Enquiry to DMDK Mlas | 6 தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் மீது உரிமை மீறல் பிரச்னை: சபாநாயகர் | Dinamalar
Advertisement
6 தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் மீது உரிமை மீறல் பிரச்னை: சபாநாயகர்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை : முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக, ஆறு, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் மீது, உரிமை மீறல் பிரச்னை கொண்டு வந்து, சபை உரிமைக்குழு விசாரிக்க, சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், சபாநாயகர் தனபால் வெளியிட்ட அறிவிப்பு: தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடேசன், சம்பத்குமார், சுரேஷ்குமார், தினகரன், நல்லதம்பி ஆகியோர், முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டு, அவரது அலுவலகத்தில், ஒரு கடிதத்தை, 30ம் தேதி கொடுக்கச் சென்றதாகவும், அதை முதல்வர் அலுவலகத்தில் ஏற்க மறுத்ததாக பேட்டி அளித்துள்ளனர். இதை, சபை உரிமை மீறலாகக் கருதுவதால், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசு கொறடா வைகை செல்வன், கடிதம் மூலம் கேட்டிருந்தார்.
தே.மு.தி.க.,வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர்ராஜன், அருண்பாண்டியன், மைக்கேல் ராயப்பன், தமிழழகன் ஆகியோர் முதல்வரை முறையான அனுமதி பெற்று சந்தித்தனர்.

ஆனால், விஜயகாந்த் விமர்சிக்கும் போது, "இது ஒரு நாடகம்' என்றார். அவரது மனைவி பிரேமலதா, "மக்கள் பாடம் புகட்டுவர்' என்று கூறியுள்ளார். மைக்கேல் ராயப்பன், சுந்தர்ராஜனுக்கு மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இவர்களது செயல், அரங்கேற்றப்பட்ட நாடகத்தின் உச்சக்கட்டம் என்றும், மலிவான அரசியலை செய்து கொண்டிருக்கின்றனர் என்றும், வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்படுகின்றனர் என்றும் எண்ணத் தோன்றுகிறது.

முதல்வரை சந்திக்க வேண்டுமென, வெங்கடேசன் உட்பட, நான்கு எம்.எல்.ஏ.,க்கள், முதல்வரின் அலுவலகத்திற்கு கடிதம் கொடுக்கச் சென்ற நிகழ்வை பதிவு செய்ய, பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்றதன் மூலம், தங்களது மலிவான அரசியலை வெளிப்படுத்தியுள்ளனர். "வெங்கடேசன், சம்பத்குமார், சுரேஷ்குமார், தினகரன், நல்லதம்பி மற்றும் பேட்டி அளித்த சந்திரகுமார் ஆகிய ஆறு பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வைகை செல்வன் கேட்டுள்ளார். இப்பிரச்னையில் சபை உரிமை மீறல் இருப்பதாகத் தெரிவதால், சபை உரிமைக் குழுவிற்கு அனுப்பி வைக்கிறேன். இதேபோல், செ.கு.தமிழரசனும் ஒரு உரிமை மீறல் பிரச்னை கடிதம் கொடுத்துள்ளார். சந்திரகுமார், செந்தில்குமார், அருள்செல்வன், முருகேசன், சாந்தி ஆகிய ஐந்து பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, அக்கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். எனவே, இதையும் சபை உரிமைக் குழுவின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கிறேன். இவ்வாறு சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manoj - Dindigul,இந்தியா
02-நவ-201218:45:27 IST Report Abuse
Manoj என்ன பண்ணணுமோ பண்ணுங்கடா.....
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
R.Saminathan - mumbai,இந்தியா
02-நவ-201217:09:38 IST Report Abuse
R.Saminathan தி.மு.க வும் தே.மு.தி.க வும் இப்படி அவஸ்தை படுது, நாளுக்கு நாள் இந்தமாரி சட்டசபையில் நடக்கிறது, மற்ற கட்சிகள் மீது இந்த மாறி உரிமை மீறல் வரமாட்டிங்குது, ஒருவளை மக்கள் பிரச்சனை நமகேதுக்குனு இருக்குதுன்னு இருக்குதோ என்னமோ தெரியவில்லை.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
02-நவ-201210:32:13 IST Report Abuse
villupuram jeevithan இப்படி செய்தால் இந்த ஆறு அந்த நாலோடு சேராத நிலை ஏற்படுமல்லவா?
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்