Advertisement
தேசிய அடையாள அட்டைப்பணி தீவிரம் : மார்ச்சில் நிறைவு செய்ய உத்தரவு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2012,22:49 IST

ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தை, "ஸ்மார்ட் கார்டு' மூலம் கொண்டு வருவதற்கான முன்னேற்பாடுகள், மாவட்டம் வாரியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மார்ச் மாதத்துக்குள் பணியை நிறைவு செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள, 32 மாவட்டங்களில், எட்டு கோடி மக்கள் தொகை உள்ளது. 10 ஆண்டுக்கு, ஒருமுறை எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011ம் ஆண்டு நடத்தப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவங்கள் அனைத்தும், மத்திய அரசின் உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அவை, மாநில வாரியாக, பொதுமக்களின் விவரங்கள், கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழக அரசு, ரேஷன் கார்டு முறையை மாற்றியமைக்க, இரண்டு ஆண்டுகளாக ஆலோசித்து வருகிறது. தேசிய மக்கள் தொகை பதிவேடு முறையை அடிப்படையாகக் கொண்டு, "ஸ்மார்ட் கார்டு' மூலம் ரேஷன் பொருள் வினியோகத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. தற்போது, தேசிய அடையாள அட்டைக்கான பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிவடைந்தவுடன், அதைக் கொண்டு, "ஸ்மார்ட் கார்டு' தயாரிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு தனியார் நிறுவனம், இந்த பணியை செய்து வருகிறது. ஒவ்வொரு தாலுகாவிலும், போட்டோ, கைரேகை, கருவிழி பதிவு செய்வதற்கான முகாம், வருவாய்த் துறையால் அறிவிக்கப்படும். அந்த நாளில், மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, கணக்கெடுப்பாளர்கள் வழங்கிய ரசீதை எடுத்துச் செல்ல வேண்டும். அந்த ரசீதுடன் சேர்த்து, தேசிய அடையாள அட்டைக்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். ஐந்து வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் செல்ல வேண்டும். பதிவு முடிந்தவுடன், சம்மந்தப்பட்ட படிவம் முத்திரையிடப்பட்டு, தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படும். மார்ச் மாதத்துக்குள், அடையாள அட்டை பதிவு பணியை முடித்து, அரசிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (3)
srsamiappan - Chennai,இந்தியா
09-நவ-201200:47:34 IST Report Abuse
srsamiappan Sir, I collected slip, (sping more than 2-3hrs in the que since morning) from T.Nagar post office for taking photograph and submit the application for national ID card.Self and my wife went to the post office on particular day, found the particular counter closed and nobody was there. Enquired from post office, they said, the national ID work stopped without any information. This happ few months back. After that I didn&39t go there as my date already expired.This way our government is functioning.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ok yes - Al-Ahsa,சவுதி அரேபியா
06-நவ-201209:21:27 IST Report Abuse
ok yes வெளிநாடுகளில் வசிப்பவர்கள் அல்லது வேலை செய்பவர்கள் எப்படி தேசிய அடையாள அட்டையயைப் பெறுவது? நடுவணரசும் மாநில அரசும் எங்களைப்பற்றி ஒருகாலும் சிந்திப்பதே இல்லை. ஆனால், எங்களது வருவாயை மட்டும் அனுபவித்துக்கொள்கிறது. நாங்களும் இந்தியர்கள் என்பதை இவ்வரசுகள் எப்பொழுதுதான் ஏற்றுக்கொள்ளப்போகிறதோ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Vaishnavi.Ne - Chennai,இந்தியா
06-நவ-201207:53:38 IST Report Abuse
Vaishnavi.Ne சென்னையில் பட்டாபிராம்,ஆவடி திருமுல்லைவாயல், அம்பத்தூர், பாடி, கொரட்டூர் பகுதியில் ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு இதுவரை நடைபெறவில்லை.எப்படி எப்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு ரசீது பெறுவது?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.