கிருஷ்ணகிரி: மாவட்ட தி.மு.க.
இளைஞர் அணி அமைப்பாளர் ரஜினி செல்வம் வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி
மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி சார்பில், அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி, பள்ளி
மாணவ, மாணவியருக்கு கவிதை ஒப்பித்தல் போட்டி, வரும், 3ம் தேதி காலை, 9
மணிக்கு, கட்டுரை போட்டி மதியம், 2 மணிக்கு, பேச்சுபோட்டி, 4ம் தேதி காலை, 9
மணிக்கு, கிருஷ்ணகிரி எல்.ஜே.பி., திருமண மண்டபத்தில் நடக்கிறது.
தி.மு.க.,மாவட்டச் செயலாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ., தலைமை வகிக்கிறார்.
மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் சுகவனம் எம்.பி., மாவட்ட அவைத்தலைவர்
வெங்கடேசன், முன்னாள் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் யுவராஜ் ஆகியோர்
முன்னிலை வகிக்கின்றனர். போட்டிகளில் பங்கேற்க விரும்பும் பள்ளி மாணவ,
மாணவியர், தங்களது கல்வி நிலையத்தின் சான்றுகளோடு வரவேண்டும். 9, 10, 11
மற்றும் ப்ளஸ்-2 வகுப்பு மாணவ மாணவியர் மட்டும் போட்டிகளில் பங்கேற்க
வேண்டும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும். மாவட்ட
அளவில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடிப்போர், மாநில அளவிலான போட்டிகளில்
பங்கேற்க தகுதிபெறுவர். இது குறித்து மேலும் விவரங்கள் அறிய விரும்புவோர்,
98433-66981 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.