Karunanidhi slams jayalalitha in power crisis | மின் தட்டுப்பாட்டை தீர்க்க முதல்வர் அக்கறை காட்டவில்லை: கருணாநிதி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மின் தட்டுப்பாட்டை தீர்க்க முதல்வர் அக்கறை காட்டவில்லை: கருணாநிதி

Updated : அக் 27, 2012 | Added : அக் 26, 2012 | கருத்துகள் (81)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை: "மின் தட்டுப்பாட்டை தீர்க்க எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன. அதையெல்லாம் பயன்படுத்திக் கொள்ள, முதல்வர் ஜெயலலிதா அக்கறை காட்டவில்லை,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.

சென்னையில் அவரது பேட்டி: மின்சாரத்தைப் பற்றி பேசுவதற்கோ, அறிக்கை விடுவதற்கோ, தமிழகத்தையே இருண்ட நாடாக ஆக்கியிருக்கிற, முதல்வர் ஜெயலலிதாவுக்கு எந்தத் தகுதியும் இல்லை. கடந்த காலத்தில், இரண்டு மணி நேரமோ, மூன்று மணி நேரமோ தான் மின்வெட்டு இருந்தது. இப்போது, 14 மணி நேரம், 15 மணி நேரம் என, மின்வெட்டு இருக்கிறது. காரிடர் இல்லாதது பிரச்னை இல்லை. ஜெயலலிதா ஆட்சியிலே இருப்பது தான் பிரச்னை. இவர்கள் செய்கிற தவறுக்கு மத்திய அரசு மீதும், தி.மு.க., அரசு மீதும் குறை கூறி, தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள். மத்திய அரசிடம் மின்சாரம் கோரி, ஆட்சி பொறுப்பிலே இருப்பவர் கடிதம் எழுதியிருக்கிறார். மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சிகளும், மத்திய அரசிடம் வேண்டுகோள் விட வேண்டுமென, முதல்வர் கேட்டுக் கொண்டு, அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் கடிதம் எழுதினால், எல்லோருமே அந்த வேண்டுகோளை தங்கள் எம்.பி.,க்கள் மூலமாக மத்திய அரசுக்கு விடுப்பார்கள். மின் தட்டுப்பாட்டை தீர்க்க எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன. அதையெல்லாம் பயன்படுத்திக் கொள்ள, ஜெயலலிதா நினைக்கவும் இல்லை. செயல்படுத்தக் கூடிய திறமை உடையவர்கள் யார் என்பதில் அக்கறை காட்டவும் இல்லை. அவர்களை எல்லாம் அழைத்துப் பேசவும் இல்லை. முதல்வர் இப்படியொரு விளக்கத்தைக் கொடுக்க வேண்டிய அவசியத்திற்குக் காரணம், தமிழகமே இருண்டு கிடப்பது தான். இவ்வாறு கருணாநிதி கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mazhaitamil - aljubail,சவுதி அரேபியா
20-டிச-201200:57:27 IST Report Abuse
mazhaitamil திமுகவின் மின் திட்டங்களை செயல்படுத்த முன்வராத ஜெயா அரசு இருக்கும்வரை தமிழ்நாட்டிற்கு மின்சாரம் கிடைக்காது .ஒட்டு போட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி .அதன் பலன் இப்போது உணருங்கள் .
Rate this:
Share this comment
Cancel
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
27-அக்-201218:04:50 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar தங்கள் இருவரும் நிர்வாகத்தில் சரி இல்லாதவர்கள்...என்பதை காட்டுகிறது...,கற்பனை கலை சினிமா துறை சேர்த்தவர்கள் தமிழக மக்கள் வாழ்க்கை பொருளாதரத்தை தொலைதவர்கள் ...மக்கள் பிரியர் பெரியார் பேச்சை சரியாக கேட்காத.., அன்று தமிழக மக்களால் ஏற்பட்ட நிதி- நீதி நிர்வாக தவறுகள் - இவை மக்கள் மாற்றவேண்டும் - பூபதியார்
Rate this:
Share this comment
Cancel
ganapathy - khartoum,சூடான்
27-அக்-201216:53:09 IST Report Abuse
ganapathy உங்களை ஐ.நா சபைக்கு போக சொன்னாங்கள. சும்மா ஒட்டு போய்டும்னு ஒரு லெட்டர் எடுத்துகொண்டு உங்கள் பிள்ளையை அனுப்ப முயர்ச்சிக்கறீங்க. நீங்க பதவி வகிக்கும் மத்திய அரசு மின்சாரம் தராது. ஏற்கனவே கடல் நீரை குடிநீராக்க ஜெயா எடுத்த முயற்ச்சியை தடுத்த நல்ல உள்ளம் கொண்ட தமிழன் நீங்கள்.
Rate this:
Share this comment
Cancel
naagai jagathratchagan - mayiladuthurai ,இந்தியா
27-அக்-201216:42:01 IST Report Abuse
naagai jagathratchagan இவங்க சண்டையில் மின்சாரம் மறந்து போயிடப்போவது...அதை கவனியுங்க ....இல்லன்ன ....மோடி மஸ்தான் ..கூட்டத்திலே தாயித்து வித்த கதைதான் ..மக்கள் கதையும்
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
27-அக்-201215:07:41 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. /// இஷ்டத்துக்கு கொள்ளை விலைக்கு மின்சாரம் வாங்கி , தமிழ்நாட்டை கடனாளியாக ஆக்கினதும் இல்லாமல்/// திரு செந்தமிழ்.... எனக்கொரு சந்தேகம்... தீர்த்துவைப்பீர்கள் என்று நம்புகிறேன்.... சந்தையில்... விலை அதிகம் கொடுத்துவாங்குவதற்கும் (ஊழல் செய்ய ஏதுவாக )... சந்தைவிலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என்று.. கிடைக்கும் மின்சாரத்தை வாங்கி... மக்களுக்கு விநியோகிப்பதற்கும்.. வித்தியாசமுண்டு.... வித்தியாசம் உங்களுக்கு புரிந்திருக்குமென்று நம்புகிறேன்.... இப்போது சொல்லுங்கள்... கிடைக்கும் மின்சாரத்தை வாங்கி.. மக்களுக்கு சேர்ப்பது நல்லதா... எதுவுமே செய்யாமல்... மக்களை இப்படியே நாள் முழுவதும்.... கும்மிருட்டில் வைத்துவிட்டு........ மற்றவர்களை பற்றி லாவணி பாடுவது சரியா.... அவர்கள் மின்சாரம் வாங்கியதில் ஊழல்.... அப்போது மற்ற இடங்களில்... விலைகுறைவாக கிடைத்தது இவர்க வேண்டுமென்றே விலை அதிகம் கொடுத்து வாங்கினார்கள் என்றால்.... இவர் கையில் தானே அதிகாரம் இருக்கிறது..... வழக்கு போட்டு.... விசாரணை நடத்தி.. உள்ளதள்ளவேண்டியது தானே... என்.. இப்படி புலம்புகிறார்... ஏனென்றால்... இவருடைய வாதத்தில்... உண்மையில்லை.. இது சும்மா ஊரை... மக்களையும்... விசிலடிச்சான் குஞ்சுகளுக்குமானது... பொதுவாக நீங்கள்... உங்களுடைய கருத்துக்களில், தெளிவும்... நேர்மையும் இருக்கும் என்பதாலும்... எனக்கும் பிடுக்கும் என்பதாலும் உங்களுக்கு சொல்கிறேன்.....நன்றி....
Rate this:
Share this comment
Cancel
rajesh - salem  ( Posted via: Dinamalar Android App )
27-அக்-201214:39:33 IST Report Abuse
rajesh சாமீ இவன் காமெடீ முடியலடா தமிழ்நாட்ல இப்போ முட்டால்கள் இல்லை தி்ருடரே
Rate this:
Share this comment
Cancel
Selvam Mohan - chennai,இந்தியா
27-அக்-201214:01:36 IST Report Abuse
Selvam Mohan தமிழ் நாட்டில் நிலவும் இந்த மோசமான மின்வெட்டு பிரச்சனைக்கு ஜெயலலிதாவையோ அதிமுக அரசையோ குறை சொல்லி ஒரு பிரயோசனையும் இல்லை. இந்த அரசு என்னை பொறுத்த வரையில் நல்ல முயற்சிகளை எடுக்க தான் செய்கிறது. இதன் பலன் கூடிய விரைவில் தெரியும் என்று எதிர் பார்க்கலாம். முந்தைய ஆட்சியாளர்கள் ஏன் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 50000 கோடி ருபாய் கடன் வைத்தார்கள் என்று மக்கள் கேள்வி கேட்க வேண்டும். ஏன் தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலைக்கு மக்களுக்கு கொடுத்தார்கள் என்று புரியவில்லை. இப்படி மக்களின் நீண்ட நாள் தேவையை மனதில் கொள்ளலாமல் குறுகிய கால தேவையை மட்டும் ஒரு அரசு சரி செய்யுமானால் அது பிரச்சனைகளுக்கே வழி வகுக்கும். மேலும் சென்னையை மேலும் மேலும் வளர்ச்சி என்ற சொல்லி கொண்டு அழிக்காமல் மற்ற பிரதேசங்களையும் வளர்க முன் வரவேண்டும். மின்சாரத்தையும் சரியாக பகிர்ந்து கொள்ள வேண்டும். போதும் இந்த சென்னையின் வளர்ச்சி, என்னை போன்ற சென்னைவாசிகளுக்கு இது ஒரு வளர்ச்சியாக தெரிய வில்லை. மக்களின் வெள்ளத்தில் சென்னை தவித்து கொண்டு இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
27-அக்-201213:43:53 IST Report Abuse
Narayan திட்டங்கள் "அறிவிப்பவரே" திட்டத்தை நிறைவேற்றியவராக கொண்டால் அய்யாவை நல்ல தலைவர் என கொள்ளலாம். சரியான நேரத்தில் திட்டத்தை முடிப்பது என்பது வேறு விஷயம். திட்டம் ஆரம்பிக்கும் முன்னரே பணம் தீர்த்து விட்டு இப்போது, நாங்களே அதை ஆரம்பித்தோம் இதை கொண்டு வந்தோம் என ஜெயா முயற்சியில் முடிக்கும் திட்டங்களை சொல்வது காமெடியாக உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
27-அக்-201213:24:24 IST Report Abuse
Ravichandran எல்லாமே உன் சதி திட்டம் தானு தெரியத அளவிற்கு இப்போ யாரும் ஏமாற தயாராய் இல்லை. மதிய அரசுகிட்ட சொல்லி நீங்க மின்சாரம் கொண்டு வந்த மின்வாரிய அதிகாரிகள் வேண்டமுனா சொள்ளபோரங்க. சும்மா சும்மா அறிக்கை விட்டு கடுபெதிக்கிட்டு.
Rate this:
Share this comment
Cancel
marx - mannai  ( Posted via: Dinamalar Android App )
27-அக்-201213:02:13 IST Report Abuse
marx நீங்கள் காட்டவேண்டியதுதாணே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை