பதிவு செய்த நாள் :
கருத்துகள் (190)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

சென்னை:""தேவையில்லை எனக் கூறி, டில்லி மின் வாரியம் ஒப்படைக்கும், 1,721 மெகாவாட் மின்சாரம் முழுவதையும், தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்,'' என, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, அவர் எழுதியுள்ள கடித விவரம்: தமிழகத்தில் நிலவி வரும் மின் பற்றாக்குறையை, ஓரளவுக்கு சமாளிக்க, 1,000 மெகாவாட் மின்சாரத்தை, மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என, நான் ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தேன். ஆனால், இதுவரை, 100 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தமிழகத்திற்கு ஒதுக்கப் பட்டுள்ளது.அதிலும், 78 மெகாவாட் மட்டுமே கிடைக்கிறது. தென் மண்டலத்தை தாண்டி, வெளி மாநிலங்களில் இருந்து, மின்சாரம் வாங்குவதில், மின் கட்டமைப்பில் நிலவி வரும் நெருக்கடி, தென்மேற்கு பருவமழை பொய்த்தது போன்ற காரணங்களால், தமிழகத்தின் மின் பற்றாக்குறை மிகவும் கடுமையாக உள்ளது.
மின் உற்பத்திக்கும், தேவைக்கும் இடையே இடைவெளி அதிகரித்து, தென் மண்டலத்திலேயே, அதிகளவாக, 4,000 மெகாவாட் அளவிற்கு, தமிழகத்தில் மின் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், மின் வெட்டு அதிகரிக்கப்பட்டு, மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பருவமழை சரிவர பெய்யாதது மற்றும் தேவையான அளவு மின் வினியோகம் இல்லாததால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது, உணவு உற்பத்தியையும் பாதித்துள்ளது.எனவே, தாங்கள் உடனடியாக தலையிட வேண்டும்; மின் கட்டமைப்பில் நிலவும் நெருக்கடியை, மாற்றியமைக்க உத்தரவிட்டு, தமிழகத்திற்கு 1,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்க, வழி ஏற்படுத்த வேண்டும்.டில்லி மின் வாரியம், இந்தாண்டு நவம்பர் 1ம் தேதி முதல், அடுத்தாண்டு மார்ச் மாதம் 31ம் தேதி வரை, பல்வேறு மத்திய மின் நிலையங்களில், நாள் முழுவதும் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இருந்து, 230 மெகாவாட் மற்றும் நள்ளிரவு, 12:00 முதல், அதிகாலை, 6:00 மணி வரை உற்பத்தியாகும் 1,491 மெகாவாட் மின்சாரத்தையும், மத்திய அரசிடம்

ஒப்படைக்க முடிவு எடுத்துள்ளது.இந்த மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கு வழங்குமாறு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர், மத்தியமின்சாரத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.எனவே, டில்லி ஒப்படைக்கும் மின்சாரம் முழுவதையும், தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்து, மின் கட்டமைப்பில் இருந்து, அந்த மின்சாரத்தை பெறுவதற்கான ஏற்பாடு செய்ய உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கோரிக்கை பரிசீலிக்கப்படும்""தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும் என்ற, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை, பிரதமர் காலம் தாழ்த்தாமல் பரிசீலிப்பார்,'' என, மத்திய மின் துறை இணை அமைச்சர் வேணுகோபால் கூறினார்.

திருவனந்தபுரத்தில் இருந்து, நேற்று மாலை, 4:30 மணிக்கு சென்னை வந்த, மத்திய மின் துறை இணை அமைச்சர் வேணுகோபால், விமான நிலையத்தில் அளித்த பேட்டி:தமிழகத்தில் கடுமையான மின் வெட்டு நிலவி வருவதால், மத்திய மின் தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் கடுமையான மின் வெட்டு இருப்பது, மத்திய அரசு அறிந்த விஷயம். தமிழக முதல்வரின் கடிதம், மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது.முதல்வரின் கோரிக்கையை காலம் தாழ்த்தாமல், பிரதமர்

Advertisement

மன்மோகன் சிங் பரிசீலிப்பார். கூடங்குளம்அணுமின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, முதலில் மத்திய மின் தொகுப்பிற்கு அனுப்புவோம். அதன் பிறகு, தமிழகத்திற்கு அதில் எவ்வளவு பங்கு, மற்ற மாநிலங்களுக்கு எவ்வளவு பங்கு என்பதை, பிரதமர் முடிவு செய்வார்.மத்திய மின் தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் மின்சாரத்தில் பெரும் பகுதி, சேதாரமாகச் சென்று விடுவது உண்மை தான். இப்பிரச்னைக்கு தீர்வாக, மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரத்தை தென்மாநிலங்களுக்கு கொண்டு வர, ராய்ப்பூர் வழியாக, புதிய மின் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.வரும், 2014ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் இப்பணிகள் முடியும். அதன் பிறகு, மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்கும் மின்சாரம், மாநிலங்களுக்கு சேதாரம் இல்லாமல் கிடைக்கும்.இவ்வாறு, வேணுகோபால் கூறினார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (190)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vakkeel VanduMurugan - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ
26-அக்-201203:07:40 IST Report Abuse
Vakkeel VanduMurugan மத்திய அரசு தமிழகத்துக்கு மின்சாரம் கொடுத்தா, திமுக மத்திய அரசுக்கு கொடுக்கிற ஆதரவ வாபஸ் வாங்கிரும். அப்ப எப்படி மத்திய அரசு மின்சாரம் கொடுக்கும்
Rate this:
Share this comment
Cancel
A JEYARAJ - madurai at Talahassee ,USA,இந்தியா
25-அக்-201223:45:11 IST Report Abuse
A JEYARAJ முதலிலில் ஜெயா மம்மிக்கு ஈகோ குறையனும் கொஞ்சம் நான் தான் என்ற மமதையும் மண்ட கனமும் குறையனும். இவகளுக்கு விக்டோரியா மாகராணி என்று நினைப்பு. ஆனானப்பட்ட இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில் உலகபோரின் போது ஜெர்மனி குண்டு வீசி துளைத்தபோது கொவ்ரவம் பார்க்காமல் அமெரிக்க ஜனாதிபதி ரூச்வெல்ட்டை நேரில் பலமுறை வெள்ளை மாளிகையில் சந்தித்து (கெஞ்சி ) கேட்டுக்கொண்டதின்பெரில் அமைச்சரவையை கூட்டி அனுமதி பெற்று இங்கிலாந்த்துக்கு ஆதரவாக படைகளையும் சப் மரின்களையும் அனுப்பி உதவி செய்து போரில் தோல்வியிலிருந்து காத்து இட்லரை வெல்ல முடிந்தது. இந்த ஜெயா, கூடங்குளத்த தொடங்க விடாமல் கைக்கூலி உதயகுமாருக்கு மறைமுக உதவி செய்து, சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து, தமிழ்நாட்டை இருளில் மூழ்கசைவாராம், பிரதமர் கூட போனில் பேச மாட்டார், நேரில் சந்திக்க மாட்டார், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை கேட்டு டெல்லி சென்று வலியுறுத்த மாட்டார் ,,, ஆனா நாய ஒழிக்க அமைச்சரவையை ( அடிமைகளும், அல்லகைகளும்,நிறைந்த அவை ) கூட்ட்டட்டி ஆலோசனையாம். இவக மின்னுற்பத்திக்கு எந்த திட்டமும் போடமாட்டான்கலாம். தொடங்கிய பல்வேறு திட்டங்களை தொடர்ந்து முடிக்கமாட்டாகலாம். கலவரம் செய்யும் கைக்கூலி உதயகுமாரை கைது செய்து உள்ளே தள்ளாமல், கடிதம் மட்டும் எழுதுமா, உடனே மகாராணியார் உத்தரவுக்கு அடிபணிந்து மின்னல் வேகத்துலே மின்சாரம் தரணுமாம் . இதுலவேற " மத்தியஅரசு, தமிழ்நாட்டை வாழவிடாமல் தடுக்கிறதாம் " இப்படி வாய் கிழிய சவடால் பேச்சு.. தமிழக மக்கள் ஓட்டுப்போட்டு மகாராணியையும், மற்ற மன்குனிகளையும் ஆட்சியில் உட்கார வைத்த பாவத்திற்கு, பகலிலும் இருட்டிலும், செய்ன பறிகொடுத்து விட்டு விலையில்ல ஆடு மாடு மேய்க்க வேண்டியதுதான். எதையோ எடுத்து எங்கேயோ அடித்துக்கொள்ளலாம்
Rate this:
Share this comment
babu - tiruchi,இந்தியா
30-அக்-201202:53:24 IST Report Abuse
babuதமிழ் நாட்டுக்கு எது நல்லதோ அதுவே அம்மா செய்கிறார்...
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
01-நவ-201202:32:47 IST Report Abuse
தமிழ்வேல் பாபு- அப்போ கூடன் குலத்துக்கு முட்டுக்கட்டை போடாம இருந்திருக்கணும்...திரு உதயகுமார் மீது பல புகாரும் வழக்கும் உள்ள போது அவருக்கு யார் பாதுகாப்பு தருகின்றார்கள் ? எதனால் மின்சார விஷயமாக பிரதமரை சந்திக்க தயங்குகின்றார் ?...
Rate this:
Share this comment
Cancel
p.mohamed rafik,kuruvadi - hafar al batin,இந்தியா
25-அக்-201223:44:28 IST Report Abuse
p.mohamed rafik,kuruvadi ஆற்காடு வீராசாமி எப்படி எல்லாம் திட்டு வாங்கினார் போன ஆட்சியில். மின்சார பிரச்சினை காரணமாக தான் dmk தோற்று admk ஆட்சியை பிடித்தது. வரலாறு மீண்டும் திரும்புகிறது. ஆனால் தமிழ்நாடு மக்கள் தான் பாவம். யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் சந்தோசமாக இருக்க முடிய வில்லை.
Rate this:
Share this comment
Cancel
sunil - TUTICORIN,இந்தியா
25-அக்-201223:41:59 IST Report Abuse
sunil Unless central govt. shower their blessing towards the people of tamil nadu, nothing will happen for power cut problem. We call ourself as quasi fedaral tem of govt, wherein we ought to be at the mercy of central govt. for various issues like, power, water etc. We have no other native except to pray God for the blessing of central govt.
Rate this:
Share this comment
Cancel
sunil - TUTICORIN,இந்தியா
25-அக்-201223:26:23 IST Report Abuse
sunil Everyone talks about solar power generation at home. Recently, I have made discussion with a seller. Seller says that solar panels are available for Rs.90 to 150 per watt. FIRSTLY, USER DOES NOT HAVE KNOWLEDGE ABOUT THE TECHNOLOGY. One should fit the correct type of panel for particular area, to optimum performance. Without correct knowledge regarding what type of panel to be fitted, there is amble of chance, the user may be cheated by lower value panel for higher prices - SECONDLY, NO SAFETY FOR SOLAR PANNELS AT HOUSE TOPS. You cannot put any fence to protect the panel, which will hinder the light falling, and subsequent generation of powers. Any one can easily steals the plates by just removing few screws and bolt on the panel. Once the market starts for the plates, these panel will be easily robbed and sold for few thousands whereas it value stand more than lakh - THIRDLY, NOT COST EFFECTIVE. For the best 1 KW unit, one must sp atleast two lakhs .. Moreover, once in three years you have to change 3 batteries, that would cost Rs.36000/-. Without applying depreciation for the Unit, cost per year : 18,000 (interest on Rs.2 lakhs) + 12,000 for battery = Rs.30000/- i.e. equal to every month expiture of Rs. 2,500 for generation of 5 units of power per day. You gain 5 Units of power per day and therefore, for 30 days = 150 Units = Rs. 600/-. Even after fitting solar panel, you are looser of Rs.1,900 every month. FOURTHLY, after warranty period, you should ready to sp for maintenance at your cost or Annual Maintenance Contract Fee, which will further add on to your per month expiture, FIFTHLY its performance is purely dep on the nature&39s support. On cloudy days, hardly any chance for power generation. CONCLUSION: SOLAR POWER GENERATION NOT VIABLE FOR INDIVIDUAL HOUSES .............. SUGGESTIONS: FIRST: In order to curtail the usage of any product, the value must be increased to abnormal level. As such, Govt. should give first 200 units of power at present cost. Thereafter, 200 to 500 Units, they have to charge Rs.10 and next 500 to 1000 they have to charge Rs.20. This way, the usage will come down. Atleast, people won&39t run 2 to 3 AC in a house. Even if they use, there won&39t be any loss to Govt. because they will be paying Rs.10 or 20 per unit but govt. purchases the EB from private firm about Rs.7. Owing the cost, the big Hotels etc will automatically move for own power generation. SECOND: Govt. should allow private firm to establish a power generation unit at each District Head Quarters and allow to sell the power through the existing EB poles for the cost as they wish i.e. Rs.7 or above. Those who wish to have uninterrupted power, can get the power from the private firm and simultaneously they can use the Govt. Power also as and when they receive. Local generation will have less loss and good monitoring of power distribution. This tem is something like local cable tem and DTH viewing. At one&39s own choice, if he can afford, let him pay higher prices for uninterrupted power from private firm. The private firm can either generate the power by Power Generator of Solar panel. Govt. should only provide them some area on lease for certain period to meet the present issue. BEFORE CONCLUDE I WISH TO STATE: IT IS POINTLESS TO BLAME ANYONE FOR PRESENT POWER SHORTAGE ..... ONLY WE HAVE TO THINK TO CURTAIL THE USAGE BY ANY MEANS (INCREASE THE COST AS EMERGENCY MEASURE) AND DISTRIBUTION OF POWER BY PRIVATE FIRM. One must remember, to run a fan at night to have a sound sleep, one must sp Rs.30 per hour for mini honda generator. So, for whole night, total cost would be 8 x 30 = Rs.240. Instead of sping Rs.240/- one can very well sp Rs.10/- (per unit ) for two days to have a sound sleep. Now, one should decide, whether he is willing to sp Rs.240 per night or Rs.5 per night?
Rate this:
Share this comment
Cancel
desadasan - mumbai,இந்தியா
25-அக்-201222:58:59 IST Report Abuse
desadasan கூடங்குளம் கூடி வரவில்லை..கூடாத விஷயத்திற்கு குடவோலை அனுப்புகிறார்...வழியும் மின்சாரத்தை வழியனுப்ப, வழிப்படுத்த சொல்லுகிறார்..அரசியல் பார்க்காமல் அவசியம் பார்த்து மத்திய அரசு செயல் படுமா? நாம் வழக்கம் போல் கருணா ,ஜெயா சண்டையை விமர்சித்துக் கொண்டிருப்போம்..நமக்கு மின்சாரத்தை விட இது தான் ருசியான தேவையான விஷயம்..
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
26-அக்-201201:25:14 IST Report Abuse
தமிழ்வேல் உண்மை......
Rate this:
Share this comment
Cancel
Marian - Coimbatore,இந்தியா
25-அக்-201220:29:26 IST Report Abuse
Marian என்னதான் கடிதம் எழுதினாலும் பிரயோஜனம் இல்லை. ஒரு முறை நேரில் செயல் படாத பிரதமரை சந்திக்க வேண்டும். அப்பதான் நடக்கும்.இந்த விஷயத்தில் ஈகோ பார்க்க கூடாது .
Rate this:
Share this comment
Cancel
டெல்லி பாலா - Tiruppur,இந்தியா
25-அக்-201218:18:13 IST Report Abuse
டெல்லி பாலா வேலூர் மாவட்டத்திலே எமது நண்பர் சூரிய ஒளியின் மின்சாரத்தை பயன்படுத்தி, வங்கியின் உதவியுடன் 4 cfl cost is 29,500 நம்பகமான டாட்டா பொருளை வாங்கி பொருத்தியுள்ளார். மிகவும் அருமையான திட்டம். மேலும் விவரங்களுக்கு விஜய குமார் 9840961866 . வெறும் பேச்சோடு இல்லாமல் செயலில் இறங்கிய ஏன் நண்பருக்கு மிக்க நன்றி. இது மற்றவளுக்கும் உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
Rate this:
Share this comment
babu - tiruchi,இந்தியா
30-அக்-201202:38:32 IST Report Abuse
babuசோலார் தகடுகள் முறை சரிவராது போனது என்றே தகவல் தெரிவிக்கிறது நம்பகமானது என்றால் நம்பி மோசம் போவதா, சூரிய மின்சாரம் செலவு அதிகமே, இலவசம் அப்புறம்,...
Rate this:
Share this comment
Cancel
Rocky Velbova - Madurai,இந்தியா
25-அக்-201218:15:06 IST Report Abuse
Rocky Velbova கடிதம் நன்றாகதான் இருக்கிறது . ஆனால் மறக்காமல் தபால் பெட்டியில் போடுங்கள். எப்போதும் போல நாற்காலிக்கு அடியில் போட்டுவிடாதீர்கள்
Rate this:
Share this comment
Cancel
MJA Mayuram - chennai,இந்தியா
25-அக்-201217:09:12 IST Report Abuse
MJA Mayuram முதலமைச்சர் நாற்காலியில் மொத்தமா அடைத்துக்கொண்டு ஜெயா உட்கார்ந்து இருப்பார். மு.க டெல்லி போயி கரண்டு வாங்கணுமாம். நல்ல நியாயம். நாத்தம் விசு எதுக்கிருகிறார். போயி பொலம்பி வாங்க வேண்டியது தானே. முடியலேன்னா முடியலேன்னு சொல்லி டாட்டா சொன்னா எங்க ஆற்காட்டை கூப்பிடு நாங்க சமாளிப்போம்
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
25-அக்-201218:53:42 IST Report Abuse
தமிழ்வேல் ஹலோ ... ஹலோ ... மைக் டெஸ்ட்டிங் ..........மைக் டெஸ்ட்டிங் // ஆற்காடு வீராசாமி எங்கிருந்தாலும் சட்டசபைக்கு அழைக்கப்படுகிறார் // ...
Rate this:
Share this comment
sankar - trichy,இந்தியா
26-அக்-201203:41:59 IST Report Abuse
sankarஆற்காடு போன ஆட்சியில் சமாளிததைதான் பார்த்தோமே. ஆற்காடு ஆடி அடங்கி இருக்காரு. கலைஞர் கரண்ட் வாங்க போக வேண்டாம் . தமிழகளுக்கு நல்லது செய்யனும்ன அவருக்கு ஆகாதே. then what for DMK MP's exist in Central cabinet. and parliament. அவங்க பார்லிமென்ட்டுக்கு போவாங்களாம் , தமிழ் நாட்டுக்கு எதுவும் செய்ய கேக்க மாட்டாங்கல்லாம் . பேட்டா வாங்கதான் பார்லிமென்ட் போறங்களாம் . முக வேடிக்கை பார்ப்பாராம் . இவங்க பருப்பு ஒண்ணும் வேகாது காங்கிரஸ் இடம் . விஜயகாந்த் கூட்டணிக்கு வர போவதில்லை. அம்மா மாதிரி தனிய நிக்க திராணி கிடையாது. அதனால்தான் நாராயண சாமிய சந்திக்க மாட்டேன் னு சொன்ன ஆளு விஜகாந்த் ஸ்டேட்மென்ட்டுக்கு அப்புறம் சந்திகிறாரு . பாலு அமைச்சர் ஆவாறு . தமிழ்நாட்டக்கு நாலு ரயில் விடுவாரு . அதை வச்சி ஓட்ட வாங்கி இன்னும கொள்ளை அடிக்கலாம்னு கணக்கு போடுறாரு . மக்கள் முட்டாள்கள் அல்ல . முக நினைத்தாலும் கரண்ட்ட தமிழ்நாட்டுக்கு கொண்டு வர முடியாது . காங்கிரஸ் எலக்ஷன் நேரத்தில் திமுக கூட்டணி என்றால் கரண்ட் கொடுக்காது . அதி முக வுடன் கூட்டணி என்றால் கொடுக்கும். இது தான் காங்கிரஸ் கணக்கு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.