சொத்தை கிரையம் செய்ய தவறினால், முன்பணத்தை பறிக்கலாம் : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: "அசையாச் சொத்தை வாங்குவதற்காக, ஒருவர் முன்பணம் செலுத்தி விட்டு, குறிப்பிட்ட காலத்திற்குள், மீதிப்பணத்தை செலுத்தி, சொத்தை கிரையம் செய்ய தவறினால், அவர் செலுத்திய முன்பணத்தை, சொத்தை விற்பவர் பறிக்க உரிமையுண்டு' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஒப்புக்கொண்டார் டில்லியை சேர்ந்த ஒருவர், அசையாச் சொத்து ஒன்றை, 70 லட்சம் ரூபாய்க்கு வாங்க, ஒப்பந்தம் மேற்கொண்டார். சொத்தை விற்பவரிடம், முன்பணமாக, ஏழு லட்சம் ரூபாய் கொடுத்தார். குறிப்பிட்ட காலத்திற்குள், மீதிப் பணத்தை செலுத்தி, சொத்தை கிரையம் செய்வதாக ஒப்புக் கொண்டார்.
ஆனால், உறுதி அளித்தபடி, மீதிப் பணத்தை செலுத்தி, சொத்தை கிரையம் செய்யவில்லை. அதனால், முன்பணமாக செலுத்திய, ஏழு லட்சம் ரூபாயை, சொத்தை விற்க சம்மதம் தெரிவித்தவர் பறித்துக் கொண்டார்.
இதை எதிர்த்து, சொத்தை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டவர், டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட், "ஏழு லட்சம் ரூபாயில், 50 ஆயிரம் ரூபாயை பிடித்துக் கொண்டு, மீதி பணத்தை, சொத்தை வாங்க ஒப்பந்தம் போட்டவரிடம் கொடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, சொத்தை விற்க முன்வந்தவர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த, நீதிபதிகள், ராதா கிருஷ்ணன் மற்றும் தீபக் மிஸ்ரா அடங்கிய, சுப்ரீம் கோர்ட், "பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: அசையாச் சொத்து ஒன்றை வாங்குவதற்காக, ஒருவர் முன் பணம் செலுத்தி விட்டு, குறிப்பிட்ட காலத்திற்குள், மீதிப்பணத்தை செலுத்தி, சொத்தை கிரையம் செய்ய தவறினால், அவர் செலுத்திய முன்பணத்தை, சொத்தை விற்பவர் பறிக்க உரிமையுண்டு.

காப்பாற்ற வேண்டும் : சொத்தை விற்பவரும், வாங்குபவரும் ஒப்பந்தம் போடும் போது, செலுத்தப்படுவது முன்பணம். ஒப்பந்தப்படி, சொத்தை வாங்குபவர், குறிப்பிட்ட காலத்திற்குள், தன் உறுதி மொழியை காப்பாற்ற வேண்டும்; அதாவது, சொத்தை வாங்கும் தன் கடமையை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், அவர் செலுத்திய முன் பணத்தை, சொத்தை விற்பவர் பறிமுதல் செய்ய
உரிமையுண்டு. அதேநேரத்தில், சொத்தை விற்பவர், உறுதி அளித்தபடி, சொத்தை விற்க தவறினால், சொத்தை வாங்க ஒப்பந்தம் செய்தவர், தான் செலுத்திய முன்பணம் போல, இரண்டு மடங்கு தொகையை, சொத்தை விற்க ஒப்பந்தம் போட்டவரிடம் வசூலிக்க முடியும். இந்த வழக்கில், சுப்ரீம் கோர்ட் இதற்கு முன், அளித்த தீர்ப்புகளை, டில்லி ஐகோர்ட் தவறாக புரிந்து கொண்டுள்ளது. ஏழு லட்சம் ரூபாயில், 50 ஆயிரம் மட்டுமே, சொத்தை விற்க சம்மதித்தவர் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற, டில்லி ஐகோர்ட்டின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shyam - ALLENTOWN PA,யூ.எஸ்.ஏ
01-நவ-201201:47:33 IST Report Abuse
shyam உச்ச நீதிமன்றம் இதையும் பின்குறிப்பு என்று சேர்த்திருக்க வேண்டும் - இந்த சட்டம் அரசியல் வாதிகளுக்கு செல்லுபடியாகாது..... அவர்கள் எதையும் எப்படியும் வாங்கலாம். நமது இந்தியாவில் ஏமாற்றுபவர்களுக்கு த்தான் சட்டப்பாதுகாப்பே தவிர எமாருபவர்களுக்கல்ல. மாற்றியமைக்கப்பட்ட மந்திரி சபையை பார்த்தாலே தெரியும் இந்த அரசாங்கத்தின் லச்சணம்.
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
26-அக்-201212:54:57 IST Report Abuse
Ravichandran அது சரிதான். எதற்கும் ஒரு கட்டுப்பாடு ஒரு நியதி என்பது வேண்டும். முதல வாங்குறனுங்கறது அப்புறம் இல்லை ங்கறது. இப்ப ஆப்பு வட்சாச்சு. இனிமே சொன்ன மாதிரி ஒழுங்கா பத்தரத்தை முடிங்க.
Rate this:
Share this comment
Cancel
Sridhar Natarajan - Orlando,யூ.எஸ்.ஏ
26-அக்-201206:48:40 IST Report Abuse
Sridhar Natarajan 2006 ஆம் ஆண்டு ஆயிர கணக்கானவரிடம் முழு பணத்தையும் பெற்றுக்கொண்டு கட்டி முடிக்காமல் இழுத்தடிக்கும் நாட்டின் மிக பெரிய நிறுவனம் (வாத்ரா புகழ்) பில்டர் ஐ என்ன செய்வது? இந்த சட்டம் எல்லாம் சாதாரண மக்களுக்கு மட்டுமே.
Rate this:
Share this comment
Kadaparai Mani - chennai,இந்தியா
26-அக்-201212:42:20 IST Report Abuse
Kadaparai ManiExcellent Sir. I hope Media and mr.Kejerval should take initiative in this regard....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்