புதுடில்லி:காமன்வெல்த் விளையாட்டு போட்டி தொடர்பான திட்டங்களை நிறைவேற்றியதில், அரசின் பல்வேறு துறைகளால், 1,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதை, மத்திய லஞ்ச ஊழல் மற்றும் கண்காணிப்பு ஆணையம் கண்டுபிடித்துள்ளது.
ஊழல்:டில்லியில், 2010ல், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில், மிகப் பெரிய அளவில்ஊழல் நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, இதுகுறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. போட்டி ஒருங்கிணைப்பு குழு தலைவராக இருந்த, காங்கிரஸ் கட்சி எம்.பி., சுரேஷ் கல்மாடி மற்றும் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
சுரேஷ் கல்மாடி, தற்போது ஜாமினில் உள்ளார். இந்நிலையில், காமன்வெல்த் விளை யாட்டு போட்டி ஏற்பாடுகளில், வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக, திடுக்கிடும் தகவல் வெளியாகிஉள்ளது. இதுகுறித்து, மத்திய லஞ்ச ஊழல் மற்றும் கண்காணிப்பு ஆணையர், ஸ்ரீகுமார் கூறியதாவது:காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஏற்பாடுகளில் நிதி முறைகேடு, வரி ஏய்ப்பு உள்ளிட்ட விதிமுறை மீறல்கள் நடந்துள்ளனவான என்பதை கண்டறிய, வரித் துறை மற்றும் அரசின் மற்ற விசாரணை அமைப்புகளை கொண்ட, பல் நோக்கு விசாரணை அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
விசாரிப்பு:இதில், காமன்வெல்த் போட்டியை விளம்பரப்படுத்த, 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து விசாரிக்கப்பட்டது. இதற்குரிய வரி செலுத்தப்படாதது கண்டுபிடிக்கப்பட்டது.குறிப்பாக, வருமான வரி, சேவை வரி மதிப்பு கூடுதல் வரி உள்ளிட்டவை செலுத்தப்படாதது தெரியவந்தது. ஒட்டு மொத்தமாக, 1,000 கோடி ரூபாய்க்கு, வரி ஏய்ப்பு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. அரசின் பல்வேறு துறைகள் தான், இந்த வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளன. சம்பந்தபட்ட துறைகளுக்கு, இது தொடர்பாக ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
வழக்குகள்:இது தொடர்பான விரிவான விசாரணை அறிக்கை, விரைவில் தாக்கல் செய்யப்படும். காமன்வெல்த் போட்டிகளில் நடந்த ஊழல் தொடர்பாக, 53 வழக்குகள் குறித்து விசாரித்து வருகிறோம்.இதில், உள்ளாட்சி நிர்வாகம் உள்ளிட்ட, அரசின் பல்வேறு துறைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு எதிராக விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு ஸ்ரீகுமார் கூறினார்.இதற்கிடையே, நேரடி அன்னிய முதலீட்டின் மூலமாக இந்தியாவுக்கு வரும் நிதி, முறைகேடாக பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.இதையடுத்து கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி, மத்திய கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சகம், நிதி அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.