பதிவு செய்த நாள் :
கருத்துகள் (72)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

வங்க கடலில், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, புயலாக உருவெடுத்துள்ள, "நீலம்' இன்று ( 31ம் தேதி) மாலை, 70 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று மற்றும் பலத்த மழையுடன், மகாபலிபுரம் அருகே கரையை கடக்கிறது. இதனால் சூறாவளி காற்றுடன், பலத்த மழை பெய்து வருகிறது. புயல் கரையை கடக்க சுமார் 2 மணி நேரம் ஆகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, மழையால் தத்தளித்து வரும் சென்னை, இப்புயலுக்கு தாக்குபிடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வங்கக் கடலில், தென் கிழக்கு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. சென்னைக்கு அருகில், 550 கி.மீ., தொலைவில் நிலை கொண்டிருந்த இந்த தாழ்வு மண்டலம், தொடர்ந்து வலுவடைந்து, அதிதீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியது; நேற்று காலை, அது புயலாக மாறியது. இந்த புயலுக்கு, "நீலம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

சென்னையை தாக்கும்:இந்த புயல், நேற்று மாலை நிலவரப்படி, சென்னைக்கு தெற்கே, 500 கி.மீ., மற்றும் இலங்கையில் திரிகோண மலைக்கு வட கிழக்கில், 100 கி.மீ., தொலைவில் நிலை கொண்டிருந்த புயல், இன்று காலை சென்னைக்கு தென் கிழக்கே 270 கி.மீ., தொலைவில் நிலை கொண்டிருந்தது.

இந்நிலையில், தற்போது நீலம் புயல் சென்னைக்கு தெற்கே மகாபலிபுரம் அருகே கரையை கடந்து கொண்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மகாபலிபுரம் மற்றும் கல்பாக்கம் ஆகிய இடங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதுடன், மிகப்பெரிய அலைகள் எழும்புகின்றன. இந்த புயல் கரையை கடக்க சுமார் 2 மணி நேரம் பிடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொலைத் தொடர்பு, மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. "மீனவர்கள், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்' என்றும் தெரிவித்துள்ளது. புயலைத் தொடர்ந்து, நாகை, சென்னை துறைமுகங்களில், அபாயத்தை அறிவிக்கும் வகையில் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.

தாங்குமா சென்னை: புயலை அறிவிக்கும் வகையில், நேற்று

காலை முதலே, சென்னை, நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் தொடர் மழை பெய்து வருகிறது. சூறாவளிக் காற்றுடன் மழை பெய்து வருவதால், கடல் அலைகள் பல மீட்டர் உயரத்திற்கு எழுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன; தாழ்வான பகுதிகளிலும் கடல் நீர் புகுந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கன மழையின் காரணமாக, சென்னையில் பல இடங்களில் தற்போது மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், புயல் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், சென்னை தாக்குப்பிடிக்குமா என்ற அச்சம் நிலவி வருகிறது.
இருந்தாலும், மாநகராட்சி சார்பில் தற்போது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஏற்பாடுகள் தீவிரம்: இது தவிர, பொதுப்பணி துறையினர், மணல் மூட்டைகள் உள்ளிட்டவற்றை தயார் செய்து வருகின்றனர். வருவாய்த்துறை அதிகாரிகளும், புயல் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றி, அவர்களுக்கான உதவிகளை செய்ய, தயார் நிலையில் உள்ளனர். கடந்தாண்டு, "தானே' புயல் தாக்குதலில் இருந்து, கடலூர், நாகை மாவட்டங்கள் தற்போது தான் மீண்டு வந்துள்ளது. இந்நிலையில், "நீலம்' புயலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது தெரியாமல், பொதுமக்கள் தவித்து வருகின்றனர். நேற்று முன்தினம் முதலே, கடலூர் பகுதியில் சூறைக் காற்றுடன் மழை பெய்து வருவதால், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில், அரசு சார்பில், சேத தடுப்பு கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விடுமுறை: புயல் மற்றும் மழையைத் தொடர்ந்து, ஏற்கனவே சென்னை, நாகை, கடலூர் மாவட்டங்களில், நேற்று, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. புயல், இன்று கரையை கடக்கும் என்பதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட, ஒன்பது மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி தயார்!:"நீலம்' புயல் சென்னையை தாக்கும் என்பதால், மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தாழ்வான பகுதிகள் மற்றும் சுரங்கப் பாதைகளில் தேங்கும் மழை நீரை வெளியேற்ற, 173 மோட்டார்கள் தயார் நிலையில்

Advertisement

வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களை தங்க வைக்க தனி இடங்கள், நான்கு இடங்களில் உணவு தயாரிக்கும் மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மழையால் நோய் பரவும் என்பதால், சுகாதாரக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மரங்கள் முறிந்தால் அவற்றை அப்புறப்படுத்த, தனியார் மர அறுவை மில்களுடன், மாநகராட்சி நிர்வாகம் கைகோர்த்துள்ளது.

நீலம்' பெயர் எப்படி?: இந்தாண்டில், வடகிழக்கு பருவமழை தொடங்கிய பின், முதல் முறையாக புயல் உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு, "நீலம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. உலகளவில், ஏற்படும் புயல்களுக்கு பெயரிடும் வழக்கம், 1945ம் ஆண்டு துவங்கி விட்டாலும், இந்திய பெருங்கடலில் ஏற்படும் புயல்களுக்கான பெயரிடும் முறை, 2004ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. உலக வானிலை மையத்தில் உறுப்பினராக உள்ள நாடுகளின் பரிந்துரையின் அடிப்படையில், ஒவ்வொரு புயலுக்கும் பெயரிடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் உறுப்பு நாடுகள், சுழற்சி முறையில் பெயரிட்டு வருகின்றன.கடந்த, 2005ம் ஆண்டு உருவான புயலுக்கு, "பனோஸ்' அடுத்து, 2008ம் ஆண்டு உருவான புயலுக்கு, "நிஷா' அதை தொடர்ந்து, 2010ல் உருவான புயலுக்கு, "ஜால்' கடைசியாக, கடந்தாண்டில் தமிழகத்தை தாக்கிய புயலுக்கு, "தானே' என்று பெயரிடப்பட்டது.
இந்தாண்டு, தற்போது உருவாகியுள்ள புயலுக்கு, "நீலம்' என்று, பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் பெயரிட்டுள்ளது. அடுத்ததாக உருவாகும் புயலுக்கு இலங்கையின் பரிந்துரைப்படி, "மகாசன்' என்று பெயரிடப்பட உள்ளது.

- நமது நிருபர் -

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (72)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
31-அக்-201218:39:55 IST Report Abuse
dori dori domakku dori நாலு நாளைக்கு நம்ம ரமணன் சாரோட ஆட்டம் பாட்டம் தன் எல்ல டிவி லேயும் / இந்த சாரு புராணகால ரிஷ்ய சிங்கர் மாதிரிஅவரு வந்த மழை இவரு பேட்டி கொடுத்தா மழை
Rate this:
Share this comment
Cancel
selvam - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
31-அக்-201218:12:13 IST Report Abuse
selvam அன்பே நீலம்... வந்தவரை வாழவைக்கும் தமிழர்ககளுக்கு உன்னை வரவேற்க்க என் தமிழ்மக்களுக்கு சக்தி இல்லை உன்னை வாழ்த்தவும் வயதில்லை என் மக்களுக்கு உன்னை வணங்குகிறோம் வாழவிடு என் தமிழ்மக்களை....
Rate this:
Share this comment
Cancel
Krish - delhi,இந்தியா
31-அக்-201217:49:29 IST Report Abuse
Krish இதுவும் கடந்து போகும் .. கவலை வேண்டாம்..
Rate this:
Share this comment
Cancel
J.Kamarnisha - coimbatore,இந்தியா
31-அக்-201217:09:38 IST Report Abuse
J.Kamarnisha எவ்வித சேதமும் இல்லாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வணங்குவோம்.
Rate this:
Share this comment
Cancel
T.R.Radhakrishnan - Nagpur,இந்தியா
31-அக்-201216:32:28 IST Report Abuse
T.R.Radhakrishnan இங்கே பதியப்பட்டுள்ள கருத்துகளை பார்த்தால், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் பாலும், தேனும் ஓடி, மக்கள் மிக்க மகிழ்ச்சியாய் இருந்த மாதிரி ஒரு தோற்றம் கொடுக்கப்படுகிறது. அது உண்மை என்றால், மக்கள் தி.மு.க.வை மூன்றாவது இடத்துக்கு எதுக்கு தள்ளினார்கள் அன்பர்களே.........இங்கே கருத்து பதியும் நீங்கள் புத்திசாலிகளா, இல்லை, மக்கள் புத்திசாலிகளா? உங்களின் அறியாமை பார்த்து எனக்கு சிரிப்புதான் வருகிறது.
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
01-நவ-201201:07:22 IST Report Abuse
மதுரை விருமாண்டிஅப்பவும் சாக்கடை தான் ஓடியது... இப்பவும் சாக்கடை தான் ஓடுகிறது... நாத்தம் பிடிச்ச சாக்கடைகள் தான் இரண்டும்... நீங்கள் "புதிய சாக்கடை சந்தனம் தான்" என்று பழைய நா(த்)தத்தில் கானம் பாடுகிறீர்கள்.. திமுகவினர் "புதிய சாக்கடை, சாக்கடை தான்", என்று புதிய நா(த்)தத்தில் கானம் பாடுகிறார்கள்... நா(த்)தம் என்னவோ ஒன்று தான்... ராகம் (ரகம்) தான் வேறு... எனக்கு சிரிப்பு வரவில்லை... வெறுப்பு தான் மேலோங்கி வருகிறது .....
Rate this:
Share this comment
Cancel
mohamed abdulla najeeb - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
31-அக்-201215:46:54 IST Report Abuse
mohamed abdulla najeeb இந்த புயல் வர காரணம்,முந்தய திமுக ஆட்சிதான் என்பதை சுட்டிகாட்ட விரும்புகிறான்.
Rate this:
Share this comment
Cancel
Maddy - bangalore,இந்தியா
31-அக்-201215:27:45 IST Report Abuse
Maddy சென்னைல இரண்டு மணி நேர மின்சாரம் நிறுத்தம் மற்ற மாவடங்கள்ள பண்ணிறேன்ன்டு மணி நேர மின் துண்டிப்பா ... இப்போ வருது பார் நீளம் புயல் மொத்தமா துக்கிட்டு போக... எனக்கு ஒரு கண் போனாலும் பரவாஇல்ல உனக்கு ரெண்டு கண் போகுதுல்ல நு நேனைக்கதிங்க மக்களே புயலோ பவர்-ஒ பாதிப்பு இல்லாம வந்த சந்தோசம்...:-)
Rate this:
Share this comment
Cancel
K.JAGATHIS Lenin - chennai,இந்தியா
31-அக்-201214:23:43 IST Report Abuse
K.JAGATHIS Lenin கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை.
Rate this:
Share this comment
Cancel
saravanan - Dares Salaam,தான்சானியா
31-அக்-201214:11:16 IST Report Abuse
saravanan ஆண்டவா, கடற்கரை ஓரம் வாழும் மக்களுக்கு எந்த சேதாரமும் ஏற்படாமல் காப்பாற்று.......
Rate this:
Share this comment
Cancel
அருண் - singapore,சிங்கப்பூர்
31-அக்-201214:03:38 IST Report Abuse
அருண் இதை போன்ற இயற்கை சீற்றதாலவது தமிழன் ஒன்றுனையாட்டும் ....
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
01-நவ-201201:08:09 IST Report Abuse
மதுரை விருமாண்டிஅப்புறம் பேர் கெட்டுப் போயிடும்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.