வைர விழாவுக்கு ஜனாதிபதி வருகை:கூட்டணி மாற்றத்திற்கு அச்சாரம்?
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று, இம்மாதம், 30ம் தேதி, சட்டசபையின் வைர விழா நிகழ்ச்சியில் பங்கேற்க, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இசைவு தெரிவித்துள்ளார். அவரது வருகை, தமிழக அரசியலில் கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

150வது ஆண்டு விழா:ஜனாதிபதி தேர்தலில், பிரணாப் முகர்ஜிக்கு எதிராக, சங்மாவை வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதனால், சென்னை ஐகோர்ட் 150வது ஆண்டு விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்றால், அந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்க மாட்டார் என, கட்சித் தலைவர்கள் சிலர் கருதினர்.ஆனால், அந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்றார். கவர்னர் மாளிகையில், பிரணாப் முகர்ஜியை முதல்வர் ஜெயலலிதா சந்தித்து பேசினார்.

அப்போது காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும், முதல்வருக்கும் இருந்த தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை நீக்கி, இருவரின் மத்தியில் ஒற்றுமையை உருவாக்கும் முயற்சியில் பிரணாப் முகர்ஜி ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மத்திய அமைச்சரவை விரிவாக்கத்திற்கு முன், பிரதமர் மன்மோகன் சிங், சோனியா, ராகுல் ஆகியோர், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அவரது ஆலோசனையின் அடிப்படையில் தான், புதிய அமைச்சரவையில் ராகுல் பொறுப்பேற்கவில்லை.
"தமிழகத்தில் தி.மு.க.,வை மட்டும் நம்பி இருக்கக் கூடாது. மம்தா பானர்ஜியை போல, கருணாநிதியும் அணி மாறுவதற்கு வழி உள்ளது. எனவே, மாநில கட்சிகளின் தலைவர்களிடம், ஒருமித்த கருத்துடன் புதிய கூட்டணி உருவாக்க வேண்டும்' என, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கன@வ, தி.மு.க., - காங்கிரஸ் இடை@யயான உறவு Œரியாக இல்லை. ராஜிவ் படுகொலைக்கு காரணமான, விடுதலை புலிகளின் ஆதரவாளர்களை வைத்து, "டெசோ' மாநாடு நடத்தியதும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் கொண்டு செல்லாமல், கட்சி ரீதியில் ஐ.நா., சபைக்கு கொண்டு சென்றதை, மத்திய அரசு விரும்பவில்லை.


உதாசீனம்:

அமைச்சரவை விரிவாக்கத்தில், தி.மு.க., இடம் பெற வேண்டும் என, மத்திய அமைச்சர் நாராயணசாமி, தி.மு.க., தலைவர் கருணாநிதியை மூன்று முறை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். ஆனால், கூடுதலாக இடம் பெறப் போவதில்லை என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியதால், தங்களை உதாசீனப்படுத்துவதாக காங்கிரஸ் கருதுகிறது.இந்நிலையில், தி.மு.க.,வுக்கு செக் வைக்கும் வகையில், சட்டசபை வைர விழாவில் பிரணாப் முகர்ஜி பங்கேற்கிறார் என்றும், அவரது வருகை, லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணிக்கு அச்சாரமாகவும் அமைய வாய்ப்புள்ளது என, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


விரிசல் அதிகம்:

இது குறித்து, காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:தி.மு.க., - காங்கிரஸ் உறவில் நாளுக்கு நாள் விரிசல் தான் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. தி.மு.க., செயற்குழுவில், காங்கிரஸ் கூட்டணி வேண்டாம் என, தெரிவிக்கப்பட்டது.தி.மு.க., அப்படியொரு முடிவு எடுத்தால், நாங்கள் அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெறுவோம் என, தமிழக காங்கிரசாரும் பதிலடி கொடுத்தனர்.
லோக்சபா தேர்தலை ஒட்டி, தி.மு.க., அணியில், தே.மு.தி.க., இடம் பெறுமானால், அ.தி.மு.க., அணியில் காங்கிரஸ் இடம் பெறும். தே.மு.தி.க.,வின் 10 சதவீத ஓட்டுகளை, காங்கிரஸ் கட்சி ஈடுகட்டும். அ.தி.மு.க., அணியில் காங்கிரஸ் இணைந்தால், அதை இயற்கையான கூட்டணியாக இரு கட்சிகளின் தொண்டர்களும் கருதுவர்.

தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு தீர்வு காண, மத்திய அரசுடன் கைகோர்க்க, அ.தி.மு.க., முன் வர வேண்டும். கூடங்குளம் அணு உலை திறப்பதில் காங்கிரசுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் ஒருமித்த கருத்துக்கள் தான் உள்ளன. அ.தி.மு.க., அணியில், காங்கிரஸ் இடம் பெற வேண்டும் என்ற எண்ண ஓட்டம், தமிழக காங்கிரசில் உள்ள அனைத்து கோஷ்டித் தலைவர்களுக்கும் உள்ளது. எனவே, வைர விழாவிற்கு பிரணாப் முகர்ஜி வருவதன் மூலம், தமிழக அரசியலில், கூட்டணி மாற்றம் நிகழ அச்சாரமாக அமைய வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (115)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
wrty - mkl,அல்ஜீரியா
05-நவ-201217:28:11 IST Report Abuse
wrty beautiful சீக்கிரம் ப்ளீஸ் ...
Rate this:
Share this comment
Cancel
King of Kings - Usilampatti,இந்தியா
05-நவ-201217:18:14 IST Report Abuse
King of Kings ஜனாதிபதிய இப்பயாவது நிம்மதியா வேலை () பாக்க விடுங்கப்பா.நாட்டாமை வேலை பாக்கவச்சு அந்த பதவியவே கேவலப்படுத்துறாங்க.இந்த நாட்டோட தலைஎழுத்து இதுதான்.
Rate this:
Share this comment
Cancel
Theepori Thirumugam - Kundangulam,இந்தியா
05-நவ-201217:03:37 IST Report Abuse
Theepori Thirumugam இவரு president of india வா இல்ல president of congress ஆ? நாம ஏன் இவரு மேல ஒரு case போடகூடாது?
Rate this:
Share this comment
Cancel
S. ரெகுநாதன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
05-நவ-201216:23:58 IST Report Abuse
S. ரெகுநாதன் முதல்வர் பெரிய அரசியல் சாணக்கியர்...மூழ்கும் கப்பலில் (காங்) முத்தெடுக்க முயலமாட்டார்...அதிமுக மின் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு கண்டால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளை இலகுவாக வெல்லலாம்..
Rate this:
Share this comment
Cancel
anbu - Riyadh,சவுதி அரேபியா
05-நவ-201215:49:40 IST Report Abuse
anbu மக்களுக்கு தேவை இப்போது தடை இல்லாத மிசாரம் அரசியல் விளையாட்டு அல்ல அதுதான் பார்த்துக்க்கொண்டே இருக்கோமே
Rate this:
Share this comment
Cancel
Theepori Thirumugam - Kundangulam,இந்தியா
05-நவ-201215:33:52 IST Report Abuse
Theepori Thirumugam இவரு president of india வா இல்ல president of congress ஆ? நாம ஏன் இவரு மேல ஒரு case போடகூடாது ?
Rate this:
Share this comment
Cancel
mugavai kumar - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
05-நவ-201215:26:02 IST Report Abuse
mugavai kumar வார்த்தைக்கு வார்த்தைக்கு அம்மா அம்மா என்று சொல்லுறேகளே அது யாரு பெத்தவங்களா இல்ல மததவங்களா பா ? போயி புள்ள குட்டியே படிக்க வைங்கப்பா இவங்க எப்பவவுமே இப்படிதான்
Rate this:
Share this comment
Balasubramanian Ramamoorthy - Mumbai,இந்தியா
06-நவ-201200:13:15 IST Report Abuse
Balasubramanian Ramamoorthyமுகவை மூஞ்சிலே கைய வைக்கனும்பா அம்மா என்றால் பெத்தவங்களைதான் கூப்பிடனும் என்று இல்லைடா மரமண்டையே நம்மளவிட வயசுல மூத்தவங்களைகூட கூப்பிடலாம் அம்மா என்றால் அன்பு தெரிஞ்சிக்கோ அறிவுகொழுந்தே உனக்கு சொட்ட்ரால் அடித்தபிண்டங்கலே, உடன்பிறப்பே உளுத்தம்பருப்பேன்னாதான் பிடிக்குமோ...
Rate this:
Share this comment
Cancel
Sahayam - cHENNAI,இந்தியா
05-நவ-201214:33:30 IST Report Abuse
Sahayam தினமலருக்கு இந்த கூடணி அமைய கூடாது. அதனால சும்மா சும்மா குத்தி கொண்டு இருக்குது போல. இந்த கூட்டணி கண்டிப்பாக அமைய வேண்டூம். கண்டிப்பாக அம்மா MGR வழிநடக்க வேண்டும். அதுதான் என்னைப்போல் நிறைய தமிழ் மக்களின் விருப்பம்.
Rate this:
Share this comment
Cancel
rajaguru - chennai,இந்தியா
05-நவ-201214:07:41 IST Report Abuse
rajaguru அம்மாவும் அம்மாவும் கூட்டணி சேர்ந்தால்தான் ஊழலற்ற மூன்றாவது கூட்டணி ஆட்சி அமைக்க முடியும். நல்ல முடிவு. வரவேற்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
sekar - pudukkottai,இந்தியா
05-நவ-201214:05:48 IST Report Abuse
sekar ஊழல் புடித்த மக்களை வாட்டிவதைக்கும் கட்சியுடன்( மத்திய ) அம்மா கூட்டணி சேரகூடாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்