பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு, ஏழு மாத வாடகை செலுத்தாத கடைகளை நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக பூட்டி "சீல்' வைத்தனர்.
பொள்ளாச்சி நகராட்சிக்கு சொந்தமாக, வெங்கட்ரமணன் ரோட்டில் கடைகள் உள்ளன. மாத வாடகை அடிப்படையில் இந்த கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில், வெங்கட்ரமணன் ரோட்டில் உள்ள முதல் கடை கணேசன் என்பவருக்கு மாத வாடகை இரண்டாயிரத்து 776 ரூபாய் என்ற அடிப்படையிலும், 12வது கடை ராஜ்கபூர் என்பவருக்கு இரண்டாயிரத்து 415 ரூபாய் மாத வாடகைக்கும், 14வது கடை ராஜலட்சுமி என்பவருக்கு இரண்டாயிரத்து 476 ரூபாய் மாத வாடகைக்கும் விடப்பட்டது.
இந்த மூன்று கடையினரும், நகராட்சிக்கு ஏழு மாதமாக வாடகை செலுத்தாமல் இருந்தனர். வாடகை செலுத்தும் படி நகராட்சி சார்பில் பலமுறை அறிவுறுத்தப்பட்டும், தொகையை செலுத்தாததால், கடைகளுக்கு சீல் வைக்க நகராட்சி கமிஷனர் சுந்தராம்பாள் உத்தரவிட்டார்.இதையடுத்து, வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், வருவாய் உதவியாளர் சுந்தரேசன், எபினேசர் தேவபிரகாசம், அலுவலக உதவியாளர் ராஜசேகர் ஆகியோர் கடைகளை பூட்டி "சீல்' வைத்தனர். பரபரப்பான பகுதியில், மூன்று கடைகளுக்கு
நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக "சீல்' வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கான நிலுவை வாடகையை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக செலுத்த வேண்டும். செலுத்தாத கடைகள் மீதும் அதிரடி நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதுபோல், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், வீட்டு வரி ஆகியவற்றையும் செலுத்த வேண்டும்,' என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.