சென்னை: யாருக்கும் அஞ்சாத நெறிகள் கொண்ட தலைவர் என்றால், ஒரு வழக்கு போட்டதுமே, முன் ஜாமின் மனு தாக்கல் செய்தது ஏன்?'' என, தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,விடம், முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.
சட்டசபையில், துணை மானியக் கோரிக்கை மீதான விவாதம்:
தே.மு.தி.க., பாண்டியராஜன்: நிமிர்ந்த நன்னடை; நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகள் கொண்ட எங்களது தலைவர்...
முதல்வர் ஜெயலலிதா: யாருக்கும் அஞ்சாத தலைவர் என, உறுப்பினர் கூறுகிறார். அஞ்சாத தலைவர் என்றால், ஒரு வழக்கு போட்டதுமே, கோர்ட்டில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்தது ஏன்?
இதற்கு, தே.மு.தி.க., உறுப்பினர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து, கூச்சலிட்டனர். இதனால், சபையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் வைத்திலிங்கம்: நிதானம் இல்லாதவர் எல்லாம் ஒரு தலைவரா?
உடனே, தே.மு.தி.க., உறுப்பினர்கள் கடும் கூச்சலிட்டு, எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சர் கருத்தை, சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என, வலியுறுத்தினர்.
அமைச்சர் வளர்மதி: நிதானம் என்ற வார்த்தை, சபைக் குறிப்பில் இடம்பெறாத வார்த்தை அல்ல. நிதானம் இல்லாத தலைவர் யார்; நிதானத்துடன் செயல்படும் தலைவர் யார் என்பதை, விமான நிலையத்தில் நடந்த சம்பவம் மூலம் அறியலாம். அந்த தலைவரின் அருகதை, யோக்கியதை, அதில் தெரிந்து விட்டது.
தே.மு.தி.க., - பாண்டியராஜன்: ஒரு ஆண்டு ஆட்சி சாதனை, விளம்பரமாக தரப்பட்டது. ஆறு துறைகளுக்கு விளம்பரம் செய்வதற்கு, ஒரு ஆண்டில், 27 கோடி ரூபாய் செலவில் விளம்பரங்கள் தரப்பட்டுள்ளன. காமராஜர் ஆட்சியில், "3 லட்சம் ரூபாய் செலவில், ஒரு சினிமா படம் எடுக்கலாம்' என, கூறியதற்கு, "3 லட்சம் ரூபாய் இருந்தால், மூன்று பள்ளிகளை துவக்கலாம்' என, காமராஜர் தெரிவித்தார்.முதல்வர்: ஒன்றரை ஆண்டுகளில், மக்களுக்கு பயனுள்ள பல திட்டங்களை, அரசு நிறைவேற்றி உள்ளது. துறைதோறும் நடக்கும் நல திட்டங்கள், பெரும்பாலான மக்களுக்கு தெரிவதில்லை. திட்டங்களைப் பற்றி விவரித்து அறிவித்தால் தான், சம்பந்தபட்ட துறையை அணுகி, உரிய பலன்களை, மக்கள் பெற முடியும். இந்த நோக்கத்திற்காகவே, விளம்பரங்கள் தரப்பட்டன; வேறு நோக்கம் கிடையாது.இவ்வாறு விவாதம் நடந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஆயிரம வாயிதா வாங்கிய அம்மாவே ....இப்படி எல்லாம் பேசுவதற்கு உங்களுக்கு எப்படி மனம் வருகிறது ....
கலைஞர் உங்களை வாயிதா ராணி என்று கூறும் போதெல்லாம் ...நீங்கள் ஒரு போதும் வாய் திறந்தது இல்லியே..
நீங்கள் எப்படி விஜயகாந்த் அவர்களை பற்றி பேசலாம்...நீங்கள் வாயிதா வாங்கிய பிறகு தான் படிக்காத என்னை போன்றவர்களுக்கெல்லாம் வாயிதா என்றால் என்னவென்றும் தெரியும்....எங்களுக்கு உங்கள் வழகுகளின் வாயிலாக சட்டம் கற்று கொடுத்ததற்கு நன்றி.... நீங்க இந்த 18 மாதத்தில் என்ன செய்தீர்கள் என்று என்னை போன்ற பாமர மகளுக்கு மிக நன்றாக தெரியும்...
உங்களுக்கு ஒட்டு போட்டதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.....(கேப்டன் அவர்களால் தான் உங்களுக்கு நான் ஒட்டு போட்டேன் உங்களுக்காக அல்ல...)
ஒன்றரை வருடம் மக்களுக்கு நிறைய செய்துள்ளன, ஆனால் மக்களுக்கு அது தெரிவதில்லை என்கிறார்களை,
எங்கே நீங்க மக்களுக்கு செய்தால்தானே மக்களுக்கு தெரியும்...
என்ன கருத்தான பேச்சு உங்களுக்குதான் மக்கள் ஓட்டு போட்டு போட்டு ஜெயிக்க வைக்கவேண்டும்...
மக்கள் இன்னும் நன்றாக விளித்து பார்கவில்லை காரணம் உங்கலை போல் உள்ள ஆட்கள் இருட்டை மட்டும் காண்பிப்பதால் மட்டும் சுயநலத்துடன்......
A leader should have good qualities. From the tv coverages we can see how the reporter was treated badly by the Allakai Murugesan & the repeated bad words from vijayakanth the leader of opposition party.
People are watching your actions, it is not cinema to
cut the unwanted scenes by taking the editors help.
If Vijayakanth is not interested to answer the questions of reporters let him say no comments and request them to ask later.reporters duty is asking questions and publishing the responses to people.
Airport police should have arrested both of them on the spot, so that these kind of worst things won&39t happen in future .

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.