சென்னை: முதல்வரை சந்தித்த,தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., அருண் பாண்டியன், பாதுகாப்பு கோரி, போலீஸ் கமிஷனரை சந்தித்தார். தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் தமிழழகன், சுந்தரராஜன், மைக்கேல் ராயப்பன், அருண்பாண்டியன் ஆகியோர், தொகுதி பிரச்னை சம்பந்தமாக, முதல்வரை நேரடியாக சந்தித்து மனு கொடுத்தனர். இதனால், ஆத்திரமடைந்த தே.மு.தி.க.,வினர், அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக கூறப்படுகிறது. மைக்கேல் ராயப்பனை, அலைபேசியில் மிரட்டிய வழக்கில், திருநெல்வேலியைச் சேர்ந்த அய்யம்பெருமாள் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், நேற்று, பேராவூரணி தொகுதி, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., அருண்பாண்டியன், போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து அவரும், உயர் போலீஸ் அதிகாரிகளும், வெளிப்படையாக தகவல் தர, மறுத்துவிட்டனர். கொலை மிரட்டல் வந்திருப்பதால், பாதுகாப்பு கோரி, அவர் போலீஸ் கமிஷனரை சந்தித்து இருக்கலாம் என, கூறப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.