திருநெல்வேலி:நெல்லை
மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாத்துரையின் 104வது பிறந்த
நாளை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிகள் நெல்லை மதிதா
இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்
ஜார்ஜ் கோசல் தலைமை வகித்தார். மாநகர பொறுப்பாளர் அப்துல்வகாப் முன்னிலை
வகித்தார். மாநகர இளைஞரணி அமைப்பாளர் எஸ்.வி.சுரேஷ் வரவேற்றார். மாநில
திமுக இளைஞரணி துணைச் செயலாளர் சம்பத், பேச்சுப் போட்டியை துவக்கிவைத்து
பேசுகையில், "அண்ணாத்துரை பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்படும் பேச்சுப்
போட்டிகளில் நெல்லை மாவட்ட மாணவ, மாணவிகள் முதலிடத்தை பிடித்து வருவது
பெருமைக்குரியது. வரும் 24, 25ம் தேதிகளில் தஞ்சாவூரில் நடைபெறவுள்ள
இறுதிப் போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரமும்,
இரண்டாம் பரிசாக ரூ.15 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரமும் திமுக
பொருளாளர் ஸ்டாலினால் வழங்கப்படும்.
எனவே இந்த ஆண்டும் நெல்லை மாவட்ட
மாணவ, மாணவிகள் முதலிடத்தை பிடிக்கவேண்டும். நெல்லை மாவட்டத்தில் இளைஞரணி
மாநில மாநாடு சிறப்பாக நடந்தது. அதே போல் பகுத்தறிவு பாசறை மாநாடு
நெல்லையில் இன்னும் ஒரிரு மாதங்களில் நடத்தப்படும் என்றார்'.பேச்சுப்
போட்டியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியின்
நடுவராக தலைமைக் கழகம் தாமரை பாரதி செயல்பட்டார்.இதில் மாவட்ட திமுக
செயலாளர் கருப்பசாமிப்பாண்டியன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள்
அமைச்சர் எம்.எல்.ஏ., மைதீன்கான், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன்,
தணிக்கை குழு உறுப்பினர் சுப.சீத்தாராமன், தொண்டரணி துணைச் செயலாளர் ஆவின்
ஆறுமுகம், முன்னாள் இளைஞரணி அமைப்பளார் முத்துராமலிங்கம், மகளிரணி துணைச்
செயலாளர் ராஜம்ஜான், சீனியம்மாள், கிரிஜா, இணைஞரணி துணை அமைப்பாளர்கள்
கருபுபசாமி, கந்தசாமி, ராபர்ட் செல்லையா, யு.எஸ்.டி.சீனிவாசன்,
கோமதிநாயகம், வக்கீல்கள் துரை, ஜோதிமுருகன், சரவணன், உலகநாதன், சுரேஷ்,
செல்வம், கவுன்சிலர் பாலன் (எ) ராஜா, முத்தையா, மூர்த்தி, சங்கர்நகர் டவுன்
பஞ்., தலைவர் பேச்சிப்பாண்டியன், சிவனுப்பாண்டியன், ப.ரா.வெங்கடேசன் உட்பட
பலர் கலந்து கொண்டனர்.இதில் முதல் பரிசை பாளை., கிறிஸ்துராஜா பள்ளி 9ம்
வகுப்பு மாணவன் இசக்கிராஜ், பாளை., இக்னேஷியஸ் கான்வென்ட் பள்ளி 11ம்
வகுப்பு மாணவி முத்துகுமாரி இரண்டாம் பரிசிற்கும், வி.கே.புரம் அமலி
மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவி கார்த்திகா மூன்றாம் பரிசுக்கும் தேர்வு
செய்யப்பட்டனர்.கவிதை ஒப்புவித்தல் போட்டியில் திசையன்விளை ஜெயராஜேஷ்
மெட்ரிக் பள்ளி 12ம் வகுப்பு மாணவி கீர்த்தனா முதல் பரிசிற்கும்,
வி.கே.புரம் அமலி மகளிர் மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவி டேவினா,
நல்லூர் மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவி
கற்பகவள்ளி மூன்றாம் பரிசுக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.கட்டுரைப்
போட்டியில் வி.கே.புரம் அமலி மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவி பிலோமின்
ஏஞ்சல் முதல் பரிசிற்கும், சங்கரன்கோவில் வையாபுரி வித்யலாலயா மெட்ரிக்
பள்ளி 11ம் வகுப்பு மாணவி சங்கரேஸ்வரி இரண்டாவது பரிசிற்கும், அரசு
மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவி முபினாபேகம் மூன்றாம் பரிசிற்கும்
தேர்வு செய்யப்பட்டனர். ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக பேசியவர்கள் ஆறுதல்
பரிசிற்கும் தேர்வு செய்யப்பட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.