வந்துட்டாருய்யா...சிங்கப்பெருமாள்...
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சிங்கப்பெருமாள்;91 வயதிலும் திருவிழாக்களில் உற்சாகமாக பாடி, நடனமாடும் அற்புத கலைஞர்.
தார்ப்பாய்ச்சி வேட்டி, மணிக்கட்டில், முழங்கையில், உச்சிக்குடுமியில் மல்லிகை பூ, உடம்பெங்கும் நாராயணின் திருநாமம், மார்பில் புரளும் வித, விதமான மாலை, நெடு, நெடு உயரத்துடன், பார்த்தவுடனேயே மதிக்கத்தக்க தோற்றத்துடன் ராஜா நடை நடந்து வருபவரை தனியாக அடையாளம் காணலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கோபிநத்தம்பட்டியைச் சேர்ந்த சிங்கப்பெருமாள், இத்தனை வயதாகியும் இதுவரை உடம்பிற்கு முடியவில்லை என்று ஒரு மாத்திரை, மருந்து சாப்பிட்டது கிடையாது, கண்ணாடி போட்டுக் கொள்ளாமலே தெளிவாக படிக்குமளவு பார்வை உள்ளது.
ஊரில் மளிகை கடை வைத்து சம்பாதித்த பணத்தில் பிள்ளை குட்டிகளை கரையேற்றிய பிறகு பெருமாளின் பெரும் பக்தனாக மாறிவிட்டார். திருமலை துவங்கி ஸ்ரீரங்கம் வரை உள்ள எந்த வைணவ கோயிலில் விழா விசேஷம் என்றாலும் மஞ்சள் பையில் ஒரு ஜோடி ஆடையுடன் கிளம்பிவிடுவார், கிடைத்த இடத்தில் தூங்கி, கிடைத்ததை சாப்பிட்டுக் கொண்டு ஆங்காங்கு நடக்கும் உற்வங்களின் போது பங்கேற்று ஆடுவதும், பாடுவதும், வரும் மக்களை ஆசீர்வாதிப்பதுமாக இவரது வாழ்க்கை போய்க்கொண்டு இருக்கிறது.

மனதில் கவலைகளையும், ஆசைகளையும் ஏற்றிக்கொள்ளாமல், இருக்கும் வாழ்க்கையை இயல்பாக வாழ்ந்தால் போதும் இந்த வயது என்றில்லை , எந்த வயதிலும் என்னைப் போல ஆட்டம், பாட்டம், உற்சாகமாக இருக்கலாம் எனும் சிங்கப்பெருமாள், பெருங்குரலெடுத்து பாட ஆரம்பிக்கிறார்.
இவரது பாடல் வரிகளைக் கேட்டு, கூட்டம் கூட ஆரம்பிக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் அங்கு உற்சாகமும், சந்தோஷமும் பொங்கி பிரவாகமெடுக்கிறது.

இவருக்கு எந்த குழுவும் கிடையாது, இவரும் எந்த குழுவிலும் இல்லை, எப்போதும் சிங்கிளாகவே வரும் சிங்கம் இவர். ஆனால் எந்த குழுவுடனும் சேர்ந்தும் ஆடுவார், யாருடனும் சேராமல் தனியாகவும் நடனமாடுவார். இவரை பார்த்துவிட்டாலே போதும் வந்துட்டாருய்யா நம்ம சிங்கப்பெருமாள் என்று இவரை அன்பும், உற்சாகமும் பொங்க மக்கள் சூழ்ந்து கொள்வார்கள்.
ஏதோ ஒரு பழைய படத்தில் இடம் பெற்ற பாடல்தான், அந்த படத்தில் இந்த பாடல் எப்படி பாடப்பட்டதோ, இவர் பாடும்போது தனக்கேற்ற ராகத்தில் கேட்பவர் உற்சாகம் அடையும்படி பாடுகிறார், பாடல்களைக் கேட்டால் நமக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது.

தேடிநின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்றை கையில் கொண்டு கண்ணன் வந்தான்
கேட்டவர்க்கு கேட்டபடி கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாக கண்ணன் வந்தான்
தருமம் எனும் தேரிலே ஏறி கண்ணன் வந்தான்
தாளாத துயர்தீர்க்க கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் மாயக்கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்....
பாடல் தொடர்கிறது...பாராட்டுக்கள் குவிகிறது.

- எல்.முருகராஜ்

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஸ்ரீவைதேகி - V.KALIYAPURAM,இந்தியா
13-நவ-201207:26:32 IST Report Abuse
ஸ்ரீவைதேகி வாழ்க பல்லாண்டு . உங்கள் ஆசிர்வாதம் உலகிற்கு வேண்டும் இன்னும் பல்லாண்டு வாழ அந்த ஏழுமலையானை பிராத்திக்கிறேன். வாழ்க வளமுடன் .பெரியவர் சிங்கம் பெருமாள் ஐயங்கார் பல்லாண்டு பல்லாண்டு வாழ பரமாத்மாவை வேண்டுவோம்.
Rate this:
Share this comment
Cancel
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
12-நவ-201205:54:33 IST Report Abuse
P. Kannan கடவுள் நம் இதயத்தில் மௌனியாய் இருக்கிறார், அவர் என்று நம்மோடு பேச ஆரம்பித்து விட்டாரோ பின் என்ன ஆடலாம் , பாடலாம் எல்லாம் இன்பமயம். ஓம் நமோ நாராயணாய
Rate this:
Share this comment
Cancel
S. ரெகுநாதன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
03-நவ-201210:42:33 IST Report Abuse
S. ரெகுநாதன் வாழ்கையை எளிதாக வாழ கற்றுகொண்டால் கவலை இல்லாமல் நெடும்காலம் வாழலாம் என்பதற்கு ஸ்ரீ. சிங்கம்பெருமாள் ஐயங்கார் ஒரு எடுத்துக்காட்டு....எதிர்பார்ப்பு இல்லையெனில் வாழ்க்கையில் ஏமாற்றம் இல்லை....அடுத்தவர் மனம் நோகாமல் பிறருக்கு இடைஞ்சல் செய்யாமல் ஆன்மீக சிந்தனையுடன் வாழும் மனிதர்களுக்கு இழப்பு ஒன்றும் இல்லை...பெரியவர் சிங்கம் பெருமாள் ஐயங்கார் பல்லாண்டு பல்லாண்டு வாழ பரமாத்மாவை வேண்டுவோம்...ராதே கிருஷ்ணா
Rate this:
Share this comment
Cancel
naagai jagathratchagan - mayiladuthurai ,இந்தியா
01-நவ-201219:27:56 IST Report Abuse
naagai jagathratchagan படிக்கும்போதே மனம் கொள்ளைகொள்ளுகிறது....பகவானை வேண்டுவோம் இவர் பல்லாண்டு வாழவேண்டும் என்று
Rate this:
Share this comment
Cancel
Madurai VEERAN - Chennai,இந்தியா
29-அக்-201215:22:10 IST Report Abuse
Madurai VEERAN வாழ்க வளமுடன்
Rate this:
Share this comment
Cancel
Kumar S - மதுரை,இந்தியா
29-அக்-201209:53:06 IST Report Abuse
Kumar S இன்னும் பல்லாண்டு வாழ அந்த ஏழுமலையானை பிராத்திக்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
dravida Aryan - thanjavur,இந்தியா
29-அக்-201206:48:31 IST Report Abuse
dravida Aryan ஹர ஹரா, பெரியவரே வாழ்க வளமுடன் வாழ்க நீர் பல்லாண்டு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்

ஏப்ரல் 30,2017