சென்னை: தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்கள், விரிவாக்கப் பணிகள் மேற்கொள்வதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் நவம்பர் 5ல் தமிழக அரசு சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த திட்டங்களின் மதிப்பு ரூ.20,000 கோடி ஆகும். கடந்த 2 அமைச்சரவை கூட்டங்களில் இதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று தெரிவித்துள்ளார். ஹூண்டாய் உள்ளிட்ட ஆட்டோ நிறுவனங்கள், நோக்கியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள், பிஜிஆர் எனர்ஜி அன் ஹிட்சாச்சி உள்ளிட்ட மின்துறை நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. ரூ.20,900 கோடி மதிப்பில் 12 முதலீட்டு திட்டங்கள் கையெழுத்தாக உள்ளது. இந்த திட்டங்களால் சுமார் 1.37 லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெறுவர் எனவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.