University student gangraped in bangaluru | பல்கலை மாணவி கற்பழிப்பு:கும்பல் வெறிச்செயல் | Dinamalar
Advertisement
பல்கலை மாணவி கற்பழிப்பு:கும்பல் வெறிச்செயல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பெங்களூரு: காதலனுடன் வந்து கொண்டிருந்த, பெங்களூரு பல்கலை, சட்டக் கல்லூரி மாணவி, எட்டு பேர் கும்பலால் கடத்தப்பட்டு, பல்கலை வளாகத்திலேயே கற்பழிக்கப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு பல்கலையில், இரண்டாம் ஆண்டு சட்டப் படிப்பு படித்து வரும் மாணவி மணீஷா, 21, உண்மையான பெயரை போலீசார் வெளியிடவில்லை.

நேபாளத்தை சேர்ந்த இவர், தன் காதலன் நிர்மல் குமாருடன், கடந்த சனியன்று இரவு, 9:30 மணியளவில், காரில் பல்கலை வளாகத்தில் உள்ள, விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, பல்கலை நிர்வாக கட்டடம் அருகே, எட்டு பேர் கும்பல், அவர்களின் காரை வழி மறித்தது. காரிலிருந்து இறங்கிய நிர்மல் குமாரை தாக்கிய கும்பல், மாணவியை மிரட்டி, புதருக்குள் இழுத்து சென்றது. உடன், அப்பகுதியில் நின்றிருந்த, ஊர்காவல் படையினரிடம், நிர்மல் குமார் தகவல் தெரிவித்தார். அவர்கள், அடர்ந்த புதர் பகுதிக்குள், மாணவியை தேடத் துவங்கினர். ஒரு மணி நேரத்துக்கு பின், பல்கலை வளாக அடர்ந்த புதர் பகுதியிலிருந்து துணிகள் கிழிந்த நிலையில், மாணவி தனிமையில் வருவதை கண்டு திடுக்கிட்டனர்.

மாணவி கூறுகையில், ""எட்டு பேர் கும்பல், என்னிடமிருந்த மொபைல் போனை பறித்ததோடு, என்னை கற்பழித்தது,'' என்றார். இதையடுத்து, நிர்மல்குமார், பெங்களூரு ஞானபாரதி போலீஸ் ஸ்ஷேனில் புகார் செய்தார். பெங்களூரு, ஐ.பி.எம்., நிறுவனத்தில் பணிபுரியும் நிர்மல் குமார், இரு வாரங்களுக்கு முன், சமூக இணைய தளத்தின் மூலம், மாணவியுடன் அறிமுகமாகி உள்ளார். முதன் முறையாக இருவரும் சந்தித்த தினத்தன்றே, இச்சம்பவம் நடந்துள்ளதாக விசாரணையில் தெரிந்தது.

பெங்களூரு, மேற்கு துணை போலீஸ் கமிஷனர் (மேற்கு) சித்தராமப்பா கூறுகையில், ""மாணவி கொடுத்த புகார் படி, கற்பழிப்பு வழக்கு பதிவு செய்துள்ளோம். அவரது உடம்பில் எவ்வித காயங்களோ, பலாத்காரமாக கற்பழித்ததற்கான, அடையாளங்களோ இல்லை. மருத்துவ பரிசோதனைக்கு பின், முழுமையான தகவல்களை தெரிவிக்க முடியும்,'' என்றார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Satish - யாதும் ஊரே யாவரும் கேளிர்.,இந்தியா
16-அக்-201220:42:24 IST Report Abuse
Satish மிகவும் வேதனைக்குரிய, கண்டனத்திற்குரிய குற்றம்.. பெண் வாசகிகள் ஆண்களை மட்டும் குறை கூறுவதும், ஆண் வாசகர்கள் பெண்களை மட்டும் குறை கூறுவதும் நியாயம் இல்லை.. நாட்டின் மானம், குடும்ப மானம், தன்மானத்தை காக்க இருபாலருக்கும் சரி பாதி பொறுப்பு உண்டு..இருந்தாலும் கதையில் "எங்கோ இடிக்கிறது".. விட்டுப் போன புள்ளிகள் காவல் துறையின் விசாரணையில் இணைக்கப்படும் பொழுது கதையின் முழு உருவமும் தெரிய வரும்.. அந்த கும்பலில், பெண்ணின் முன்னாள் ஆண் நண்பர்கள் யாரேனும் இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது...இருப்பினும் உண்மை தெரியும் வரை, ஒரு பெண்ணை குற்றம் சாற்றுதல் பாவமாதலால் கமென்ட்டில் கண்ணியம் காப்போம்
Rate this:
0 members
1 members
1 members
Share this comment
Cancel
ganapathy - khartoum,சூடான்
16-அக்-201216:10:06 IST Report Abuse
ganapathy காதலிப்பது சரியாகவும் இருக்கட்டும். இரவு நேரத்தில் ஊர் சுற்ற வேண்டாமே. எல்லா வங்கிகளிலும் பணத்தை வைத்து இருக்கிறார்கள். ஆனால் பாதுகாப்பு என்ற பெயரில் துப்பாக்கி ஏந்திய போலீசார், பாதுகாப்பு கமரா, இரும்பு பெட்டகம், அபாய எச்சரிக்கை மணி, இரும்பு கதவை பாதி திறந்து சங்கிலி போட்டு வைத்தல் போன்றவற்றை செய்கிறார்கள். பெண்ணும் தன்னுடைய கற்பை பாதுகாக்க வேண்டும். எல்லாம் திறந்து கொண்டு போவது (குட்டை பாவாடை, மார்பை கட்டும் மேல் சட்டை ) ஆபத்தை விலைக்கு வாங்க கூடாது.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
True Aruvaa - sarcelles,பிரான்ஸ்
16-அக்-201213:37:38 IST Report Abuse
True Aruvaa மல்லீஸ்வரன் என்கிற உத்தமன் வருகிறார் ,செம்பெடுத்து உள்ல வைங்கப்பா, கல்லூரி வாழ்கையில் காதலிக்காத ஒருவரை காட்டமுடியுமா , அது அந்த வயதுக்குரிய விஷயங்கள்,, அதற்காக ஒரு அப்பாவிபெண்ணை எட்டுப் பேர் கற்பழித்தது ஞாயமாகுமா ?
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
s.raja - torronto,கனடா
16-அக்-201223:12:06 IST Report Abuse
s.rajaஅட போய்யா வந்துட்டாரு, நீயும் உன் கருத்தும் .........
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Cancel
பி.டி.முருகன் - திருச்சிராப்பள்ளி ,இந்தியா
16-அக்-201209:29:40 IST Report Abuse
பி.டி.முருகன்    கதையில் எங்கோ இடிக்கிறதே. நடந்ததுஎன்ன என்பது இனிமேல் தான் தெரியும் போல.
Rate this:
0 members
1 members
1 members
Share this comment
Cancel
அந்நியன் - வயல் வெளிகள்,இந்தியா
16-அக்-201209:18:56 IST Report Abuse
அந்நியன் மொதல்லே அந்த நிர்மலை நல்லா கவனிச்சு விசாரிங்க.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Malleeswaran - Dindigul,இந்தியா
16-அக்-201206:47:38 IST Report Abuse
Malleeswaran சேட்டிங்கில் காதலர்களாகி ஊர் சுற்றியுள்ளனர்.இரண்டு பேரையுமே நன்றாக விசாரித்தாலே பல உண்மைகள் வெளிவரும் போல் தெரிகிறது.நேபாளத்திலிருந்து வந்தவள் ஒழுங்காக படிப்பதை விட்டு விட்டு இப்படி ஊர் சுற்றினால் இதெல்லாம்தான் நடக்கும்.எல்லாப் பெண்களுக்கும் இது ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும்.மாணவர்களே,மாணவிகளே படிக்கத்தான் நீங்கள் கல்லூரிக்குப் போகின்றீர்கள் இப்படி காதல் கீதல் என்று சுற்றி வீணாக சீரழியாதீர்கள் .
Rate this:
0 members
1 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்