Advertisement
நடுவானில் பறந்த விமானத்தில் தூங்கிய பிரிட்டன் பைலட்டுகள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2012,00:01 IST

லண்டன்,: "பிரிட்டன் ஏர்லைன்ஸ்' விமானத்தின் இரண்டு பைலட்டுகள், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போதே, தூங்கிக் கொண்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.பிரிட்டன் ஏர்லைன்ஸ் விமானத்தில், பைலட்டுகள் அடிக்கடி தூங்குவதாக புகார் வந்தன. இந்நிலையில், விமானத்தின் முதன்மை பைலட், கழிப்பறைக்கு செல்வதற்காக, சக பைலட்டுகளிடம், விமானத்தை ஓட்டும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். சில நிமிடங்கள் கழித்து, முதன்மை பைலட், விமானிகள் அறைக்கு தொடர்பு கொண்ட போது, பதில் ஏதும் வரவில்லை. மீண்டும் தொடர்பு கொண்டு, மற்றொரு பைலட்டிடம் பேச முயன்றார். அவரிடமிருந்தும், பதில் வரவில்லை. மூன்றாவது பைலட்டை தொடர்பு கொண்ட போதும், பதில் கிடைக்கவில்லை.
நிலைமையை உணர்ந்து கொண்ட கேப்டன், விமானிகள் அறைக்கு சென்று பார்த்தபோது, விமானிகள், தூங்கிக் கொண்டிருந்தனர். அதுவரை, நடுவானில் விமானம் பறந்து கொண்டே தான் இருந்தது. கேப்டன் எழுப்பியதும், உரிய இடத்தில் விமானம் தரையிறங்கியது. அப்போதும், மூன்றாவது பைலட் தூங்கி கொண்டே தான் இருந்தார்.
இவர்களது பெயரை, பிரிட்டன் விமானத்துறை வெளியிட மறுத்து விட்டது.இது குறித்து, பைலட்டுகள் சங்க நிர்வாகிகள் குறிப்பிடுகையில், "விமானம் பறக்கும் போது, அசதி காரணமாக விமானிகள் தூங்குவது சகஜம் தான்' என்றனர்.விமானிகளின் இந்த பாதுகாப்பற்ற செயல் குறித்து, விமான அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (12)
sing venky - jeddah,சவுதி அரேபியா
31-அக்-201219:19:53 IST Report Abuse
sing venky கூல்....இப்போது தயாரிக்க படும் அனைத்து பயணிகள் விமானத்திலும் "ஆட்டோ பைலட்" (Auto Pilot) எனும் தானியங்கி பொருத்தப்பட்டுள்ளன. விமானி இல்லாமலேயே விமானத்தை இயக்க வல்ல இத்தகைய கணிப்பொறி மூலம் செயல்படும் கருவி விமானத்திலுள்ள அனைத்தையும் கண்ட்ரோல் பண்ண கூடியது. ஆனால், விமானம் இறங்கும் போதும் ஏறும் போதும் விமானியின் (மனித மூளை) கவனமான செயல்பாடு அவசியம். ....என்னதான் இருந்தாலும் விமானிகள் மூவரும் தூங்கியது பெரும் வேதனைக்குரியது... மற்றொரு சுவாரஸ்யமான தகவல்: ஒருமுறை "ஏர் கனடா 143" விமானத்தில் எரிபொருள் நிரப்பும் "அலகு" (பவுண்டு - கிலோகிராம்) 1983 ல் மாற்றப்பட்டது இதனால் நாடு வானில் எரிபொருள் தீர்ந்துவிட்டது. காரணம் என்னவென்றால் 1 பவுண்டு = ௦.45 (கிட்ட தட்ட ஒரு கிலோவில் பாதி). 20345 கிலோ எரிபொருள் நிரப்புவதற்கு பதிலாக 20345 பவுண்டு நிரப்பினார்கள் பிறகு என்ன ஆகும் நடு வழியில் தீர்ந்து போகாமல்...ஆனால் உயிர் சேதம் இல்லாமல் தரையிரங்கியதுதான் அதிசயம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Sivachandra Prabu. D - Madurai,இந்தியா
31-அக்-201200:17:21 IST Report Abuse
Sivachandra Prabu. D இவர்களது சங்க நிர்வாகிகள் தெரிவிதுள்ளது, விமானம் சென்று கொண்டிருக்கும் போடு அசதியில் தூங்குவது சகஜம் என்று தெரிவித்துள்ளனர், இது மிக மிக வெக்கபடவேன்டிய விஷயம் சொல்லும்போது, அவர் அவரது குடும்பத்துடம் அவரது வாகனத்தை ஒட்டி கொண்டு செல்லும் போது இது போல் நடந்தால் தெரியும் எது சகஜமென்று, ஏன் அவர்களுக்கு ஓய்வு நேரம் இல்லியா அல்லது தொடர்ந்து வேலைகளா இல்லை, எல்லாம் ஒரு அஜாகிரத்தை தான் காரணம், இது போன்ற பணியாளர்களை கண்டிக்கப்படவேண்டும் இல்லையென்றால் உணரும்படி தண்டிக்கப்படவேண்டும்... எத்தனையோ மனிதர்கள் இவர்களை நம்பி தான் செல்ல வேண்டியதிருகிறது... ஆனால் இவர்களோ........
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Nellai Tamilan - Nellai,இந்தியா
31-அக்-201200:12:09 IST Report Abuse
Nellai Tamilan தூங்காதே தம்பி தூங்காதே, நீ விமானம் ஓட்டும் போது தூங்காதே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா
30-அக்-201214:58:15 IST Report Abuse
p.manimaran பலருடைய வாழ்க்கையில் விளையாடாதீர்கள். உங்களை கடவுளைப்போல் நம்பி மக்கள் பயணிக்கிறார்கள். வேண்டாம் இந்த சோதனை.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Aboobacker Siddeeq - Singapore,சிங்கப்பூர்
30-அக்-201213:32:15 IST Report Abuse
Aboobacker Siddeeq இனி விமானிகளுக்கான தனி கட்டுப்பாடு அறையை நீக்கி மக்களோடு மக்களாக இருந்து விமானிகளை இயக்கச்செய்ய வேண்டும்.. தனி அறையில் இருப்பதால் தானே இவர்கள் இவ்வாறு பொறுப்பற்று செய்கிறார்கள்.. எத்தனை உயிர்கள் இவர்கள் கையில் என்பதை மறந்து இப்படி தூங்க்குகிறார்களே.. அதுவும் ஒரு பெரிய நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில்?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Murugesan - doha,கத்தார்
30-அக்-201211:31:26 IST Report Abuse
Murugesan Enna oru poruppu...........
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
buvankalyaan - bangalore,இந்தியா
30-அக்-201210:29:16 IST Report Abuse
buvankalyaan நமக்கே தெரியாம நாம ஆட்டோ பைலட்ட நம்பி தான் வாழறோம் போல.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Divaharan - Tirunelveli,இந்தியா
30-அக்-201209:58:51 IST Report Abuse
Divaharan பைலட் என்ன செய்கிறார் என பயணிகளுக்கு தெரியும் படி திரை அமைக்கலாமே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
30-அக்-201215:20:21 IST Report Abuse
தமிழவேல் கேமராவைத்து சிரியதிரையில் காண வைக்கலாம்...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
அந்நியன் - வயல் வெளிகள்,இந்தியா
30-அக்-201209:27:54 IST Report Abuse
அந்நியன் இது இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளதா?? அட பாவிங்களா நீங்க இப்போ தான் முழிச்சிருக்கேன்களா.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
parvathy murali - melbourne,ஆஸ்திரேலியா
30-அக்-201206:30:35 IST Report Abuse
parvathy murali இது மிஹவும் அவமானப்பட வேண்டிய விஷயம் விமானத்தில் பயணம் செய்பவர்கள் இவர்கள் மேல் மிஹவும் நம்பிக்கை வைத்திருபதால் தான் அதில் பயணம் செய்கிறார்கள் என்பதை இவர்கள் எப்படி மறந்து தூங்கினார்கள் ?நம்பிக்கை துரோகம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.