சிவகங்கை: பரமக்குடி கலவரத்தையடுத்து, சிவகங்கையில் நேற்றும் பஸ்கள் ஓடவில்லை.வேன்களுக்கு ரூ. 80 வரை கட்டணம் வசூலித்தனர். ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் குரு பூஜைக்கு சென்றவர்களில், மூன்றுபேர் கொலை செய்யப்பட்டனர். இவர்களது உடல், காரைக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்ததால், பதட்டம் நிலவியது. இதையடுத்து, சிவகங்கையில் இருந்து வெளியூர்களுக்கு, பஸ்கள் ஓடவில்லை.
கடும் வசூல்: இந்த வாய்ப்பை பயன்படுத்தி, வேன்கள், ஆட்டோக்களில் கூடுதலாக பயணிகளை ஏற்றிச் சென்றதோடு மட்டுமல்லாமல், கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்பட்டது. சிவகங்கை - காளையார்கோவிலுக்கு ரூ.30, சிவகங்கை - திருப்புத்தூருக்கு ரூ.50, சிவகங்கை - மதுரைக்கு ரூ.80 என வசூலித்தனர். இதற்கு பஸ் கட்டணம் முறையே ரூ.10, 20, 20.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.