பதிவு செய்த நாள் :
கருத்துகள் (179)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

திருநெல்வேலி:முதல்வர் ஜெயலலிதாவை, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் வரிசையாக சென்று சந்தித்து வருவதால், தே.மு.தி.க., கட்சியினர் ஆவேசம் அடைந்துள்ளனர். தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., மைக்கேல் ராயப்பனின் உருவ பொம்மையை எரித்தனர். திசையன்விளை அருகே நந்தன்குளத்தில் உள்ள அவரது அலுவலகம் மற்றும் வீட்டில், தே.மு.தி.க.,வினர் கற்களை வீசி தாக்கினர். இதில், வீட்டின் மாடி கண்ணாடிகள் உடைந்தன.
தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் மைக்கேல் ராயப்பன் (ராதாபுரம்), அருண்பாண்டியன் (பேராவூரணி) ஆகியோர், நேற்று சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர். இதற்கு, தே.மு.தி.க.,வில் எதிர்ப்பு கிளம்பயுள்ளது.விஜயகாந்தின் ரசிகர் மன்றம், தே.மு.தி.க., கட்சியாகச் செயல்படத் துவங்கிய காலம் முதல், பல ஆண்டுகளாக உறுப்பனர்களாக இருந்தவர்களுக்கு எம்.எல்.ஏ., “சீட்’ தராமல், திடீரென வந்த சினிமா தயாரிப்பாளரான, மைக்கேல் ராயப்பனுக்கு, “சீட்’ கொடுத்தனர். அவரும் எம்.எல்.ஏ., ஆன பன், சட்டசபையில் பெரிய அளவில் பேசவில்லை.
அவர் தொகுதிக்காக எதுவும் செய்யாமல், கட்சிக்கு துரோகம் இழைத்ததாகக் கூறி, நேற்று அவரது உருவ பொம்மையை, திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட பணகுடியில், மாவட்ட மாணவர் அணி செயலர் சுடர் தலைமையில், தே.மு.தி.க.,வினர் எரித்தனர்.திசையன்விளை அருகே நந்தன்குளத்தில் உள்ள மைக்கேல் ராயப்பன் அலுவலகம் மற்றும் வீட்டில், தே.மு.தி.க.,வினர் கற்களை வீசி தாக்கினர். இதில், வீட்டின் மாடி கண்ணாடிகள் உடைந்தன.
திருநெல்வேலி மாவட்டத்தில் திசையன்விளை, வள்ளியூர், காவல்கிணறு உள்ளிட்ட இடங்களிலும் மைக்கேல் ராயப்பனின் உருவ பொம்மையை எரிக்க, அக்கட்சியினர் திரண்டனர்.
இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில், “ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட திசையன்விளை கடற்கரை பகுதியில், கார்னெட் மணல் அள்ளி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தினர் கோடிக்கணக்கில் முறைகேடு செய்துள்ளனர். அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலத்தின் மண்ணையும் சுரண்டி, கொள்ளை லாபம் சம்பாதித்துள்ளனர். இதுகுறித்து, கட்சித் தலைவர் விஜயகாந்த், நாகர்கோவில் கூட்டத்தில் பேசினார். ஆனால், அந்த நிறுவனத்தினருடன் மைக்கேல் ராயப்பனுக்கு இருந்த தொடர்பு காரணமாகவே, தற்போது அவர் அ.தி.மு.க., பக்கம் சாய்ந்துள்ளார்’ என, தெரிவித்தனர்.இன்று, திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் தே.மு.தி.க.,வினர், மைக்கேல் ராயப்பனின் உருவ பொம்மையை எரிக்க திட்டமிட்டுள்ளனர்.

செய்தியாளர்களுடன் விஜயகாந்த் மோதல்:
தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள், முதல்வரை சந்தித்தது குறித்து கேள்வி கேட்டபோது, விஜயகாந்த் செய்தியாளர்களுடன் மோதலில் ஈடுபட்டதால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து நிருபர் ஒருவர் கொடுத்த புகார் மீது, விமான நிலைய போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
பக்ரீத் பண்டிகைக்கு, குர்பானி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், சென்னையில் இருந்து

நேற்று காலை 10:40 மணிக்கு, விமானத்தில் மதுரை சென்றார். காலை 10:20 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் சிலர் வந்தனர்.விமான நிலையத்தின், உள்நாட்டு முனையத்தில் காரில் இருந்து இறங்கிய விஜயகாந்த், விமான நிலையத்திற்குள் செல்ல முயன்றார். அப்போது, அவரிடம் பேட்டி காண, செய்தியாளர்கள் குவிந்திருந்தனர். செய்தியாளர் பாலு, காரில் இருந்து இறங்கிய விஜயகாந்திடம் சென்று, "செய்தியாளர்கள் உங்களுக்காக காத்திருக்கின்றனர். பேட்டி கொடுங்கள்' என்றுகேட்டார்.
இதற்கு, "நீ யார்? செய்தியாளர்களை நான் பார்த்துக் கொள்கிறேன். நீ ஓரமாக போ' என்று, கோபமாக கூறினார். விஜயகாந்த் அருகே வந்த செய்தியாளர்கள், "உங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் முதல்வரை சந்தித்தது குறித்து கருத்து சொல்லுங்கள்' என்று கேட்டனர்.
இதற்கு, "நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் உள்ளன. மின்வெட்டால் தமிழகமே இருளில் உள்ளது. டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதற்கெல்லாம் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று ஜெயலலிதாவிடம் சென்று கேளுங்கள்' என்று, கூறினார். தொடர்ந்து விஜயகாந்திடம், செய்தியாளர்கள் கேள்விகளை கேட்க, ஆத்திரமடைந்த விஜயகாந்த், "போங்கய்யா, அங்கே போய் கேளுங்கள்' என்று, கூறிவிட்டு, விமான நிலையத்திற்குள் சென்றார்.
அப்போது செய்தியாளர் பாலுவை பார்த்து, தகாத வார்த்தைகளால் விஜயகாந்த் பேசினார். தே.மு.தி.க., எம்.எல்.ஏ., அனகை முருகேசன், செய்தியாளர் பாலுவை கீழே பிடித்து தள்ளினார். இதையடுத்து, கட்சி நிர்வாகிகள், விஜயகாந்தை விமான நிலையத்திற்குள் அனுப்பி வைத்தனர். தன்னை தகாத வார்த்தைகளால் பேசிய விஜயகாந்த், கீழே பிடித்து தள்ளிய எம்.எல்.ஏ., ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாலு, விமான நிலைய போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நாடகத்தை எப்படி முடிக்கிறேன் பாருங்கள் விஜயகாந்த் ஆவேசம் :
ஒரு நாடகம் நடக்கிறது. அதை எப்படி நான் முடிக்கிறேன் என்பதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்?'' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மதுரையில் ஆவேசமாக பேசினார்.பக்ரீத் பண்டிகையையொட்டி, தே.மு.தி.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மதுரையில் நடந்தது. விஜயகாந்த் பேசியதாவது: நான் அனைத்து மதத்தினருக்கும், சேவை செய்துவருகிறேன். தெய்வம், மக்களை

Advertisement

நம்பியுள்ளேன். யார் பத்திரிகையாளர்கள் என எனக்குத் தெரியும். வீட்டிற்கு வரச்சொன்னால் தெரிந்துவிடும் என, கோட்டைக்கு வரச்சொல்லி நாடகம் நடத்துகின்றனர். அந்நாடகத்தை, நான் எப்படி முடித்து வைக்கப் போகிறேன் என்பதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.
தே.மு.தி.க., மீது எவ்வளவு பயம் வந்துள்ளது என்பதைகாணும் போது, மகிழ்ச்சியாக உள்ளது. என்னைப் போல் ஊர் ஊராக முதல்வர் ஜெயலலிதாவால் சுற்ற முடியுமா? ஒன்றரை ஆண்டுகளாக செய்யாததை, இனிமேலா செய்யப் போகின்றனர்.மின் தட்டுப்பாட்டை ஓராண்டில் சீர் செய்வேன் என்றார்; அது நிறைவேறவில்லை. பல மணி நேரம் மின்தடை நீடிக்கிறது. 1991 லிருந்து தி.மு.க.,-அ.தி.மு.க.,வினர் மாறி மாறி ஆட்சி புரிகின்றனர். ஆனால், காவிரி நீரை கொண்டு வர நடவடிக்கை இல்லை. இலவசங்களை வழங்கி, மக்களை ஏமாற்றுகின்றனர்.எனக்கு கோபம் வரும். கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும். உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன். தி.மு.க.,- அ.தி.மு.க.,விற்கு ஓட்டுப் போடாதீர்கள்.இவ்வாறு அவர் பேசினார்.
பிரேமலதா பேசியதாவது:முகவரி அளித்தவர்களுக்கு, துரோகம் செய்வோர் எந்த நாட்டிற்கும், ஊருக்கும் செல்ல இடமில்லை. 29 எம்.எல்.ஏ.,க்கள் அல்ல; இன்னும் 200 எம்.எல்.ஏ.,க்கள் உருவாகப் போகிறார்கள். உண்மையை பற்றி, ஒரு மணி நேரம் பேசலாம். துரோகம் பற்றி ஒரு நிமிடம் கூட பேசி, நம் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.நான் பேசினால், குடும்ப கட்சி என்பர்.
கடந்த லோக்சபா தேர்தலில், குடும்ப உறுப்பினர்களுக்கு விஜயகாந்த் சீட் வழங்கவில்லை. குற்றவாளிகள், போலிகளுக்கு கட்சியில் இடமில்லை. தொகுதி வளர்ச்சிக்காக செல்கிறோம் என்பவர்கள், சுயநல வாதிகள். தங்களை பாதுகாக்க, வருவாயை பெருக்கச் செல்கின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (179)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Saminathan - mumbai,இந்தியா
02-நவ-201214:32:19 IST Report Abuse
R.Saminathan பொறுமை கண்டிப்பாக தேவை படுகிறது தே.மு.தி.க. தலைவர் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு, நீங்க கோவபடுவது உண்மையானால் உண்மையாகவே கட்சிக்காக பொறுமையையும் கடைபிடிக்க வேண்டும்,எந்த குறையையும் நீங்க சட்டசபைக்கு கொண்டு சென்றாலும் அதுக்கு உடனே தீர்வு கிடைக்காது அதுக்கும் பொருமைகாத்துத்தான் இருக்க வேண்டும் தே.மு.தி.க. தலைவர் திரு.விஜயகாந்த் அவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
babu - tiruchi,இந்தியா
01-நவ-201202:02:29 IST Report Abuse
babu ஜெயாவின் வெற்றி கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பி விட்டது மட்டுமல்ல தமிழகத்தின் எதிர்கால அரசியலுக்கு ஒன்னுமிலாமல் செய்து விஜய் போன்றவர்களை எதிர் கட்சிக்கு கொண்டு வந்து அல்லல் பட செய்து எதிர்கால அரசியலுக்கு கேள்வி குறியாக வைத்து விட்டது தான், எவருக்குமே வழி இல்லையென்றால் ஒருவேளை ரஜினி களம் இறங்கலாம், கன்னடத்து பைங்கிளிகள் கண்டது வெற்றியா தோல்வியா, காலம் பதில் சொல்லும்
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
28-அக்-201219:06:37 IST Report Abuse
villupuram jeevithan Vijaya Kanth should learn: Level Zero gives you an edge in any crisis.
Rate this:
Share this comment
babu - tiruchi,இந்தியா
01-நவ-201202:34:40 IST Report Abuse
babuசீக்கிரமே விஜயகாந்த் சி எம் ஆகலாம், ஏற்கனவே இதை விட மோசமாக ஜெயா கருணா அரசியலில் செயல் பட்டுள்ளார்கள், சி எம் ஆக இதுவெல்லாம் ஒரு காரணிகள், , குடுமி பிடி சண்டை இல்லாமல் இருந்ததே அதுவே போதும் எனவே அடுத்த சி எம் ஆல் ரவுண்டர் தான்...
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
28-அக்-201218:49:43 IST Report Abuse
villupuram jeevithan சினிமாவில் இப்படிதான் ஹீரோ முதலில் ரத்தம் வழிய அடிவாங்கிக் கொண்டு இருப்பார், ஆனால் இறுதியில் முடிவு வேறுமாதிரி இருக்கும். ஆனால் அதை நிஜவாழ்க்கையிலும் அப்படி நடக்கும் என்று இந்த நிஜ ஜீரோ நம்பிவிடக்கூடாது.
Rate this:
Share this comment
babu - tiruchi,இந்தியா
01-நவ-201202:17:05 IST Report Abuse
babuவிஜயகாந்தை போன்றவர்கள் மக்களிடம் சென்று குறைகளை விளக்கும் போது ஏற்கனவே குறைகள் மக்கள் குறைகளாக இருக்கும் போது ஆளும் கட்சிகள் கலக்கம் அடைவதும அதற்காக தூரித்த நடவடிக்கை எடுக்கவும் சரியே, அடிதடி வார்த்தைகள் அரசியல்வாதி விஜயகாந்த் தேவை தான், இனி இவர்கள் கற்றுகொவதர்க்கு என்ன இருக்கிறது, ஒரு இரண்டு பேர் சென்றது நான்கு பேர் சென்றது எதனை பேர் சென்றாலும் வோட்டு விஜயகாந்து குள்ளது அதில் பங்கு போட்டு அதிக எம் எல் ஏக்களை அள்ளி சென்றது அதிமுக, அதிமுக திமுக இரண்டும் இனி எப்படி வரக்கூடிய சாதியம் உள்ளது, தேமுக விற்கு தான் அடுத்த வாய்ப்பு, அதிமுக தற்போது கிடைத்த வாய்ப்பை நல்வழிக்கு பயன்படுதிகொவது வரலாற்றுக்கு நல்லது...
Rate this:
Share this comment
Cancel
Chenduraan - kayalpattanam,இந்தியா
28-அக்-201218:49:33 IST Report Abuse
Chenduraan இப்போ இருக்கிற அரசியல் வாதிகளில் கொஞ்சம் நேர்மையாக இருக்க நினைப்பவர் காப்டன் மாதிரி தெரிகிறது. எல்லா மொள்ளமாரி MLA களும் எப்படி சமதிக்கலாம் என்பதிலே குறியாக இருப்பதால் இந்த குதிரை பேரத்துக்கு மயங்கி விட்டார்கள். அகர்கள் புளைப்பை பார்க்க போய்விட்டார்கள். கப்டனுக்கு தொலை நோக்கு பார்வை ஓடிபோனவர்களுக்கு தொலைநோக்கு பார்வை இல்லை. கொள்ளை அடிக்கவேண்டும் என்பதே அவர்கள் குறிக்கோள், காப்டன் அதற்க்கு இடையூறாக இருந்தார் என்ன செய்வது பாவம் MLA கள்
Rate this:
Share this comment
Cancel
Chandrasekaran - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
28-அக்-201217:20:29 IST Report Abuse
Chandrasekaran திரு. விஜயகாந்த் அவர்கள் முன் கோபத்தை வெளியில் காட்டி விடுகிறார். இதை விடுத்தால் நல்லது. நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது செய்யவேண்டும் என்ற தீராத வேட்கையை அவரது அசைவுகளிலும் செயல்களிலும் பார்க்க முடிகிறது. அனால் இவரை போன்ற நல்லவர்களை அரசியல் வாதிகளும் அதிகார வர்க்கமும் வளர மற்றும் வாழ விடாது. எல்லாவற்றையும் மீறி நல செயல் புரிய எல்லா வளங்களையும் பெற்றிட இறைவனை வேண்டுவதை தவிர வேறு வழி இல்லை.
Rate this:
Share this comment
Cancel
MANJAL THUNDU MAINAR - alkhor,கத்தார்
28-அக்-201216:16:03 IST Report Abuse
MANJAL THUNDU MAINAR மரியா விஜயகாந்த் இன்னிக்கு உங்களுக்கு நல்லவராய்ட்டார். அப்போ அண்ணன் வடிவேலுவோட கதி? அவரு எதுக்காக போனதடவை உங்களுக்காக பிரச்சாரம் செய்தார் தெரியுமா? உங்களோட கொள்(ளை)கைகளுக்காக அல்ல. விஜயகாந்தை எதிர்ப்பதற்காக மட்டுமே. எப்போ அவர வச்சு காமடி கீமடி பண்ணலையே? ஒரு காமடியன்கிட்டயே காமடியா?
Rate this:
Share this comment
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
28-அக்-201219:16:42 IST Report Abuse
s.maria alphonse pandianவிஜயகாந்த் நல்லவராகி விட்டார் ..என்பதல்ல..நேற்று கூட மதுரையில் திமுகவை விமர்சித்திருந்தார்...அவர் திமுகவோடு கூட்டணி வைக்கவேண்டுமென நினைக்கவுமில்லை..வைக்காதிருப்பதே அவருக்கு நல்லது எனவும் கருத்து எழுதி இருந்தேன் ...ஜனநாயகத்தில் ஒருவரது தனிப்பட்ட கோபப்படும் குணத்தை அரசியலாக்குவதையே கண்டிக்கிறேன்..பத்திரிக்கையாளர்கள் மின்வெட்டு பற்றி முதல்வரிடம் எதுவும் கேட்காததையே கண்டிக்கிறேன்.......
Rate this:
Share this comment
Cancel
MANJAL THUNDU MAINAR - alkhor,கத்தார்
28-அக்-201216:10:20 IST Report Abuse
MANJAL THUNDU MAINAR ஆடு (விஜயகாந்த்) நனையுதுன்னு ஒணான் (மரியா) அழுவுது. அன்னைக்கு சொந்தகட்சி வேட்பாளரை அடிச்சாருன்னு அதிமுக கூட்டணி விஜயகாந்த அதிகமா விமர்சனம் செய்ததே கொலைஞர் தி.வி. தான். இன்னிக்கு அதிமுக எதிர்ப்பு விஜயகாந்த் அவங்களுக்கு நல்லவராயிட்டார்.
Rate this:
Share this comment
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
28-அக்-201219:17:32 IST Report Abuse
s.maria alphonse pandianஓணானுக்கும் ஆடுக்கும் என்ன சம்பந்தம்..புரியவில்லை......
Rate this:
Share this comment
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
02-நவ-201200:33:35 IST Report Abuse
Sundeli Siththarஒருவேளை... ஓநாய் அளவிற்கு உயர்த்த மனமில்லையோ என்னமோ......
Rate this:
Share this comment
Cancel
Gogulaa - Thiruthuraipoondi,இந்தியா
28-அக்-201216:05:41 IST Report Abuse
Gogulaa சுற்றிலும் கைத்தடிகள் வசனத்தை எழுத ஒரு கூட்டம் அதனை எப்படி ஏற்ற இறக்கத்துடன் பேச வேண்டும் என்பதனை பல முறை சொல்லிக்குடுக்க ஆட்கள். எப்படி பேசினாலும் கை தட்ட சுற்றிலும் அல்லக்கைகள். கையை வீசினால் பட்டாலும் படாவிட்டாலும் உருண்டு விழும் நடிகர்கள். இதனை உண்மையென்று நம்பி அரசியலுக்கு வந்துவிட்டார். நடைமுறையை பட்டு தெரிந்துகொள்வார் என்ற எதிர்பார்ப்பும் மது மயக்கத்தில் பொய்த்து போய்விட்டது. ஏமாந்தது என்னவோ வோட்டு போட்ட அப்பாவி மக்களே.
Rate this:
Share this comment
Cancel
சாமி - மதுரை,இந்தியா
28-அக்-201215:43:26 IST Report Abuse
சாமி ஊழலை ஒளிக்க எனக்கு தெரிந்த ஒரே வளி ஐந்தாண்டு பதவி முடிந்ததும் ஒறான்று கவர்னர் ஆட்சி வைத்து அவர்கள் ஊழல் சொத்தை பூறாம் புடிங்கி தப்பு பன்னியவர்களை உள்ள போட்டு பின்பு தேர்தல் வைக்கனும் எல்லா தேர்தலும் இப்படி செய்தால் நாடு உருப்படும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.