vijyakanth ready to meet jaya | ஜெயலலிதாவை சந்திக்க விஜயகாந்த் தயார்!: அனுமதி கோரி சபாநாயகரிடம் மனு| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (209)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் நான்கு பேர், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்திய சூழலில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தொகுதி பிரச்னை தொடர்பாக, முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க விரும்புவதாக, விஜயகாந்த் உள்ளிட்ட ஐந்து தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகர் தனபாலிடம் நேற்று மனு அளித்துள்ளனர்.
தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக இருந்தாலும், தங்கள் தொகுதி பிரச்னைக்காக முதல்வரை சந்தித்ததாகக் கூறி, எதிர்க்கட்சியான தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர்ராஜன், தமிழழகன், அருண்பாண்டியன், மைக்கேல் ராயப்பன் ஆகியோர், முதல்வர் ஜெயலலிதாவை சமீபத்தில் சந்தித்தனர்.

நால்வருக்கு முன்னுரிமை

அதோடு, "மக்களுக்காக பல நல்ல திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார்' என, அவர்கள் சான்றிதழ் அளித்தனர். இது, அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், சட்டசபை வைர விழா நினைவு வளைவு அடிக்கல் நாட்டு விழாவிலும், நால்வருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. சட்டசபையில், தே.மு.தி.க., மற்றும் தி.மு.க.,வினர் அமரும் பகுதியில், ஐந்தாம் வரிசையில், நால்வருக்கும் இடம் ஒதுக்கப்பட்டு, அங்கு அமர்ந்தனர்.

சபாநாயகரிடம் மனு

அவர்களுடன், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் யாரும் பேசிக் கொள்ளவில்லை.


இந்நிலையில், சபை நிகழ்ச்சிகள் முடிந்ததும்,இது குறித்து, தே.மு.தி.க., கொறடா சந்திரகுமார் கூறியதாவது:தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், சேந்தமங்கலம் எம்.எல்.ஏ., சாந்தி, திருவெறும்பூர் செந்தில்குமார், செங்கல்பட்டு அனகை முருகேசன், மயிலாடுதுறை அருட்செல்வன் ஆகிய, ஐந்து
பேரும், தமிழக முதல்வரை சந்தித்து, தொகுதி பிரச்னைகளைக் கூறுவதற்காக, அனுமதி கேட்டு, சபாநாயகரிடம் மனு அளித்துள்ளோம். அவரும் ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.


விஜயகாந்த் ஆஜர்

சட்டசபை நிகழ்ச்சிகள் காலை 10:00 மணிக்கு துவங்கின. இந்நிலையில், சட்டசபைக்கு தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், வீட்டில் இருந்து புறப்பட்டு வருவதாக, தகவல் கிடைத்தது. ஆனால், வெகு நேரமாக வரவில்லை.இந்நிலையில், காலை 10:40 மணிக்கு, விஜயகாந்த், சபை வளாகத்திற்குள் வந்து, எம்.எல்.ஏ.,க்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு, அடுத்த ஐந்து நிமிடங்களில் காரில் ஏறி பறந்துவிட்டார்.


தினம் ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் நடந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், விஜயகாந்த் பேசியதாவது:நான்கு எம்.எல்.ஏ.,க்களை, தன்னை சந்திக்க வைத்து,


Advertisement

முதல்வர் ஒரு நாடகத்தை துவக்கினார். அந்த நாடகத்தை முடிவுக்கு கொண்டு வரும் வேலையை, நாம் இப்போதுதுவக்கியுள்ளோம்.நான் உட்பட, ஐந்து எம்.எல்.ஏ.,க்கள், தொகுதி பிரச்னை தொடர்பாக, முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டு, முதலில் கடிதம் கொடுத்துள்ளோம். புதன் மற்றும் வியாழன் அன்று ஒவ்வொரு நாளும், ஐந்து எம்.எல்.ஏ.,க்கள், முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டு கடிதம் கொடுக்க வேண்டும்.இந்த கடிதங்களுக்கு, முதல்வரிடம் அனுமதி கிடைக்காவிட்டால், அதன் மூலம் அரசியலுக்காகவே, நான்கு எம்.எல்.ஏ.,க்களை அவர் சந்தித்ததை மக்கள் உணர்ந்து கொள்வர்.
மீறி அனுமதி கொடுத்துவிட்டால், முதல்வரை சந்தித்து, தொகுதியில் உள்ள முக்கியமான பிரச்னை, மின்வெட்டு உள்ளிட்டவற்றை புகாராக எழுதி மனு கொடுத்து, அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம்.இவ்வாறு விஜயகாந்த் பேசியுள்ளார்.-நமது நிருபர் குழு-

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (209)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhargav Kesavan - Bengaluru,இந்தியா
31-அக்-201201:30:14 IST Report Abuse
Bhargav Kesavan பள்ளியில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ஆசிரியர் மிட்டாய் குடுப்பார், அதை பார்த்து பினால் இருக்கும் மற்ற இருபத்து ஐந்து பேரும் நாங்களும் உங்க மாணவர்கள் தான், எங்களுக்கும் மிட்டாய் குடுங்க என்று வந்து வரிசையில் நின்றால்??
Rate this:
Share this comment
Cancel
Cool Krish - Karur,இந்தியா
30-அக்-201219:16:50 IST Report Abuse
Cool Krish SO உங்க போதைக்கு நாங்க ஊறுகாய் அப்பிடிதான??? தொகுதி மக்களை கரணம் காட்டி, தொகுதியை கரணம் காட்டி, நீங்கள் விளையாடுகிறீர்கள்....மக்களே, விழித்து கொள்ள வாய்ப்பு
Rate this:
Share this comment
Cancel
kumar72 - chennai,இந்தியா
30-அக்-201218:45:27 IST Report Abuse
kumar72 விஜய காந்த் தன்னை ஒரு தலைவராக நினைக்கவில்லை. அரசியல் என்றால் என்ன என்று தெரியவில்லை. கிடைக்கும் வாய்ப்பையும் வீணடிக்கிறார். உதாரணம் : கடந்த லோக்சபா தேர்தல். இப்போது இத்தனை உறுப்பினர்கள் இருந்தும் எவ்வாறு அடுத்த தேர்தலுக்கு மக்கள் நம்பிக்கையை ஏற்படுத்தி தனது உறுப்பினர்களை தயார் செய்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று சிந்திக்காமல் இருக்கும் உறுப்பினர்களையும் இழக்க போகிறார். அடுத்த ராமதாஸ் ஆகபோகிறார்
Rate this:
Share this comment
Cancel
Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
30-அக்-201217:49:11 IST Report Abuse
Jeyaseelan என்ன வச்சி இந்த தேமுதிக MLA க்கள் காமெடி கீமெடி ஒன்னும் பண்ணலியே ........ என்று ஜெயலலிதா புலம்புவது போல தெரிகிறது.
Rate this:
Share this comment
Cancel
S,K,JANAKIRAMAN - chennai,இந்தியா
30-அக்-201217:13:03 IST Report Abuse
S,K,JANAKIRAMAN முதலமைச்சர் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை தனித்தனியாக பார்க்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Alagarasu Natesan - Chennai,இந்தியா
30-அக்-201215:20:16 IST Report Abuse
Alagarasu Natesan எகிறி எகிறி பாய்ந்தும ஒன்றும் நடக்கலை. அதனாலே அம்மா தாயே சரணம். விஜயகாந்துக்கு பிடிக்காதது மன்னிப்பு தருவதுதான் கேட்பது இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
30-அக்-201215:12:59 IST Report Abuse
Rangarajan Pg ஆகமொத்தம் தொகுதியில் உள்ள மக்களை பற்றி உங்களுக்கு கவலை இல்லை அல்லவா விஜி? . சும்மா முதல்வரின் மன ஓட்டத்தை தெரிந்து கொள்ள தான் தொகுதி மேம்பாடு அது இது என்று ஒரு சாக்கு வைத்து அவரை சந்திக்க இருக்கிறீர்கள். உங்களால் தொகுதி மக்களுக்கு ஆகமொத்தம் எந்த ஒரு நல்லதும் நடக்க வாய்ப்பில்லை என்று தான் தெரிகிறது. நன்றாக தான் இருக்கிறது உங்களுடைய அரசியல். உங்களை மாதிரி அரசியல்வாதிகளால் தான் நாடு விளங்காமல் போய் கொண்டிருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
30-அக்-201215:08:39 IST Report Abuse
Rangarajan Pg தற்போது என்ன ஆகிவிட்டது? அவர் நேரம் ஒதுக்க கேட்டிருக்கிறார். அது இன்னமும் பரிசீலனையில் உள்ளது. பரிசீலனையிலேயே இருக்கும். நேரம் கிடைக்கும்போது ஒதுக்குவார். அது வரை பொறுமை இருந்தால் காத்து இருக்கவும். அது சரி விஜி அவர்களே, நீங்கள் முதல்வரை பார்த்து தொகுதி விஷயங்களை பற்றி பேசுவீர்கள். அனால் உங்கள் மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அவ்வாறு இருக்கபோவதில்லை. அங்கே சென்ற மாத்திரத்திலேயே அதிமுகவில் சேருவதற்கு ஆயத்தமாகி விடுவார்கள். சும்மா இருந்த சங்கை ஊதி கெடுதார்போல உங்கள் உறுப்பினர்களை எல்லோரையும் முதல்வரை சந்திக்க வைத்து உங்கள் கூடாரம் காலியாவதற்கு நீங்களே அடியெடுத்து கொடுதிருக்கிறீர்களோ என்று தான் நினைக்க தோன்றுகிறது. ஆனால் ITS A GOOD MOVE THOUGH . I APPRECIATE IT .
Rate this:
Share this comment
Cancel
RAJA - chennai,இந்தியா
30-அக்-201215:05:50 IST Report Abuse
RAJA உண்மையில் அந்த நால்வர் முதல்வரை தொகுதி விசயமாக தான் சந்தித்தனர் என்று நம்புவதற்கு தமிழக மக்கள் அவ்வளவு முட்டாள்கள் இல்லை அப்படி இருந்தாலும் அதேபோல் தொகுதி பிரச்சனையை பத்தி பேச நேரம் ஒதுக்கி கேட்க்கும் பொது ஒதுக்கி பார்ப்பது தான் முதல்வருக்கு அழகு ,பாவம் அவர் இப்படி மாடிகொண்டோமே என்று வருத்தப்பட போகிறார் ,தேவை இல்லாமல் எதோ செய்ய போக இன்று அனுமதி கொடுத்தாலும் தொல்லை கொடுக்காவிட்டாலும் தொல்லை என்ற நிலையில் மாட்டிகொண்டு உள்ளார் முதல்வர்.சென்ற ஆட்சியில் அதிமுக சட்டமன்ற உறுபினர்களை கட்சி மாற வைத்தார்கள் என்றால் அது minority அரசு அதனால் ஆனால் இவர்கள் இப்படி தவறு செய்து மாடி கொண்டு விட்டார் பார்ப்போம் என்ன நடக்கிறது என்று
Rate this:
Share this comment
Cancel
Arskader A - kuala lumpur,மலேஷியா
30-அக்-201215:02:41 IST Report Abuse
Arskader A விஜயகாந்த் சார் சற்று பொறுமைக்க வேண்டும் இல்லையனில் அம்மா உங்களை புரடிவிடுவார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.