E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
நீங்க அமைச்சராக இருந்தது போதும் ., கட்சிப்பணி கவனிக்க போங்க., ; காங்.,
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

27 அக்
2012
10:14
பதிவு செய்த நாள்
அக் 27,2012 03:59

புதுடில்லி: நாளை மத்திய அமைச்சரவை மாற்றம் நடக்கவிருக்கும் நேரத்தில் மத்திய அமைச்சர்களின் முக்கிய தலைகள் உருளத்துவங்கியுள்ளன. உண்மையிலேயே கட்சிப்பணிக்கு அனுப்பி வைப்பதாக கூறினாலும், மறைமுக ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க தாமாகவே முன்வந்து எஸ்.எம்., கிருஷ்ணா (வெளியுறவுத்துறை) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 2 மாதமாக மத்திய அமைச்சரவையில் மாற்றம் வருகிறது என்று சொல்லி தள்ளிக்கொண்டே போன இந்த மாற்றம் நாளையுடன் ( ஞாயிற்றுக்கிழமை ) முடிவுக்கு வருவதுடன் புதிய அமைச்சர்கள் பலர் பொறுப்பேற்கவுள்ளனர். குறிப்பாக ராகுலுக்கு நெருங்கியவர்களுக்கு இந்த மாற்ற அமைச்சரவையில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஏற்கனவே அமைச்சரசாக இருக்கும் இளம்வயதினரான சச்சின் பைலட், மிலிந்த்தியோரா, ஜோதிராத்தியாசிந்தியா ஆகியோருக்கு காபினட் அந்தஸ்துடன் கூடுதல் பொறுப்பும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


நடிகர் சிரஞ்சீவிக்கு பதவி:



ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பிரஜா ராஜ்யம் என்ற பெயரில் கட்சி நடத்தி கலைத்து காங்கிரசுடன் இணைந்த நடிகர் சிரஞ்சீவிக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என தெரிகிறது. ஆந்திராவை சேர்ந்த முன்னாள் முதல்வர் விஜயபாஸ்கர் ரெட்டி மகன் சூர்யபிரகாஷ், மேற்குவஙகத்தை சேர்ந்த மாநில காங்., தலைவர் பிரதாப் பட்டாச்சார்யா, தேஷ்முன்சி, ஏ.எச்.,கான் சவுத்ரி, தமிழகத்தை சேர்ந்த மாணிக்தாக்கூர், ( விருதுநகர் எம்.பி., ) ஆகியோர் , அமைச்சரவையில் இடம் பிடிக்க இருப்பதாக டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது. குறிப்பாக ராகுல் கை காட்டும் நபர்கள் அதிகம் இந்த முறை அமைச்சராகவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


சர்ச்சையில் சிக்கிய கிருஷ்ணா:



பெங்களூரூ மைசூர் விரைவு சாலையில் நிலம் ஒதுக்கியது தொடர்பாக எஸ்.எம்.,கிருஷ்ணா மீது புகார் இருந்து வந்தது. மேலும் கனிம சுரங்க முறைகேட்டில் இவருக்கு தொடர்பு உண்டு என்ற புகாரும் இருந்து வரும் நேரத்தில் இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2010 ல் நியூயார்க்கில் நடந்த ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சில் மாநாட்டில் போர்ச்சுகீசிய அமைச்சர் பேச்சை எடுத்து வாசித்து சர்ச்சைக்குள் சிக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இளைஞர்களுக்கு வழி விட்டு அவர்களுக்கு பக்கபலமாக இருப்பதுடன் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பணிகளை கவனிப்பேன் என்று கூறியுள்ளார். ( கிருஷ்ணாவின் தற்போதைய வயது 80 )


அடுத்து தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அம்பிகா சோனி , வயலார் ரவி. முல்லப்பள்ளி ராமச்சந்திரன், மற்றும் சமூக நலத்துறை முகுல்வாஸ்னிக் , பேணிபிரசாத் வர்மா ஆகியோரும் ராஜினாமா செய்ய காங்., மேலிடம் வலியுறுத்தியுள்ளது. சுற்றுலா துறை அமைச்சர் சுபோத்காந்த் சகாய் மீது நிலக்கரி ஊழல் புகார் இருப்பதால் இவரும் தனது ராஜினாமாவை பிரதமரிடம் இன்று கொடுப்பார் என தெரிகிறது. இவர்கள் கட்சிப்பணிக்கு அனுப்பி வைக்கப்படவிருப்பதாக காங்., வட்டாரம் தெரிவித்துள்ளது.


தி.மு.க.,வை பொறுத்தவரை அமைச்சரவையில் இடம் வேண்டாம் என்று சொல்லி வருகிறது. இந்த முடிவு மாற்றத்திற்குட்பட்டதாக இருக்கலாம் என டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.






Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (25)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
panneerselvam - thajore,இந்தியா
27-அக்-201215:22:46 IST Report Abuse
panneerselvam IIT toughest exams in India and Arvind Kejriwal passed. This speaks the volume of knowledge Kejriwal possess. I am sure he will do wonders if he comes into active politics with good number of MPs in parliament. He will take India to new heights and India can also become a developed nation within 5-10 yrs time. Please join him and his movement of IAC...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Cheenu Meenu - cheenai,இந்தியா
27-அக்-201215:12:00 IST Report Abuse
Cheenu Meenu நீங்க ஆண்டது போதும், என்று காங்கிரஸ்சை மக்கள் ஒதுக்கும் காலம் விரைவில் வர இருக்கிறது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Maali Raja - Tuticorin,இந்தியா
28-அக்-201216:39:36 IST Report Abuse
Maali Raja காங்கிரசை விட்டால் வேற ஆளு இல்லப்பூ....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
27-அக்-201214:18:16 IST Report Abuse
villupuram jeevithan ராகுல் எம்பி பதவியை விட்டு விட்டு கட்சி பணிக்கு சென்றால் அள்ளிடலாமே, வரும் தேர்தலில்? ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
rajaram avadhani - Tiruchy,இந்தியா
27-அக்-201213:53:53 IST Report Abuse
rajaram avadhani எஸ்.எம்.கிருஷ்ணா, இனிமேல் ஹீனா ரப்பானியை, ரொம்பவே மிஸ் பண்ணுவார் பாவம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
JAY JAY - CHENNAI,இந்தியா
27-அக்-201210:56:24 IST Report Abuse
JAY JAY பானைய எவ்வளவு தான் வெளக்கி சுத்தமா வச்சாலும் ஓட்ட பானையாச்சே எப்படி தண்ணி புடிச்சு வைக்க போறாங்களாம்...?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
sundararaman - chennai,இந்தியா
27-அக்-201210:38:31 IST Report Abuse
sundararaman மொத்தமுமே கொள்ளைக்கார கூட்டம். இதுல எவன் வந்தா என்ன எவன் பதவி போனால் என்ன? நாட்டிற்கு எதுவும் நல்லது நடக்கப்போறதில்லை. நாற்பது திருடர்கள் குதிரை மாறி உட்காருவதால் சமுதாயத்திற்கு ஏதாவது நன்மை விளையுமா? புது இடத்திலும் திருடலாம் என்கிற நன்மை திருடர்களுக்கு கிடைக்கிற அறிய வாய்ப்பு மட்டுமே இந்த அமைச்சரவை மாற்றம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
S T Rajan - Ettayapuram ,இந்தியா
27-அக்-201209:40:52 IST Report Abuse
S  T Rajan நீங்க யாரை மாற்றினாலும் , அடுத்த தேர்தலில் ஆப்புதாண்டி............ எனக்கு தமிழ் , இங்கிலீஷ் ரெண்டுலேயும் பிடிக்காத வார்த்தை காங்கிரஸ்.....நாட்டை பாதாளத்தில் தள்ளியதில் பெரிய பங்கு காங்கிரஸ் கட்சிக்கு உண்டு...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Maali Raja - Tuticorin,இந்தியா
28-அக்-201216:43:11 IST Report Abuse
Maali Rajaஇந்த ஆண்டின் மிக சிறந்த ஜோக்கு. ...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
வைகை செல்வன் - சென்னை,இந்தியா
27-அக்-201209:29:58 IST Report Abuse
வைகை செல்வன் ஆக இதுவரை இவர் புடுங்குனது எல்லாம் தேவையில்லாத ஆணிதான் என்பதை மறுக்காமல் கட்சி இவரை அமைச்சர் பதவியில் இருந்து விடுவித்துள்ளது..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
kadal nandu - Dhigurah,மாலத்தீவு
27-அக்-201209:22:31 IST Report Abuse
kadal nandu இந்த மாக்கானால் இந்தியாவுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை ............
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
27-அக்-201208:57:32 IST Report Abuse
Nallavan Nallavan ஹையா வாசகர் Kunjumani யின் (இங்கிலீஷ் குஞ்சுமணி) சந்தோஷத்தில் (இனி பாக் வெளியுறவு அமைச்சருடன் கிருஷ்ணா கை குலுக்க முடியாதே) பங்கு கொள்கிறேன்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.