I have a story to tell? People know: Karunanidhi | நான் சொல்வது கற்பனை கதையா? மக்களுக்கு தெரியும் :கருணாநிதி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நான் சொல்வது கற்பனை கதையா? மக்களுக்கு தெரியும் :கருணாநிதி

Added : நவ 02, 2012 | கருத்துகள் (186)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 நான் சொல்வது கற்பனை கதையா? மக்களுக்கு தெரியும் :கருணாநிதி

சென்னை:"தி.மு.க., ஆட்சியில், 7,100 மெகா வாட் மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. நான் சொல்வது, கற்பனைக் கதையா என்பதை, மக்கள் புரிந்த கொள்ளட்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:பல்வேறு மின்திட்டங்கள் மூலமாக, கடந்த, 2014ம் ஆண்டுக்குள், 7,100 மெகா வாட் மின்சாரம் கிடைப்பதற்கு, தி.மு.க., அரசு வழி செய்ததாக, கருணாநிதி கூறியிருப்பது, வெறும் கற்பனைக் கதை என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். வடசென்னை, மேட்டூர், தூத்துக்குடி, உடன்குடி, வல்லூர், ஜெயங்கொண்டம் ஆகிய திட்டங்களில் இருந்து, 7,100 மெகா வாட் மின்சாரம் கிடைக்க, தி.மு.க. ஆட்சியில் வழிவகை காணப்பட்டது.

தற்போது இந்த திட்டங்களில் ஒன்றிரண்டு செயல்படாமல் விட்டுப் போயிருக்கலாம். ஆனால், தி.மு.க., ஆட்சியில் வழி வகை காணப்பட்டதைத் தான், நான் சொல்லியிருந்தேன். நான் சொல்வது கற்பனைக் கதையா என்பதை மக்கள் புரிந்து கொள்ளட்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (186)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
neelakantan s - mumbai,இந்தியா
13-ஜன-201300:05:44 IST Report Abuse
neelakantan s கடந்த தி மு க ஆட்சியில் மின்சார அமைச்சராக இருந்த திரு ஆற்காடு வீராசாமி " தி மு க வரும் சட்டசபை தேர்தலில் தோற்க மின்சார வெட்டு ஒரு முக்கிய காரணமாக இருக்கும் " என்று பேசியதாக ஞாபகம். ஒன்று மட்டும் நிச்சயம் இந்த இரு தலைவர்களும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டியோ அல்லது மட்டம் தட்டுவதையோ நிறுத்தி விட்டு ஆக்க பூர்வமான செயலில் இறங்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு தேவை இப்பொழுது மின்சாரமும் தண்ணீரும் தான். வீண் விதண்டா வாதம் அல்ல
Rate this:
Share this comment
Cancel
saravana boopathi - namakkal,இந்தியா
08-நவ-201215:50:46 IST Report Abuse
saravana boopathi அய்யா சங்கர் அவர்களே , அம்மா ஆட்சிக்கு வந்து வருசத்துக்கு மேல ஆகுது, இன்னும் கலைஞர் கதைய பேசிக்குட்டு இருந்தா, நீங்க எதுக்கு இருக்கிங்க? பேசாம எங்களால ஒன்னும் பண்ண முடியாதுன்னு ஒதுங்கிட்ட வேற வழியாவது பார்க்கலாம். யோசிங்க பாஸ் டாஸ்மாக்க் மாதிரியான பொன்னான திட்டம் எல்லாம் வரும் மக்கள்ளோட உழைப்பையும் உடம்பையும் டாஸ்மாக்கும் , கந்துவட்டியும், வேலைவசியும், கரன்ட்கட்டும் கொள்ளை அடிக்குது ,சரிப்பன்னவேண்டிய பொறுப்பு யாரருக்கு?
Rate this:
Share this comment
Cancel
Jams - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
07-நவ-201213:48:42 IST Report Abuse
Jams சென்ற திமுக ஆட்சி எப்படிப்பட்ட ஆட்சி என்பது ஜெயா கையில்தான் உள்ளது. ஆனால் போகின்ற போக்கு நல்லதாக தெரியவில்லை. நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே போகிறது. தவறாக வோட்டு போட்டுட்டோமோ என்று பீல் பன்னுகிறேன். நிச்சயமாக சென்ற ஆட்சியில் இப்பொழுது இருப்பதை விட மக்களுக்கு கஷ்டங்கள் குறைவு தான்.
Rate this:
Share this comment
Cancel
mohan - chennai,இந்தியா
07-நவ-201207:33:30 IST Report Abuse
mohan உண்மை. மக்களுக்கு இந்த விவரம் எங்கே தெரிய போகிறது. சில லட்சம் பேருக்கு வேலை என்று சொல்லிவிட்டு ஒட்டு மொத தமிழ் நாட்டு எதிர் காலத்தை அடகு வைத்து விட்டனர். விஞ்ஞான ரீதியாக கொள்ளை அடிக்கும் இந்த அரசியல்வாதிகள், நாட்டு மின்சாரத்தை மற்ற நாடுகள் போல் நவீன முறையில் முன்னேற்றம் செய்வார்களா.
Rate this:
Share this comment
Cancel
mohan - chennai,இந்தியா
07-நவ-201207:28:45 IST Report Abuse
mohan ஏன் ஐயா, தமிழ் நாட்டின் மொத்த மின் தேவை எவ்வளவு, நாம் வெளிநாட்டு கம்‌பெனிகளுக்கு மின்சாரம் கொடுக்கலாமா வேண்டாமா, என உங்களுக்கு தெரியலையா, தென் ஆப்பிரிக்கா நாட்டில் தொழில் துவங்கும் வெளி நாட்டு கம்பெனிகள், மின்சாரத்தை அவர்களாகவே தயார் செய்து கொள்ள வேண்டும். நம் நாட்டில் ஏன், நமது மின்சாரத்தை வெளிநாட்டு கம்பெனிகளுக்கு கொடுத்து விட்டு, பேருக்கு வேலை வாய்ப்பு என்ற பெயரை சொல்லி 8 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை கெடுக்குறீர்கள். யாரும் இரவு தூங்க முடிவதில்லை. தொழில் முடக்கம் ஆகி விட்டது. நாம் மின்சாரத்தை தயார் செய்து விட்டு வெளி நாட்டு காரனுக்கு கொடுத்து விட்டு நாம் பட்டினி கெடக்க வேண்டுமா. என்ன ஐயா தர்மம் இது. நீங்கள் தொலை நோக்கு பார்வையில் செய்த மக்களுக்கான எதாவது உற்படியான செயல் திட்டம் எதாவது ஒன்று சொல்ல முடியுமா. கடவுளே நாட்டை இந்த அரசியல் வாதிகளிடமிருந்து காப்பாற்று. என்ன நடக்கிறது என்று மக்களுக்கு தெரிவதில்லை. அப்பாவி மக்களின் ஓட்டை வாங்கி கொண்டு நாட்டின் வளர்ச்சி பாதையை வெளி நாட்டு கம்பெனி களுக்கு விற்று விடுகின்றனர்.
Rate this:
Share this comment
Cancel
MANJAL THUNDU MAINAR - alkhor,கத்தார்
05-நவ-201211:48:41 IST Report Abuse
MANJAL THUNDU MAINAR நீங்க இதுவரை சொன்ன கதைகளில இந்தக்கதை ரொம்ப நல்லா இருக்குன்னே. இதையே நம்ம அடுத்த படத்துக்கு வச்சிக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Prakash JP - Chennai,இந்தியா
04-நவ-201217:23:57 IST Report Abuse
Prakash JP அதிமுகவின் 2001 - 2006 உங்கள் ஆட்சியில் மின்வெட்டு இல்லை...சரி, நீங்கள் சொல்லியதிலிருந்தே, உங்களின் அந்த காலகட்ட ஆட்சியில் புதிய மின் திட்டங்கள் எதுவும் நிறைவேற்றபடவில்லை, பயன்பாட்டிற்க்கும் வரவில்லை,....அந்த ஐந்து வருசமாக ஒப்பந்தங்கள் மட்டும் தான் போட்டுள்ளீர்கள்...... அப்போ, அந்த காலத்தில் உற்பத்தியான மின்சாரம் எல்லாம், அதற்கு முந்தைய திமுக அரசு (1996-01) நிறைவேற்றிய மின் திட்டங்களால் தான் வந்தது என்று ஒத்துகொண்டதர்க்கும்...... இப்போதும் திமுக அரசு, 2001-06 ஆண்டுகளில் ஆரம்பித்து வைத்த புதிய மின் உற்பத்தி திட்டங்களால் தான் 2013 இறுதியில் மின்வெட்டு அகலபோகிறது என்று நீங்களே மக்களுக்கு இந்த பேச்சின் மூலம் மக்களுக்கு உணர்த்தியதற்கும் மிக்க நன்றி .. நீ அரிசி கொண்டுவா, நான் உமி கொண்டுவருகிறேன், ரெண்டுபேரும் ஊதி ஊதி தின்னலாம் என்பதை போல, புதிய மின் திட்டங்களை துவக்கி நிர்மாணிப்பது திமுக, ஆனால் அதின் பலன் கிடைக்க ஆரம்பிப்பது அடுத்து வரும் அதிமுக ஆட்சி காலத்தில்....ஆனால், அதிமுக ஆட்சிகாலத்தில் எந்த ஒரு புதிய மின் திட்டங்களையும் துவக்காதலால், அதின் விளைவான மின் பற்றாகுறையை சந்திப்பது அடுத்து வரும் திமுக ஆட்சி காலங்கள்தான்..... இப்போது கூட, 2011 ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக, எந்த ஒரு புதிய மின் திட்டத்தையும் அறிவிக்கவில்லை...வேலைகளை துவக்கவில்லை.....இப்போதைக்கு கட்டுமான பணிகள் நடைபெற்றுவரும் புதிய மின் நிலையங்களும், சென்ற திமுக ஆட்சியில் ஆரம்பிக்கபட்டவைத்தான்.... 2011-16 ஆண்டுகளில் மேலும் புதிய மின் திட்டங்களை ஜெயாவின் அதிமுக அரசு துவக்கினால்தான், அடுத்துவரும் ஆண்டுகளில் (2016 - 21) உற்பத்தி துவங்கி, அப்போதைய மின்தேவைகளை ஈடு செய்ய முடியும்...திமுக 2006-11 ஆண்டுகளில் துவக்கிய திட்டங்களின் மொத்த உற்பத்தி, 2016 ஆண்டின் தேவையை பூர்த்தி செய்யும்.. ஆனால், 2016 ஆண்டிற்கு பிறகிர்க்கான, அதிகரிக்கும் மின் தேவைகளை ஈடுசெய்ய, இப்போதைய அதிமுக அரசு, புதிய மின் திட்டங்களை (திமுக துவக்கியது போக) துவக்குமா, இல்லை வழக்கம் போல உமியை மட்டும் கொண்டுவந்து, 2016 வரைதானே ஆட்சியில் இருக்கபோகிறோம், அதுவரை, திமுக ஆட்சியின் மின்திட்டங்களினால் கிடைக்கபோகும் மின்சாரத்தை வைத்து, மின் தட்டுபாட்டை நான் தான் போக்கினேன் என்று சுய தம்பட்டம் அடித்துவிட்டு, 2016 ஆண்டிற்கு பிறகு மீண்டும் மின் பற்றாக்குறைக்கு தமிழகத்தை ஜெயா தள்ளுவாரா ????
Rate this:
Share this comment
Cancel
S.VENGATESAN (POR VAAL) - chennai,இந்தியா
03-நவ-201216:18:44 IST Report Abuse
S.VENGATESAN (POR VAAL) ஐந்து வருடமும் கனிமொழியை காப்பற்றவே நேரம் போதவில்லை. மின்சாரம் இருந்தா என்ன என்று இருந்து விட்டு மக்களுக்கு தெரியும் என்று கதை வேறு விடுகிறார் திருவாளர் மு க. இதையாவது உன் குடும்பதராவது நம்புகிறார்களா??
Rate this:
Share this comment
Cancel
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
03-நவ-201214:17:57 IST Report Abuse
T.C.MAHENDRAN கற்பனை கதைகளை சினிமாவுக்காக எழுதத்தொடங்கிய கருணாநிதி இன்றைக்கும் கற்பனை உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டுதான் இருக்கிறார். இவரே ஒரு நம்பர் ஒன் டுபாகூர் .
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
03-நவ-201213:19:15 IST Report Abuse
Pannadai Pandian உண்மை என்னன்னா தலைய குளிர் ஜுரம் வாட்டுது. தான் போட்டு வைத்திருக்கும் முட்டுக்கட்டைகளை எல்லாம் தாண்டி, மத்திய அரசின் பாரா முகத்தையும் தாண்டி ஜெயா எப்படியும் மின் வெட்டை சரி செய்து விடுவார் என்று இவர் உள் மனது சொல்கிறது. அதுதான் பயத்தில் ஜன்னி வந்து ஏதேதோ உளறுகிறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை