திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி பகுதியில், புதிதாக உருவாகும் வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டடங்களில், ‹ரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க கூடிய பலகைகளை (சோலார் பேனல்) பொருத்துவது, கட்டாயமாக்கப் பட்டு உள்ளது. இந்த விதி, வரும் 15ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்.தற்போது, நிலவும் 14 மணி நேர மின்வெட்டு ‹ழலை சமாளிக்க, தமிழக அர”, ‹ரிய சக்தி கொள்கையை அண்மையில் அறிவித்தது. அதை செயலாக்கும் வகையில், திருவள்ளூர் நகராட்சி இந்த முன்னோடி விதிமுறையை அறிவித்து உள்ளது.
தீர்மானம்
கடந்த மாதம், 25ம் தேதி நடந்த நகராட்சிக் கூட்டத்தில் இது குறித்த தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதன்படி, நகராட்சியிடம் கட்டட அனுமதி கோருபவர்கள், கட்டட வரைபடத்துடன், சூரிய சக்தி கட்டமைப்பை நிறுவுவதற்கான உறுதிமொழியை சமர்ப்பிப்பது, கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, நகராட்சித் தலைவர், பாஸ்கரன் கூறியதாவது: தமிழகத்தில் நிலவும் மின் தட்டுப்பாட்டை போக்குவதற்காக, சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதை தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. குறிப்பாக, புதிதாக கட்டப்படும் வீடுகளில் இதற்கான கருவிகளை பொருத்த வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசின் இந்த உத்தரவை ஏற்று, தற்போது நிலவி வரும் மின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, இந்த நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், புதிதாக கட்டப்பட உள்ள கட்டடங்களில், மின்சாரம் தயாரிக்க கூடிய பலகைகளை பொருத்துவது கட்டாயம் ஆக்கப் பட்டு உள்ளது. இதற்காக, கட்டட அனுமதி கோரும் விண்ணப்பத்துடன், "தாங்கள் கட்டும் கட்டடத்தில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க கூடிய பலகைகளை கண்டிப்பாக நிறுவுவோம்' என்ற உறுதிமொழி பத்திரத்தை இணைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப் பட்டு உள்ளது. அவ்வாறு குறிப்பிடப்படாத விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இப்புதிய உத்தரவு, வரும், 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
விதிகள் என்ன?
டூ குறைந்தபட்சம், 1,200 சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டடங்கள் கட்டுபவர்கள், சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் மின்சாரம் தயாரிக்க கூடிய பலகைகளை கட்டாயம் பொருத்த வேண்டும். இதற்கு குறைந்த பரப்பளவு கொண்ட கட்டடங்கள் கட்டுவதற்கு இது அவசியம் இல்லை.டூ கட்டட அனுமதி பெறும் போது, மின்சாரம் தயாரிக்க கூடிய பலகைகளை நிறுவுவது குறித்து உறுதிமொழி பத்திரத்தை, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். கட்டட பணி நிறைவடைந்த பிறகு, பணி நிறைவு சான்றிதழ் பெறுவதற்கு முன்பாக, இவற்றை பொருத்தி இருக்க வேண்டும். இல்லையெனில், பணி நிறைவு சான்றிதழ் பெற முடியாது.
சாத்தியமா?இந்த முன்னோடி நடவடிக்கை பாராட்டத்தக்கது. ஆனால்;* ஊரக மற்றும் நகராட்சி பகுதிகளில், அனுமதி மற்றும் பணி நிறைவு சான்று பெறுவது முக்கிய விஷயங்களாக கருதப்படுவதில்லை. பெரும்பாலான கட்டடங்கள் விதிமீறல்களாகத்தான் உள்ளன இந்த ‹ழலில், இந்த விதியின் மூலம் ‹ரிய ஒளி மின்சாரத்தை பரவலாக்குவது வெற்றி பெறுமா என்பது சந்தேகமாக உள்ளது.* இதை செயல்படுத்துவோருக்கு, மானியம் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனையை நகராட்சி பெற்றுத் தருமா என்பது தெளிவாகவில்லை.* அதே போல், கட்டட பரப்பளவிற்கும், நிறுவப்பட வேண்டிய ‹ரிய சக்தி திறனுக்குமான உறவு விவரிக்கப் படவில்லை. அதாவது, 1,200 சதுரடி கட்டுபவர் எத்தனை கிலோவாட் திறனுள்ள கட்டமைப்பை நிறுவ வேண்டும் என்பது, குறிப்பிடப் படவில்லை. இது ஊழலுக்கு வழிசெ#யும். அல்லது பெயரளவிற்கு மட்டும் திட்டம் இயங்கும் ‹ழலை ஏற்படுத்தும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.