சிதம்பரம்:சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக் கழக வளாகத்தில், நள்ளிரவில், மர்மமான முறையில், 41 இரு சக்கர வாகனங்கள், மர்மமான முறையில் எரிந்து சாம்பலாகின. சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக் கழக விருந்தினர் மாளிகை எதிரில், மாணவியர் விடுதி உள்ளது. விடுதியில், வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர் தங்கி படித்து வருகின்றனர்.விடுதி எதிரில் மாணவியரின், இரு சக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிள் நிறுத்தும், "ஷெட்' உள்ளது. இங்கு, 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிள்கள் நிறுத்தப்படுவது வழக்கம். நேற்று முன்தினம், நள்ளிரவு, 1:00 மணியளவில், இருசக்கர வாகனங்கள், திடீரென, மர்மமான முறையில், தீப்பிடித்து எரியத் துவங்கின.விடுதி மாணவியரின் கூச்சலைக் கேட்டு, பல்கலை ஊழியர்கள் ஓடிவந்து, சில வாகனங்களை மட்டும், அப்புறப்படுத்தினர்.தகவலறிந்த, சிதம்பரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், 45 நிமிடம் போராடி, தீயை அணைத்தனர். இருப்பினும், 41 இரு சக்கர வாகனங்களும், ஏழு சைக்கிள்களும் முற்றிம் எரிந்து சாம்பலாகின; சேத மதிப்பு, 15 லட்சம் ரூபாய்.தீ விபத்துக்கான காரணம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.