மும்பை: மும்பையில், ஜெர்மனியைச் சேர்ந்த இளம் பெண், மர்ம நபரால், கத்தி முனையில் கற்பழிக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜெர்மனியைச் சேர்ந்த இளம் பெண், ஜூன் மாதம், ஜெர்மனியிலிருந்து மும்பை வந்து தன் தோழியுடன், பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில், வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார்.சில நாட்களுக்கு முன், இவரது தோழி, கேரளாவுக்கு சென்றுவிட்டார். இவர் மட்டும், வீட்டில் தனியாக இருந்தார். நேற்று அதிகாலையில், ஜன்னல் வழியாக இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், அந்த பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினான். சத்தம் போட்டால், கத்தியால் குத்தி விடுவதாக கூறிய அந்த நபர், முகத்தை கைக்குட்டையால் மறைத்திருந்தான்.இதன்பின், அந்த பெண்ணை, கத்தி முனையில் கற்பழித்து விட்டு, வீட்டில் இருந்த கேமரா, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து, தப்பி ஓடிவிட்டான்.அந்த பெண், போலீசுக்கு புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாந்த்ரா, பணக்காரர்கள் அதிகம் வசிக்கும், பலத்த பாதுகாப்பு உள்ள, இந்த பகுதியில் வெளிநாட்டு பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாதிக்கப்பட்ட பெண்ணின் நலன் கருதி, அவரின் பெயரை, போலீசார் வெளியிடவில்லை.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.