Advertisement
டெசோ தீர்மான நகல்: ஸ்டாலின் ஒப்படைத்தார்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

நியூயார்க்: டெசோ மாநாட்டு தீர்மான நகல்களை தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் ஒப்படைத்தார். கடந்த ஆக.12-ம் தேதி சென்னையில் தி.மு.க. சார்பில் கருணாநிதி ‌த‌லைமையில் நடந்த டெசோ மாநாடு நடந்தது. இதில் இலங்கை தமிழர் பிரச்னை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் தீர்மான நகல்கள் ஐ.நா.பொதுச்செயலரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அமெரிக்கா சென்றிருந்த தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் நியூயார்க் நகர் சென்றார். அங்கு ஐ.நா. தலைமையகத்தில் ஐ.நா.‌துணைப்பொதுச் செயலர் ஜான் எலியசனை சந்தித்தார். பின்னர் அவரிடம் டெசோ தீர்மான நகல்களை ஒப்படைத்தார்.அதில்,இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும். இலங்கையில் போர்க்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையின் தமிழர்கள் பகுதிகளில் ராணுவத்தினரை வெளியேற்ற வேண்டும். சிங்களர்களால் பறிக்கப்படட் வீடு,நிலங்களை தமிழர்களிடம் இலங்கை அரசு ஒப்படைக்க வேண்டும். இலங்கை தமிழர்களிடையே ஐ.நா. சபை ‌மூலம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்த வாக்கெடுப்பு தெற்காசிய மனித உரிமை பிரச்‌னையாக முன்னிலைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட ஷரத்துக்கள் அதில் இடம் பெற்றிருந்தன. இந்த சந்திப்பின் போது தி.மு.க. முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஸ்டாலி்ன் பேசியதாவது:நியூயார்க் சென்று ஐ.நா. பொதுச்செயலர் ஜான் எலியசனை அரை மணிநேரம் சந்தி்த்தோம், இலங்கை தமிழர் பிரச்னையில் நீங்கள் எடுத்து வரும் நடவடிக்கையினை பாராட்டுகிற‌ோம். தற்போது மனித உரிமை மறுஆய்வுக்கூட்டம் நடந்து வருகிறது. இத்தீர்மான நகல் உறுதிப்படுத்துவதாக இருக்கும் என்றார்.

Advertisement

மேலும் புதிய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.