green doctor | பச்சை டாக்டர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பச்சை டாக்டர்

Updated : நவ 02, 2012 | Added : நவ 02, 2012 | கருத்துகள் (3)
Advertisement
 பச்சை டாக்டர்

உணவே மருந்து என்ற காலம் மாறி தற்போது மருந்தே உணவு என மாறிவிட்டது. இதற்கு பீசா, பர்க்கர், நூடுல்ஸ் போன்ற நவீன உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சி இன்மையே காரணம். காய்கறிகளை, சாப்பிடும் பழக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இவற்றின் முக்கியத்துவம் பலருக்கு தெரிவதில்லை. பழங்கள், காய்கறிகள் உடல் நலம் காக்கும் உணவுகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றை சாப்பிடுவதால் உடல் நலம் சீராக்கப்பட்டு, நோய்களின் தாக்கம் குறைகிறது. உடலின் பல்வேறு இயக்கங்களை ஒழுங்குபடுத்துவதோடு தேவையான ஊட்டச்சத்துக்களையும் தருகிறது. இயற்கையாகவே பல காய்கறிகள் குறைந்த கொழுப்பும், கலோரியும் கொண்டவை.

நன்மைகள்

* இதயம் சார்ந்த நோய்கள் குறைக்கிறது.
* சிலவகை புற்றுநோய்களை கட்டுப்படுத்துகிறது
* உடற்பருமனை குறைக்கிறது
* பொட்டாசியம், போலிக் அமிலம் வைட்டமின் ஏ.சி., போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் காய்களில் தான் உள்ளன.
* பொட்டாசியம் இரத்தம் அழுத்தம், சீறுநீரக கற்கள், எலும்பு தேய்மானம் போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது.
* போலிக் அமிலம் ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கிறது
* வைட்டமின் ஏ கண்கள், தோல்கள் ஆரோக்கியமாக இருக்கவும், நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கவும் பயன்படுகிறது
* வைட்டமின் சி பற்கள் சார்ந்த நோய்களை நீக்குவதோடு. நோய் எதிர்ப்பு திறனையும் அதிகரிக்கிறது.

ஏன்? அசைவ உணவுகள் வயிற்றில் அமிலத்தன்மையை உண்டாக்கி பிரச்னையை ஏற்படுத்தும்
சைவ உணவான காய்கறிகளில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மருத்துவ குணம் உண்டு. இதை கண்டறிந்து உண்டால் மருத்துவரிடம் செல்லும் தேவை இருக்காது. காய்கறிகள் உட்கொள்பவர்களுக்கு அறிவு கூர்மை அதிகம் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பழங்கள் காய்கறிகளை உண்பவர்களுக்கு உடற்பருமன் நோயும் ஏற்படுவதில்லை. சரிவிகித உணவு என்பது அனைத்து காய்கறிகளையும் சரிவிகித சுழற்சி முறையில் உட்கொள்வது தான்.

உடற்பயிற்சி நன்மைகள்:
ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி அவசியம். நம்மில் பெரும்பாலானோர் உடற்பயிற்சியை மறந்து, மருந்து, மாத்திரைகளில் வாழ்கிறோம். நேரமின்மை. இயந்திர வாழ்க்கை வாழ்வதே இதற்கு முக்கிய காரணம். தினம் உடற்பயிற்சி செய்வதால் உடல்நலம் காக்கப்படுவதோடு சுறுசுறுப்பாக செயல்பட முடியும்.

நீண்ட ஆயுள்
* தன்னம்பிக்கை அதிகரித்தல்
* நல்ல தூக்கம்
* சுறுசுறுப்பாக செயல்படுதல்
* வலுவான தசை, எலும்பு உருவாகுதல்
* உயரத்திற்கு ஏற்ற எடையை பெறுதல்
* எப்போதும் சந்தோஷமாக இருத்தல்
* மன அழுத்தம் குறைதல்

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chenduraan - kayalpattanam,இந்தியா
02-நவ-201221:48:12 IST Report Abuse
Chenduraan காய்கறிகள் நல்லதுதான் ஆனால் அவைகளை நன்கு வேக வைத்து சாப்பிடவும். நம்ம ஆட்கள் எல்லா வித மருந்துகளும் உபயோகப்படுத்துகிறார்கள். தரமான உற்பத்தி இல்லை எனவே வேக வைத்து சாப்பிடவும்.
Rate this:
Share this comment
Cancel
M Babu - burbank,யூ.எஸ்.ஏ
02-நவ-201211:13:02 IST Report Abuse
M Babu Good article.
Rate this:
Share this comment
Cancel
02-நவ-201207:51:08 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் கேழ்வரகு போன்ற நன்மை தரும் தானியங்களை உண்டு ஆரோக்கியத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த நம் மக்களை, காய்கறி பழம் உண்ண ஊக்குவிப்பதற்கு பதில், எந்தப் பலனுமில்லாத அரிசிக்கு அடிமையாக்கி விட்டனர். இந்தக் கட்டுரையாவது ஆளுவோருக்கு நல்ல புத்தி கொடுக்கட்டும். இலவச அரிசிக்கு பதில் குறைந்த விலையில் கம்பு, கேழ்வரகு,நவதானியம் ,மற்றும் காய்கனிகளைக் கொடுக்கலாம். இதன் மூலம் நம் மாநிலம் சர்க்கரை நோயின் தலைமையகமாவதைத் தடுக்கலாமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை