சென்னை:"நீலம்' புயல் காரணமாக, எதிர்பார்க்காத வகையில், இரண்டாவது நாளாக, தமிழகத்தில் உள்ள காற்றாலைகள் மூலம், 1,900 மெகா வாட் மின்சாரம், <உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போனதால், எதிர்பார்த்த அளவு காற்றாலைகள் மூலம், மின்சாரம் உற்பத்தி, செய்ய முடியாத நிலை இருந்தது. கடந்த, இரண்டு வாரங்களுக்கு முன், காற்றாலைகள் மின் உற்பத்தி, 50 மெகா வாட் என்ற அளவிற்கு குறைந்தது.
ஆக., 26ம் தேதி, காற்றாலைகள் வழக்கத்தை விட, அதிகமாக, 4,053 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து, சாதனை படைத்தன. வடகிழக்கு பருவ மழை, புயலுடன் துவங்கியது. அத்துடன், "நீலம்' புயல் காரணமாக, கடந்த சில நாட்களாக காற்றின் வேகம் அதிகமாக இருந்தது.இதன் பயனால், காற்றாலைகள் மின் உற்பத்தியில் வெகுவாக மாற்றம் ஏற்பட்டது. புயல் கரையை கடந்த பின், நேற்று முன்தினம் யாரும் எதிர்பார்க்காத வகையில், காற்றாலைகள் மூலம், 1,500 மெகா வாட்டும், நேற்று, 1,900 மெகா வாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டது.
புயலால் காற்றாலைகள் மூலம் கிடைத்த கூடுதல் மின்சார உற்பத்தி, மின்வாரியத்திற்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அதனால், மின் தட்டுப்பாடு சற்று குறைந்திருக்கிறது. பருவநிலை இயல்பாக மாறியதும், காற்றாலை மின் உற்பத்தி குறையும் என, கூறப்படுகிறது.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
டும் டும் டும்... அதனால் அறிவிப்பது என்னவென்றால், 5000 மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டவுடன் ( பருவ நிலை மாறியவுடன் ) மீண்டும் மின் வெட்டு நேரம் அதிகரித்துவிடும்.
புயலால் 5000 மின்கம்பங்கள் முறிந்து விழுந்து, கடலோர மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு அந்த மின்சாரம் மற்ற மாவட்டங்களுக்கு சற்று கூடுதலாக கிடைக்கிறது. இதை வைத்து எப்படியெல்லாம் மக்கள் ஏமாற்றபடுகிறார்கள் பாருங்களேன்.
தமிழகத்தை அவதிபடுதும் இந்த மின்சாரம் எப்போது தமிழக மக்களுக்கு நிம்மதி தருமோ, நல்லது நடந்தால் சரிதான் மின்சாரத்தால் சிறு பெரு தொழிலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழகரசு போதுமான உதவிகளை செய்து தர வேண்டும்.மக்கள் போராட்டம் நடத்தும் அளவுக்கு தமிழகரசு நடந்துக்ககூடாது.
ஆனால் இன்றுவரை கூட காற்றலை மூலம் வரும் மிசாரம் முழுவதும் கொண்டு செல்ல நமக்கு சரியான கிரிட் வசதி கிடையாது பெறப்படும் மின்சாரத்தில் இருபது சதவீதம் வேஸ்ட் ஆகிறது என்று சொல்கிறது புள்ளி விவரம்
", மின் தட்டுப்பாடு சற்று குறைந்திருக்கிறது." - சும்மா காமெடிக்குதானே இப்படியெல்லாம் நியூஸ் போடுறீங்க..... மின்தட்டுப்பாடு எவ்வளவு குறைந்திருக்கிறது.... எந்தெந்த இடங்களிலெல்லாம் குறைந்திருக்கிறது என்று விவரமாக செய்தி போடலாமே.... உண்மையாக இருந்தால்???
நீலம் விட்ட ஏப்பம் பூம், பூம் என்றது
காலம் கெட்டது ஆனாலும் காற்று ஆலை சுற்றுது
ஓலம் இட்ட மக்கள் இடையே சிறிது மகிழ்ச்சி சிதறுது
ஞாலம் மறுபடியும் இருட்டில் மூழ்காமல் இன்ருந்தால் சரிதான்
இல்லாட்டி மறுபடியும் சாரி தான்
என்ன அதிகமாக மின்சாரத்தை உற்பத்தி செய்து, சாதனை படைத்ததாலும் .தமிழகத்தின் சாபக்கேடு 1 நாளைக்கு 12 மணி நேரம் மின்சாரம் கட்டு மக்கள் மகிழ்ச்சி [பருவநிலை இயல்பாக மாறியதும், காற்றாலை மின் உற்பத்தி குறையும் என, கூறப்படுகிறது.] இரண்டு நாளைக்கு ................
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.