சென்னை: "கடந்த ஆண்டு நவம்பரில், பஸ் கட்டணத்தை உயர்த்திய முதல்வர், தற்போது மக்கள் அதை மறந்திருப்பர் என்ற எண்ணத்தோடு, பஸ் கட்டணத்தை உயர்த்தப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:பசும்போன் தேவர் விழாவை ஒட்டி, முன் எச்சரிக்கையாக இல்லாதது, அரசுத் துறை அலட்சியம், இவற்றின் காரணமாக, மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பரில் பஸ் கட்டணத்தை உயர்த்திய முதல்வர், தற்போது மக்கள் அதை மறந்திருப்பர் என்ற எண்ணத்தோடு, பஸ் கட்டணத்தை உயர்த்தப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.
ஏமாறுவோர் இருந்தால், ஏமாற்றுவோர் இருக்கத்தானே செய்வர். தமிழகத்தில், மின்வெட்டு நிலைமையை, மூன்றே மாதங்களில் சீர் செய்வேன் என, முதல்வர் வாக்குறுதி கொடுத்ததற்கான ஆதாரங்களை நிரூபித்தால், முதல்வர், அரசியலில் இருந்து விலகத் தயாரா என, ராமதாஸ் கேட்டிருக்கிறார். நான் அவ்வாறு, கடினமாகக் கேட்க விரும்பவில்லை.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
எப்போதும் எல்லோரையும் ஏமாற்ற முடியாது - லட்சத்தில் ஒரு வரி - கல்வெட்டில் செதுக்கப்படவேண்டிய ஒன்று - ஏன் அவர் சிலையின் கீழே கூட பொறிக்க வேண்டிய சொற்கள். ஜனங்களை இனி எங்களாலும் ஏமாற்ற முடியாது என்பதை மறைமுகமாக ஒப்புக்கொண்டுவிட்டார். இனி அவர் (புத்த) ஞானி தான் அனுபவம் மற்றும் வயோதிகம் என்ற மரத்தின் கீழ்.
உச்சநீதிமன்ற வளாகத்திலேயே சட்டதுறைக்கும் காவல் துறைக்கும் யுத்தகளத்தையும் ரௌடிகள் ராஜ்யத்தையும் அரங்கேற்றியவருக்கு சட்ட ஒழுங்கை பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கு? சட்டம் ஒழுங்கு சீர்கேட்ட தனது கடந்த ஆட்சியில் திறமையற்ற நிர்வாகத்தினால் வளரும் சமுதாயத்தில் வன்முறைகளும், குற்றங்களும், கொள்ளைகளும் கொலைகளும் இருக்கதான் செய்யும் என்று தனது அம்மைச்சர் மூலம் அறிக்கை விட்டவர் தானே இந்த ஏமாற்றுக்காரர். அன்றே சொன்னார் பெரியார், யோகியன் வரான் சொம்பு எடுத்து உள்ள வை என்று. அண்ணாவுக்கு தான் விளங்கவில்லை.
வளரும் சமுதாயத்தில் குற்றங்களும் கொள்ளைகளும் கொலைகளும் பெருகும் இருக்கதான் செய்யும் என்று சட்ட ஒழுங்கு சீர்கெட்ட தாத்தாவின் போன ஆட்சியில் ஒரு அமைச்சர் அறிக்கை விட்டாரே...அதை எப்படி அவ்வளவு எளிதில் மறக்கமுடியுமா? விலைவாசி உயர்வுக்கு திநகரில் சென்று பாருங்கள் மக்கள் கூட்டம் கடைகளில் அலை மோதுகிறது என்று தாத்தாவும் மற்ற அமைச்சரும் மக்களை கிண்டல் செய்தார்களே அது எப்படி மறக்க இயலும்? காய்கறிகள் அதுவும் வெங்காயம் விலைவாசி மலையளவு உயர்வுக்கு பெரியாரை போய் கேளுங்கள் என்று மக்களை பார்த்து நகைதாரே இந்த ஏமாற்று வயோதிக கருணாநிதி. இதை எந்த காலத்திலும் தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்...இது எல்லாம் 2G முதல் கிரேநைட் வரை அடித்த கொள்ளையின் பண திமிரும் பதவி திமிரும் படும்பாடு...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.