Sri Lanka issue: Karunanidhi Stalin competition fielded Kanimozhi | இலங்கை விவகாரம்:ஸ்டாலினுக்கு போட்டியாக கனிமொழியை களமிறக்கிய கருணாநிதி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இலங்கை விவகாரம்:ஸ்டாலினுக்கு போட்டியாக கனிமொழியை களமிறக்கிய கருணாநிதி

Added : நவ 04, 2012 | கருத்துகள் (79)
Advertisement
 இலங்கை விவகாரம்:ஸ்டாலினுக்கு போட்டியாக கனிமொழியை களமிறக்கிய கருணாநிதி

இலங்கை தமிழர்களுக்கு, அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை ஐ.நா., சபையில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் ஒப்படைத்த வேளையில், டில்லியில், பிரதமர் மன்மோகன் சிங்கை ராஜ்யசபா எம்.பி., கனிமொழி சந்தித்து, ஐ.நா., சபை மனித உரிமை கமிஷனில் இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும் என்ற கோரிக்கை கடிதத்தை வழங்கினார்.

ஸ்டாலின் அமெரிக்கா சென்று வந்த பின், பிரதமரை, கனிமொழி சந்தித்திருக்கலாம், ஐ.நா., சபையில், ஸ்டாலின் மனு கொடுக்கும் போது, கனிமொழி, பிரதமரிடம் கடிதம் கொடுப்பது, போட்டா போட்டியாக இருக்கிறது என, ஸ்டாலின் ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல, இலங்கை தமிழர்கள் பிரச்னைக்காக ஐ.நா., சபையில் ஸ்டாலினும், பிரதமர் அலுவலகத்தில் கனிமொழியும் வலியுறுத்துவது கட்சிக்கும், தனக்கும் கிடைக்கும் அரசியல் லாபம் என, கருணாநிதி கருதுகிறார்.

தி.மு.க., ஆட்சியில் இலங்கையில் போர் நடந்தது. அப்போது, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, மத்திய அரசை வலியுறுத்தி, தி.மு.க., நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை தமிழ் ஆர்வலர்கள் எழுப்பினர்.அந்த குற்றச்சாட்டை களைவதற்கும், இலங்கை தமிழர்களுக்காக ஐ.நா., சபையில் குரல் கொடுத்த முதல் அரசியல் கட்சி தி.மு.க., என்பதை வரலாற்றில் பதிவு செய்து கொள்ளவும் கருணாநிதி விரும்புகிறார். அ@த @நரத்தில், ஸ்டாலினை தொடர்ந்து முன்னிலைப்படுத்துவதை தவிர்க்க, கனிமொழியை களமிறக்கி விட்டுள்ளார்.
இது குறித்து தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:கனிமொழியும் தவிர்க்க முடியாத சக்தியாக தி.மு.க.,வில் வலம் வருகிறார். எனவே, அவரை ஏன் பகைக்க வேண்டும் என, சில மாவட்டச் செயலர்கள் கருதுகின்றனர். அதனால், தான் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையில் நிர்வாகிகளை நியமிக்க, கட்சியினரை மாவட்டச் செயலர்கள் சிபாரிசு செய்து வருகின்றனர்.

இருப்பினும், கட்சியில், ஸ்டாலினுக்கு மட்டும் முக்கியத்துவம் வழங்குவது மற்ற வாரி”கள் விரும்ப மாட்டார்கள் என்பதை கருணாநிதி உணர்ந்துள்ளார். ஸ்டாலின் - அழகிரி என்றிருந்த இரு அணிகளில், அழகிரி, சமீபகாலமாக ஒதுங்கி வருவதால், அந்த இடத்தில் கனிமொழியை நிறுத்த விரும்புகிறார்.

அதன் காரணமாகவே, ஸ்டாலினை ஐ.நா.,வுக்கு அனுப்பி வைத்து விட்டு, டில்லியில் பிரதமரை, கனிமொழியை சந்திக்க வைத்துள்ளார். ஒருவர் உலக நாடுகளை சுற்றி வந்து நிற்க, மற்றொருவர் உள்ளூரிலேயே வலியுறுத்த, புதுவிதமான திருவிளையாடலை கருணாநிதி நடத்தியுள்ளார்.இவ்வாறு தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Guru - Batam,இந்தோனேசியா
12-ஜன-201307:17:02 IST Report Abuse
Guru ஒரு மொமளாட்டம் நடக்குது ரொம்ப புதுமையாக இருக்குது...
Rate this:
Share this comment
Cancel
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
05-நவ-201217:28:54 IST Report Abuse
dori dori domakku dori இது என்ன உட்டுகுள்ளராயே ஊடு கட்டற பழக்கம் ???
Rate this:
Share this comment
Cancel
05-நவ-201213:57:15 IST Report Abuse
லார்டு லபக்கு தாஸ் என்ற தமிழ் அருவி பனியன்... ராஜபக்செவை சந்தித்து மனு கொடுக்க அழகிரியை அனுப்பி இருக்கலாம்..
Rate this:
Share this comment
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
05-நவ-201216:30:52 IST Report Abuse
s.maria alphonse pandianஅந்த மனு அரசின் சார்பாக கொடுக்கப்படவில்லை..கட்சியின் சார்பாக...எனவே அமைச்சர் அழகிரி செல்லாதது சரியே...
Rate this:
Share this comment
Cancel
shanmugam suresh - Singapore,சிங்கப்பூர்
05-நவ-201213:38:30 IST Report Abuse
shanmugam suresh ஆட்சியில் இருந்தபோது, இலங்கை தமிழர்கள் வசதியாக வாழ்வதால் அப்போது பேசவில்லை, தப்பு தப்பு நாங்கள் தமிழக மக்களை வசதியாக வாழவைக்க முயற்சி செய்ததால் இலங்கை தமிழரை பற்றி கவலைகொள்ளவில்லை. அதற்க்கா உங்களை மறந்துவிட்டோம் என்று நினைக்கவேண்டாம், உங்கள் நிம்மதி எங்கள் கையில். அதற்காக பெரும்முயற்சி எடுத்துள்ளோம், கூடிய விரைவில் ராசபக்சே கோபம் கொள்ளாமலா இருப்பார், இல்லை நாங்கள்தான் விடுவோமா? சிறை செல்லத்தயார் எங்கள் அமைச்சர் முதல், கட்சியில் இல்லாத என் பேரன் வரை சிறைக்கு சென்று திரும்பி உள்ளார்கள், பேரன் கூடிய விரைவில் செல்வதாக கேள்வி அதற்காக நிலபகரிப்பு, உழல் என்னும் புனை பெயர் சூட்டி உள்ளார்கள். கவலை கொள்ளாதீர்கள், அடுத்தமுறை ஆட்சிக்கு வந்தால் குழந்தை படை ஒன்று உருவாக்கி அதற்க்கு துறை தயாநிதியை தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுத்து வட மண்டல் செயலாளராக உதயை நியமித்து ஒரே மனதுடன் பணியாற்ற புறப்படுவோம். நான் உழலுக்கு பருப்பு சீய், நெருப்பு. என்ன அங்கே சிரிப்பு அதிமுக சொம்புகளா? என்னை குடும்பத்துக்க கட்சி நடத்துகிறேன் என்றார்கள், என் மகன் பேரன் அனைவரும் என்னை போன்று மிகுந்த திறமையாக காணபடுகிறார்கள், அதற்குண்டான அனைத்து வளங்களை பெற்று திகழ்கிறார்கள்..... ஏதோ கொஞ்சம் நேரம் வேலையில்லாம இருந்தேன் ஏதேதோ எழுத தோனுச்சு ...இனி தலைவர் பார்த்துக்குவார்....
Rate this:
Share this comment
Cancel
Ambaiyaar@raja - Nellai to chennai ,இந்தியா
05-நவ-201213:22:44 IST Report Abuse
Ambaiyaar@raja தி மு க தொடங்கப்பட்டபோது 5 குழுவில் அண்ணா, evk சம்பத், நெடுஞ்செழியன், மதியழகன், nv நடராஜன், இப்போது உள்ள குடும்ப கட்சியில் கருணா, சுடாலின், அழகிரி, கனிமொழி, தயாநிதி, அதன் பின்பு கூட தமிழரசு, கயல்விழி, உதயநிதி, தயாநிதி அழகிரி, அருள் நிதி, என்று 10 பேர் குழுவுக்கு ஆட்கள் தயாராக இருப்பதால் அதன் மேலும் இன்னும் நிறைய குடும்ப உறுபினர்கள் உள்ளார்கள் எனவே அந்த குழுவை கருணா இன்னும் 20 , 30 என அதிகரிக்கலாம் அப்படி செய்தால் கூட மரியா போன்ற சொம்புகள் அதையும் வாழ்த்தி பாடல் இங்கு பாடும்.
Rate this:
Share this comment
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
05-நவ-201216:36:06 IST Report Abuse
s.maria alphonse pandianஆலமரத்திற்கு பல விழுதுகள் வந்து தாங்குவது அதன் சிறப்பு...கலைஞருக்கு விழுதாக பலர்.......
Rate this:
Share this comment
sankar - trichy,இந்தியா
06-நவ-201200:34:05 IST Report Abuse
sankarஅந்த மரமே ஒரு வீணா போன மரம் . அதை இந்த கேடு கெட்ட விழுதுகள் தாங்கினால் என்ன தாங்கா விட்டால் என்ன...
Rate this:
Share this comment
Cancel
Theepori Thirumugam - Kundangulam,இந்தியா
05-நவ-201213:12:51 IST Report Abuse
Theepori Thirumugam தாத்த rocks
Rate this:
Share this comment
Cancel
N.FEROZKHAN - cheras,மலேஷியா
05-நவ-201213:07:15 IST Report Abuse
N.FEROZKHAN ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல, இலங்கை தமிழர்கள் பிரச்னைக்காக ஐ.நா., சபையில் ஸ்டாலினும், பிரதமர் அலுவலகத்தில் கனிமொழியும் வலியுறுத்துவது கட்சிக்கும், தனக்கும் கிடைக்கும் அரசியல் லாபம் என, கருணாநிதி கருதுகிறார். இனி தி மு க வுக்கு பிடித்த சனி தொலையாது..///
Rate this:
Share this comment
Cancel
ANBE VAA J.P. - madurai,இந்தியா
05-நவ-201213:03:22 IST Report Abuse
ANBE VAA J.P. தமிழ் நாட்டில் தீபாவளி நேரத்தில் 16 மணி நேர மின்தடையால் வியாபாரிகள் ,தையல் தொழிலாளர்கள் , மற்றும் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழ் நாட்டில் ஒரு சாதியினர் தங்கள் குரு பூஜை ஊர்வலத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த தடவை, சட்டத்தை மீறி ,அதிகமாக கலவரங்களை ஏற்படுத்தி, தெற்கே, கிழக்கே பல மாவட்டங்களை இன்றும் ஸ்தம்பிக்க வைத்துள்ளார்கள். ஒரு இள வயது S .I .படுகொலை செய்ய பட்டுள்ளார். தீபாவளி நேரத்தில் இது போல சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு பல தரப்பு மக்களை பதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது ,இதை கண்டிக்க முடியாமல் தினமலர் ஆளும் கட்சியினரை சந்தோஷ படுத்த இது போன்ற தேவை இல்லாத உள்கட்சி குழப்பத்தை வெளியிடுகின்றது. இவை எந்த தரப்பினருக்கும் பயன் இல்லாத செய்தி
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
05-நவ-201212:53:44 IST Report Abuse
Pugazh V எல் டி டி இ இயக்கத்தை, தடை செய்யப்பட இயக்கமாக அறிவிக்க பாடு பட்டு, அந்த இயக்கத்தை தடை செய்து,அதையும் கொண்டாடிய ஜெயலலிதாவை விட தி மு க தலைவர் ஒன்றும் பாதகம் செய்து விடவில்லை. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா சட்ட மன்றத்தில் இலங்கை அரசை எதிர்த்து ஏதோ தீர்மானம் போட்டார். அந்த தீர்மானத்தின் ஜெராக்ஸ் காப்பியைக் கூட மத்திய அரசுக்குக் கூட அனுப்பவில்லை. தி மு க ஒரு தீர்மானம் நிறைவேற்றி அதை பிரதமர் மற்றும் ஐ நா சபை வரை கொண்டு சேர்ப்பது கண்டு பொறாமை கொண்டு பேசுபவர்கள் தான் அதிகம். இலங்கை தமிழருக்கு ௮ தி மு க தலைவி செய்தது தான் பெரும் துரோகம் என்பதை மறைக்க முடியாது - மறுக்கவும் முடியாது.
Rate this:
Share this comment
Cancel
Tamilarasu Rajakkili - jeddah,சவுதி அரேபியா
05-நவ-201212:11:42 IST Report Abuse
Tamilarasu Rajakkili சபாஷ்..கோடு போட்டால் ரோடு போடுவது போல்.. செய்திகள் வெளி வந்த அதே நேரம்.. மின் வெட்டின் நிலை.. டெங்குவின் நிலைகள் போடாமல் இருப்பது மனித நேயத்தின் மாண்பே என்று தான் நினைக்க தோன்றுகிறது...காலம் கனியும் வரை காத்திருக்க வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை