Talikkattiya boyfriend got in a few seconds the bride | தாலிக்கட்டிய சில விநாடிகளில் காதலனை கரம் பிடித்த மணப்பெண்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாலிக்கட்டிய சில விநாடிகளில் காதலனை கரம் பிடித்த மணப்பெண்

Added : அக் 29, 2012 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெரம்பலூர்:சினிமாவை மிஞ்சும் வகையில், தாலிக்கட்டிய அடுத்த சில விநாடிகளில், தாலியை கழற்றி விட்டு, காதலுடன் செல்வதாக, மணப்பெண் தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பெரம்பலூர் அருகே உள்ள லப்பைக்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப், 24. இவர், பெரம்பலூர் அருகே கீழக்கணவாய் கிராமத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், இரண்டு ஆண்டாக படித்து வந்தார். இவரும், இதே ஊரைச் சேர்ந்த சுப்ரமணி மகள் சகுந்தா, 19, என்பவரும் காதலித்துள்ளனர்.

இந்நிலையில், சகுந்தலாவுக்கும், பெரம்பலூர் சங்குப்பேட்டை பகுதியை சேர்ந்த கருப்பன் மகன் செல்லதுரை, 25, என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. நேற்று காலை, 10:00 மணிக்கு, பெரம்பலூர் பெருமாள் கோவிலில், செல்லதுரைக்கும், சகுந்தலாவுக்கும் திருமணம் நடந்தது.செல்லதுரை, சகுந்தலா கழுத்தில் தாலிக்கட்டிய உடன், மணவறையிலிருந்து எழுந்த சகுந்தலா, செல்லதுரை கட்டிய தாலியை கழற்றிவிட்டு, திருமணத்துக்கு வந்திருந்த காதலன் பிரதீப் கையை பிடித்து கொண்டு, பிரதீபுடன்தான் செல்வேன் என, தெரிவித்தார்.

இச்சம்பவத்தால், அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை மற்றும் அவரது உறவினர்கள், சகுந்தலாவின் காதலனை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார், அங்கு சென்று சமாதானம் செய்தனர். தொடர்ந்து, இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடக்கிறது. இச்சம்பவம், பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sincere Sigaamani - LA,யூ.எஸ்.ஏ
30-அக்-201201:25:46 IST Report Abuse
Sincere Sigaamani நல்ல ஊர் , " சங்கு பேட்டை" மாப்பிளைக்கு சங்குதான், ஜோசியகாரன் சொல்லிஇருப்பான். உனக்கு தோஷம், முதல் தாலி நிக்காதுன்னு. அதனால் அதை கட்டியவுயடன் கழட்டி எறிஞ்சுட்டு காதலன் கூட போய்டா. அடுத்த ஜோசியகார அண்ணாச்சியை பார்த்தவுடன் காதலனுக்கு சங்கு தான். நல்ல பொண்ணு.
Rate this:
Share this comment
Cancel
dharma - nagpur,இந்தியா
29-அக்-201214:11:48 IST Report Abuse
dharma நல்ல வருவம்மா .............செல்லம் வேற ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் முடி கண்ணு
Rate this:
Share this comment
Cancel
saravanan - kristiansand,நார்வே
29-அக்-201211:33:01 IST Report Abuse
saravanan காதலனை கரம்பிடுப்பது தவறில்லை .திருமணதிற்கு முன்பே அந்த மணமகனிடம் அந்த பெண் சொல்லிருக்கவேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Ajaykumar - Rajapalayam,சிங்கப்பூர்
29-அக்-201206:11:11 IST Report Abuse
Ajaykumar தாலி கட்டும் முன் என்ன செய்துகொண்டிருந்தாய்?
Rate this:
Share this comment
Cancel
மோனிஷா - நாகர்கோயில்,இந்தியா
29-அக்-201202:11:46 IST Report Abuse
மோனிஷா தாலி கட்டுமுன் இதைச் செய்திருக்கலாமே?
Rate this:
Share this comment
Cancel
Daniel Joseph - SANAA,ஏமன்
29-அக்-201201:37:15 IST Report Abuse
Daniel Joseph வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை