கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுங்கள் : தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., புகார்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: ""பத்திரிகையாளர் பாலு கொடுத்த, பொய் புகார் மீது, என்னை கைது செய்தீர்கள். கொலை மிரட்டல் குறித்து, நான் கொடுத்த புகார் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை,'' எனக்கூறி, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., போலீஸ் கமிஷனரகத்தில் புகார் செய்தார்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், சென்ற மாதம், 27ம் தேதி, விமானம் மூலம், மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்றார். அப்போது, செய்தியாளர் பாலு என்பவருக்கும், விஜயகாத்துக்குமிடையே தகராறு ஏற்பட்டது.
தன்னைத் தாக்கியதாக, பாலு கொடுத்த புகாரின்பேரில், விஜயகாந்த், எம்.எல்.ஏ., அனகை முருகேசன் மீதும், மீனம்பாக்கம் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. முருகேசன் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியே வந்துள்ளார். இவர், நேற்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனரகத்துக்கு, வழக்கறிஞர்களுடன் சென்றார்.
போலீஸ் கூடுதல் கமிஷனரைச் சந்தித்து, புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். பின், நிருபர்களின் அவர் கூறியதாவது:
சம்பவத்தன்று, மதுரை செல்வதற்காக கட்சித் தலைவர் விஜயகாந்த் விமான நிலையம் வந்தார். அப்போது, குள்ளமாகவும், கருப்பாகவும் இருந்த, 60 வயது மதிக்கத்தக்க, மர்ம நபர் வழி மறித்தார். விஜயகாந்தின் கையைப் பிடித்து இழுத்தார். "நீ யார்' என, கேட்டபோது, மிரட்டும் தொனியில் கத்தினார். விஜயகாந்திடம் வீண் வம்பிழுத்து, அடிக்க வந்தார். தடுத்தபோது, "உங்க தலைவரையும், உங்களையும் கொல்லாமல் விடமாட்டேன்' என, மிரட்டினார்.
மிரட்டியவர் பற்றி விசாரித்தபோது, அனகாபுத்தூரைச் சேர்ந்த பாலு என, தெரிந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, 27ம் தேதி, மீனம்பாக்கம் விமான நிலைய ஆய்வாளிடம் புகார் கொடுத்தபோது, வாங்க மறுத்தார். எனவே, அன்றே, பதிவு தபாலில் அனுப்பினேன். இதைத் தெரிந்து கொண்ட பாலு, விஜயகாந்த் மீதும், என் மீதும் பொய்யான புகாரைக் கொடுத்துள்ளார். இதில், என்னை கைது செய்தனர். நான், ஜாமீனில் வெளியில் வந்துள்ளேன். நான் கொடுத்த புகாரை ஏற்று, கொலை மிரட்டல் விடுத்த பாலு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
06-நவ-201201:50:31 IST Report Abuse
தமிழ்வேல் இவர் கூறுவதிலும் ஞாயம் உள்ளது...அவரது புகாரை வைத்து இவரை கைது செய்யும்போது எதனால் இவரது புகாரை எடுத்துக்கொள்ளக்கூடாது ?
Rate this:
Share this comment
Manu needhi Cholan - Tamilnadu secretariat,இந்தியா
07-நவ-201201:49:46 IST Report Abuse
Manu needhi CholanA D M K மற்றும் D M K இரண்டும் நாட்டை குட்டிசுவராக்கி அதில் குளிர் காய்கின்ற கட்சிகள் என்று மக்களுக்கு தெரியும் வரை இவர்கள் இப்படிதான் இருப்பார்கள் .......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்