ஊழியர்களின் பி.எப்., பணத்தை "லபக்'கிய நீதிபதிகள்: சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தது சி.பி.| Dinamalar

ஊழியர்களின் பி.எப்., பணத்தை "லபக்'கிய நீதிபதிகள்: சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தது சி.பி.

Added : ஆக 08, 2010
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி: வட மாநில நீதிபதிகள் மூன்று பேர், ஊழியர்களின் பி.எப்., பணத்திலிருந்து வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் குவித்திருப்பது, சமீபத்திய சி.பி.ஐ., விசாரணையில் தெரிய வந்துள்ளது.


உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்ட நீதிபதிகள் ஆறு பேர், காஜியாபாத் மாவட்ட கோர்ட்டின் மூன்று மற்றும் நான்காம் நிலை ஊழியர்களின் கோடிக்கணக்கான ரூபாய் வருங்கால வைப்பு நிதியைச் சுருட்டி விட்டதாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இதையடுத்து, இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் சமீபத்தில் சி.பி.ஐ., சில தகவல்களை தாக்கல் செய்துள்ளது. அதில், காஜியாபாத் மாவட்ட கோர்ட் நீதிபதிகளான ஆர்.பி.யாதவ், ஆர்.என்.மிஸ்ரா மற்றும் ஏ.கே.சிங் ஆகியோரின் பதவிக் காலமான 2003 ஜனவரி - 2006 நவம்பர் வரையிலான காலகட்டத்தில், இரண்டு கோடியே 73 லட்ச ரூபாய் பி.எப்., பணத்தைச் சுருட்டி என்னென்ன வாங்கினர் என்று ஒரு பட்டியலை அளித்துள்ளது.


ஆர்.பி.யாதவ் தன் வீட்டுக்கு தினசரி தேவையான காய்கறிகள், பழங்கள், பாத்திரங்கள் மற்றும் உணவுப் பொருட்கள், தங்க நகைகள், விலை உயர்ந்த ஆடைகள் வாங்கியுள்ளார்.  மேலும் அவர், தன் காஜியாபாத் வீட்டுக்கு விலை உயர்ந்த மரச்சாமான்களையும், அவரது மகன் நிகில் யாதவின் அலகாபாத் வீட்டுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரச்சாமான்களையும் வாங்கியுள்ளார். நீதிபதி மிஸ்ராவும், யாதவை அப்படியே பின்பற்றியுள்ளார். அவரது மகன் சுனில்குமாரின் அலகாபாத் வீட்டிற்கு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரச்சாமான்கள் வாங்கியுள்ளார். மேலும், காஜியாபாத்திலிருந்து தன்பாத்துக்கு மரச்சாமான்கள் கொண்டு வரவும், காஜியாபாத்திலிருந்து அலகாபாத்துக்கு தன் வீட்டை மாற்றவும் பி.எப்., பணத்தைப் பயன்படுத்தியுள்ளார். நீதிபதி ஏ.கே.சிங் தனக்கு முந்தைய நீதிபதிகளான மிஸ்ரா, யாதவைப் பின்பற்றினாலும் வித்தியாசமாகவும் செயல்பட்டுள்ளார்.  தன் வீட்டுப் பெண்களுக்காக, ஒரு லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அழகு சாதனப் பொருட்கள் வாங்கியுள்ளார். மேலும் 82 லட்சம் ரூபாய், பி.எப்., வங்கிக் கணக்கிலிருந்து மோசடி செய்து எடுத்துள்ளார்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை