Advertisement
சொத்து குவிப்பு வழக்கு : சசிகலாவிடம் நவ., 20ம் தேதி முதல் கேள்விகள் கேட்பது துவங்கும்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 நவ
2012
01:38

பெங்களூரு: ""தமிழக முதல்வர் ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலாவிடம், அடுத்த மாதம், 20ம் தேதியிலிருந்து கேள்விகள் கேட்பது துவங்கும். அதற்கு முன், 17ம் தேதி வரை, சசிகலா வழக்கறிஞர்கள், ஆவணங்களை பார்வையிடலாம்,'' என, பெங்களூரு சி.பி.ஐ., நீதிபதி சோமராஜு உத்தரவிட்டார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான, சொத்துக் குவிப்பு வழக்கு, பெங்களூரு, சி.பி.ஐ., கோர்ட்டில் நடந்து வருகிறது. "இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள, ஆவணங்களை பார்க்க அனுமதி வேண்டும்' என்ற சசிகலாவின் கோரிக்கை மனுவை, சுப்ரீம் கோர்ட் ஏற்று, 21 நாள் அவகாசம் அளித்தது. இதன்படி, "இம்மாதம், 9ம் தேதியிலிருந்து, 29ம் தேதி வரை, ஆவணங்களை பார்க்கலாம்' என, வழக்கை விசாரித்து வரும் நீதிபதி, சோமராஜு அனுண்மதி வழங்கினார்.
இதற்கிடையில், சசிகலா தரப்பில், சுப்ர்ரீம் கோர்ட்டில், மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், "விடுமுறை நாள் இல்லாமல், 21 நாள் ஆவணங்களை பார்வையிட அனுமதிக்க வேண்டும். போலீஸ் தரப்பில், கோர்ட்டில் தாக்கல் செய்த ஆவணங்களில், குறியீடு செய்யப்படாத அனைத்து ஆவணங்களையும், பார்வையிட அனுமதிக்க வேண்டும்' என, கோரப்பட்டது. இந்த கோரிக்கையையும், சுப்ரீம் கோர்ட் ஏற்றது.
இம்மாதம், 9ம் தேதியிலிருந்து, 29ம் தேதி வரை, விடுமுறை நாள் இல்லாமல், ஒன்பது நாட்கள் மட்டுமே, சசிகலா, சுதாகரன், இளவரசி வழக்கறிஞர்கள் நான்கு பேர் மற்றும் ஆடிட்டர்கள் ஆவணங்களை பார்த்தனர்.
இந்நிலையில், நீதிபதி சோமராஜு முன்னிலையில், நேற்று முன்தினம், வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்ரீம் கோர்ட் வழங்கிய உத்தரவின் நகலை, நீதிபதியிடம், சசிகலா வழக்கறிஞர் மணிசங்கர் கொடுத்தார். அதை ஏற்ற நீதிபதி, "அடுத்த மாதம், 17ம் தேதி வரை ஆவணங்களை பார்வையிடலாம்; குறியீடு செய்த, செய்யப்படாத ஆவணங்களையும் பார்வையிட அனுமதிக்கிறேன்' என்றார்.

நீதிபதி மேலும் கூறியதாவது: அடுத்த மாதம், 17ம் தேதியுடன், சுப்ரீம் கோர்ட் அளித்த, 21 நாள் கெடு முடிவடைவதால், 20ம் தேதி வழக்கு விசாரணை நடக்கும். அன்று, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, சசிகலாவிடம் கேட்கப்பட வேண்டிய மீதி கேள்விகளை கேட்கும் பணி துவங்கும். அன்று, சசிகலா கண்டிப்பாக ஆஜராக வேண்டும்; மொழி பெயர்ப்பாளர் ஹரீஷும் ஆஜராக வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங - chennai,இந்தியா
01-நவ-201206:32:49 IST Report Abuse
ஆரூர் ரங சசிக்கு கண்ணின் பெரிய பிரச்னை உள்ளதாம். விசாரணையின்போது வாயைத் திறந்து பதில் சொன்னால் கண் மேலும் பாதிக்கப்பட வாய்ப்புண்டு . எனவே எல்லாக் கேள்விகளையும் எழுத்துபூர்வமாக முன்பே அளித்தால் கண்& வாயை பயன்படுத்தாமல் பதிலளிக்க முடியும். எனவே இந்த வழக்குக்கு ஓராண்டு வாய்தா அளிக்க வேண்டும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
மோனிஷா - நாகர்கோயில்,இந்தியா
01-நவ-201206:30:25 IST Report Abuse
மோனிஷா கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.