Real Story | திரு(மா)மலை வாசா...கோவிந்தா.... -எல்.முருகராஜ்| Dinamalar

திரு(மா)மலை வாசா...கோவிந்தா.... -எல்.முருகராஜ்

Updated : அக் 20, 2012 | Added : அக் 20, 2012 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

திருமலை பிரம்மோற்சவ விழாவிற்கு கடந்த பல வருடங்களாக படம் எடுக்க போய் வருகின்றேன். அங்கு பக்தர்களுக்கு வழங்கப்படும் சுவையான அன்னதானம், பராமரிக்கப்படும் சுகாதாரம், திரும்பிய பக்கம் எல்லாம் கட்டி வைக்கப்பட்டுள்ள கழிப்பறை, நடந்தே மலையேறி வரும் பக்தர்களுக்கு தரப்படும் முன்னுரிமை, இலவசமாக வந்தாலும் சரி, பணம் கொடுத்து வந்தாலும் சரி, எல்லோருக்குமான ஒரே தரிசன முறை, வயது முதிர்ந்தோர்களுக்கும், கைக்குழந்தை வைத்துள்ள தாய்மார்களுக்கும் தரப்படும் தனி சலுகை, யாருக்காகவும் காத்திருக்காமல் குறிப்பிட்ட நேரத்தில் சுவாமி புறப்பாடு நடத்துவது என்பது போன்ற பல விஷயங்கள் என்னை ஆச்சரியப்படுத்தி உள்ளது.இதையும்தாண்டி சுவாமிக்கு அணிவிக்கப்படும் மாலைகள் இந்த வருடம் என் கவனத்தை அதிகம் ஈர்த்தன.
பல வண்ணத்தில், பல ரகங்களில், சிறிதும், பெரிதும், பிரம்மாண்டமுமாய், ஆனால் கணணியில் போட்டு தயார் செய்தது போல, ஒரு சீராக, அழகாக, அமைப்பாக இருக்கும் இந்த மாலைகள் எங்கு, எப்படி உருவாக்கப்படுகின்றன என்ற தேடல் என்னை கொண்டு போய் அதற்கான இடத்தில் சேர்த்தது.


அந்த இடம் திருமலை- பாபவிநாசம் சாலையில் உள்ள தோட்டக்கலை துறையாகும். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நிர்வாகிக்கப்படுகிறது.அங்கு போனபிறகு, இவ்வளவு மாலைகள் செய்யும் வேலைக்கும் பின்னால் இருப்பவர் ராஜபாளையத்தைச் சேர்ந்த தமிழர் ராமமூர்த்தி என்பதை அறிந்ததும் கூடுதல் மகிழ்ச்சி.
மொழியின் வழியாக இணைந்ததும், சுவாமி மாலைகள் குறித்து ராமமூர்த்தி நிறைய விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அதிலிருந்து...


சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் ஒவ்வொரு நாளும், மாலைக்கு என்று பத்து கிலோ பூக்கள்தான் தேவைப்பட்டது. அந்த பூக்களையும் கோவிலுனுள் உள்ள அர்ச்சகர்களே மாலைகளாக்கி கொண்டனர். மாலைகளையும் கட்டிக்கொண்டு பூஜைகளையும் செய்வது என்பது சிரமமாக இருக்கவே, வெளியே ஒரு கட்டடம் பிடித்து மாலைகள் கட்டி கொண்டு வரலாம் என்று முடிவு எடுத்தனர்.
அப்போது மாலைகள் கட்டுவதில் எனது அப்பா ஈஸ்வர் மிகவும் பிரபலம், அவரை அழைத்த கோயில் நிர்வாகம் இந்த வேலையை ஏற்றுக்கொள்ள முடியுமா என்று கேட்டதும், இறைவன் கொடுத்துள்ள காரியம் என்று எந்தவித தயக்கமும் இன்றி உடனே ஒப்புக்கொண்டார். அதன்பிறகு அவரது கைவண்ணத்தில் மாலைகளுக்கு தனி மரியாதை ஏற்பட்டது.


பிறகு அவர் தனக்கு தெரிந்த எல்லா கலையையும் எனக்கு கற்றுக்கொடுத்தார், அவருக்கு பிறகு இந்த பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டு கிட்டத்தட்ட நாற்பது வருடமாகப் போகிறது.
இத்தனை வருடங்களில் எனது வசிப்பும், வாசிப்பும், சுவாசிப்பும் மலர்களுடனும், மாலைகளுடனுமே அமைந்துவிட்டது.


ஆரம்பத்தில் பத்து கிலோ பூக்களே நன்கொடையாக வந்த காலம் போய் இத்தனை வருடங்களில் பூக்களின் வரத்து கூடிவிட்டது. சாதாரண நாட்களில் 150 கிலோ பூக்களும், பிரம்மோற்சவம் போன்ற நாட்களில் 400 கிலோ பூக்களும் நன்கொடையாக வருகின்றன.
சென்னை, ஸ்ரீரங்கம், கும்பகோணம், பழனி, அவிநாசி என்று தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் நாள் தவறாமல் பக்தர்கள் பூக்களை அனுப்பிக் கொண்டு இருக்கின்றனர். மல்லிகை, முல்லை, ரோஜா, சாமந்தி, மற்றும் கோழிகொண்டை பூக்கள் என்று பல ரகமான பூக்கள் இங்கு வருகின்றன. இதனை வைத்து நாங்கள் பலவித மாலைகள் செய்து வருகிறோம். மலர் மாலைகள் மட்டுமின்றி வெட்டிவேர் மாலை, குருவேர் மாலை என்று பல ரக மாலைகள் தயார் செசய்கிறோம். கருடவாகனத்தின் போது சுவாமி அணிந்துவரும் மாலை மட்டுமே எட்டு அடி நீளமாகும்.


எனது தலைமையில் நிரந்தரமாக நாற்பது பணியாளர்கள் மாலைகள் தயாரிப்பு வேலையில் உள்ளோம், பிரம்மோற்சவ நாட்களில் இருநூறுக்கும் அதிகமான பெண் பக்தர்கள் தொண்டு போல இங்கு வந்து வருடந்தவறாமல் மாலைகள் தயாரிப்பில் உதவி செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு ஆரம்பித்து நடை சாத்தப்படும் வரை மூலவர் நகைகள் எதுவும் அணியாமல் வெறும் மலர்களையே ஆடைகளாகவும், ஆபரணமாகவும் அணிந்திருப்பார், பூலாங்கி சர்வதர்சனம் என்று இதற்கு பெயர்.பெருமாளின் உயரத்திற்கு ஆபரணங்கள் போலவே செய்யப்படும் இந்த மலர் ஆபரணத்தை பெருமாள் அணிந்திருப்பதை பார்த்தவர்கள் மெய்மறந்து போவது நிச்சயம்.


மேலும் இப்போது மலர்களின் நடுவே ஆரஞ்சு, அன்னாசி, ஆப்பிள் போன்ற பழங்களை வைத்து தோரணம் தயாரித்து அதனை, மகாதுவாரம் எனப்படும் ராஜகோபுர வாசலையும், நவராத்திரி கொலுமண்டபத்தையும் அலங்கரிக்கிறோம், பார்த்தவர்கள் வியக்கிறார்கள் பார்க்காதவர்களை பார்க்க அழைக்கிறார்கள்.
இப்போதுதான் தேவஸ்தானத்தில் நிறைய பணம் இருக்கிறதே, எதற்கு நன்கொடையாக பூக்கள் வாங்க வேண்டும் நாமே நமது தேவைக்கு சொந்தமாக வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்து அதற்காக பணத்தை ஒதுக்கிவைத்து நீண்ட நாட்களாகிறது, ஆனால் அதில் இருந்து ஒரு பைசா கூட இன்னும் செலவழிக்கவில்லை, காரணம் எங்களது பூக்கொடையை மட்டும் வேண்டாம் என நிறுத்திவிடாதீர்கள் என ரொம்பவே கேட்டுக்கொண்டு இப்போது இன்னும் கூடுதலாக தமிழக பக்தர்கள் நாள் தவறாமல் கொடுத்துக் கொண்டு இருக்கின்றனர்.


பெருமாளுக்கு கொஞ்சம் கிள்ளி கொடுத்தால் அவர் அள்ளிக் கொடுப்பார் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள் போலும் என்று புன்சிரிப்புடன் சொல்லி முடித்துக் கொண்டார் ராமமூர்த்தி.Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri - Vellore  ( Posted via: Dinamalar Android App )
22-நவ-201221:31:04 IST Report Abuse
Sri Sir,u r great !
Rate this:
Share this comment
Cancel
karikalan - angorwat,கம்போடியா
23-அக்-201211:26:13 IST Report Abuse
karikalan சிறக்கட்டும் உம் இறை தொண்டு. வாழ்த்துக்கள். திருமலைவாசா கோவிந்தா
Rate this:
Share this comment
Cancel
Enrum anbudan - dammam,சவுதி அரேபியா
23-அக்-201206:07:44 IST Report Abuse
Enrum anbudan koduthu vaithar ayya neengal......
Rate this:
Share this comment
Cancel
Kumar S - மதுரை,இந்தியா
22-அக்-201208:27:12 IST Report Abuse
Kumar S அய்யா ராம மூர்த்தி.. உங்களை நினைத்தால் எனக்கு மிக மிக பொறாமையாக உள்ளது.... எத்தனை பேருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்????
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் - salem,இந்தியா
21-அக்-201209:20:17 IST Report Abuse
இந்தியன் ஈஸ்வர சேவையே மோக்ஷத்திற்கு ஆன சிறந்த வழி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை