நீதிமன்றம்..வழக்கு என இழ்த்தடியுங்கள்..அதற்குள் பருவ மழை துவங்கிவிடும்....பிறகு நீங்கள் உங்கள் அணையின் பாதுகாப்பு கருதி நீரை திறந்து விடுங்கள்..நாங்கள் உடனே காவிரி தந்த தாயே என புகழுரைகள் எழுதுவோம்...நல்ல நாடகம் நடந்து கொண்டிருக்கிறது....
Rate this:
Share this comment
16-அக்-201207:14:43 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் பிரச்னைக்கு முதல் காரணமே தன மீதிருந்த சர்க்காரிய கமிஷன் ஊழல் வழக்குகளை,வாபஸ் பெற கருணாநிதி இந்திராவின் காலில் தன்மானத்துடன் விழுந்து கெஞ்சியதனால்தானே? இந்திராவும் தன்னால் ஜெயிக்க முடியாத தமிழகத்தை மறந்துவிட்டு, கர்நாடகாவில் சட்ட விரோத அணை கட்ட உதவினார்.அதே கதியோடுதான் கருணாநிதி இப்போதும் கூட்டு ஆக மொத்தம் நிரந்தரமாக ஜெயிலில் இருக்கவேண்டியது தமிழின துரோகி கருணாநிதியே...
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-அக்-201202:44:34 IST Report Abuse
தமிழ்வேல் தண்ணீர் தராத ஆட்சிய கலைக்கனும்னு இந்த தாத்தா சொல்றாரு ..... கரண்ட் குடுக்காத பாட்டிய ஏன்னா செய்றது ?
Rate this:
Share this comment
16-அக்-201207:11:22 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் இந்தியாவில் எதனை மாநிலங்களில் நாள் முழுக்க பவர் கட் இல்லை? முக்கியமாக தாத்தா கூட்டணி மாநிலங்கள்? ...
Rate this:
Share this comment
Kuwait Tamilan - Salmiya,குவைத்
16-அக்-201212:00:18 IST Report Abuse
Kuwait Tamilanஎன்னப்பா போயஸ் சோம்பு சத்தம் ரொம்ப பலமா இருக்கு. குஜராத் முதல்வர் உங்க மம்மியோட நண்பர்தானே. அதே மாதிரி இங்கயும் கரண்ட் கொடுக்க வேண்டியது தானே....
Rate this:
Share this comment
Cancel
Partha Sarathy - chennai,இந்தியா
16-அக்-201202:40:27 IST Report Abuse
Partha Sarathy டெல்லி: நாட்டை எத்தனையோ ஊழல்கள் உலுக்கி வரும் நிலையில் ஏழை விவசாயிகளின் அடிவயிற்றில் அடித்து அடிமாட்டு விலைக்கு பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை வேட்டையாடிய பெருங்கொடுமையில் சோனியா காந்தி குடும்பம் ஈடுபட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்